7th Pay Commission: மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோலி பண்டிகைக்கு முன்னதாகவே மத்திய அரசு இந்த மிகப்பெரிய அறிவிப்பை அறிவிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அகவிலைப்படி உயர்வு தவிர அரசு அதன் ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு நிவாரணம் தருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில் ஏழாவது ஊதியக் குழுவை அமல்படுத்த அரசு தயாராகி வருவதாகவும், அதற்காக ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ஏழாவது ஊதியக் குழுவின் படி, ஊழியர்களின் சம்பள மாற்றம் குறித்த அறிக்கையை முன்னாள் தலைமைச் செயலாளர் சுதாகர் ராவ் தலைமையிலான குழு தாக்கல் செய்யும் என்று முதல்வர் பொம்மை கூறினார்.
மேலும் படிக்க | பங்கு சந்தை முதலீட்டில் ஆயிரத்தை கோடிகளாக்க வேண்டுமா... சில முதலீட்டு டிப்ஸ்!
மேலும் 2023-24 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர், கூடுதல் தொகை துணை பட்ஜெட்டில் வழங்கப்படும் என்றும் ஏழாவது ஊதியக் குழுவின் அறிக்கை புதிய நிதியாண்டில் இருந்தே அமல்படுத்தப்படும் என்றும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். ஜனவரி-1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று நினைத்த ஊழியர்களுக்கு இது மிகப்பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்த குழு இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும், அதன் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கத்தில் கர்நாடக முதல்வர் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன் வரம்பை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கினார். கடன் வரம்பை உயர்த்தியது மட்டுமின்றி முதல்வர் தனது மக்களுக்கு விவசாயம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு தேவை அடிப்படையிலான கடன் வசதியையும் செய்து கொடுத்துள்ளார். 2023-24 ஆம் நிதியாண்டில் 'கிசான் கிரெடிட் கார்டு' வைத்திருப்பவர்களுக்கு 'Bhu Shree' என்ற புதிய திட்டத்தின் கீழ் ரூ.10,000 கூடுதல் மானியம் வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் படிக்க | ITR Filing: ஆன்லைனில் ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி? எந்தெந்த ஆவணங்கள் தேவை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ