ஏழாவது ஊதியக்குழு, அரசு ஊழியர்களின் சம்பளம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. வரும் நாட்களில், அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய செய்தியை அரசு அறிவிக்கக்கூடும். கடந்த சில வருடங்களின் போக்கைப் பார்த்தால், ஹோலிக்கு முன்னதாகவே அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், மத்திய அரசு ஊழியர்கள் டிஏ அதிகரிப்பு பற்றிய அறிவிப்புக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா காலத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அகவிலைப்படி அதிகரிப்பு தடைபட்டது. எனினும், நிலைமை சற்று சீரானவுடன் அகவிலைப்படி மீதான முடக்கம் மீண்டும் நீக்கப்பட்டது. தற்போது ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வர வேண்டியுள்ளது. அதிகரிப்பு வந்தவுடன் ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும். 


அரசு அதிகரிப்பு தொடர்பான முடிவை எடுத்தால், மத்திய அரசு ஊழியர்கள் தவிர, ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படியில் நிவாரணம் கிடைக்கும். அடுத்த மாதம் முதல் தேதி அதாவது மார்ச் 1-ம் தேதி மோடி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், அரசு இது குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி! ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதி!


அகவிலைப்படி 4% அதிகரிக்கக்கூடும்


மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி பணவீக்கத்தின் அதிகரிப்பைப் பொறுத்தது. அதாவது பணவீக்கம் எவ்வளவு அதிகமாகிறதோ, அந்த அளவுக்கு அகவிலைப்படியிலும் அதிகரிப்பு இருக்கும். இதற்காக, தொழில்துறை தொழிலாளர்களின் சில்லறை பணவீக்க (CPI-IW) தரவு பெறப்படுகிறது. தற்போதைய தொழில்துறை ஊழியர்களின் சில்லறை பணவீக்கத்தின் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இந்த முறை டிஏ சுமார் 4.23% அதிகரிக்க வேண்டும். 


அனைத்திந்திய ரயில்வே பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சிவகோபால் மிஸ்ரா, தசமத்திற்குப் பிறகு வரும் எண்களை அரசாங்கம் கணக்கில் எடுப்பதில்லை என்று கூறினார்.  இம்முறை டிஏ 4% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், மத்திய ஊழியர்களின் டிஏ 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயரும்.


சுமார் 7.5 ஆயிரம் ரூபாய் வரை உயரக்கூடும்


அகவிலைப்படி அதிகரிப்பு எதுவாக இருந்தாலும் அது ஜனவரி முதல் அமல்படுத்தப்படும். மார்ச் மாதம் அதன் அறிவிப்பு வந்தால், ஜனவரி முதலான அகவிலைப்படி அதிகரிப்பின் அரியர் தொகையும் சேர்த்து வழங்கப்படும். இதன் மூலம் ஜனவரி, பிப்ரவரி மாத நிலுவைத் தொகையும் ஊழியர்களுக்கு சேர்த்து கிடைக்கும்.


இரு முறை திருத்தம்


அரசாங்கம் அகவிலைப்படியை ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றுகிறது. அதாவது ஒரு வருடத்தில் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைபபடி விகிதங்களில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அரசு தற்போது அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தினால், 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் ஊழியருக்கு அகவிலைப்படியாக ரூபாய் 7560 கிடைக்கும். அனைத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம்  மற்றும் ஓய்வூதியத்தில் பம்பர் அதிகரிப்பு இருக்கும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் மற்றொரு அகவிலைப்படி உயர்வு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ