ஆதார் அட்டை இந்திய குடிமகன்களின் முக்கியமான அடையாள ஆவணமாக இருந்து வருகிறது, மற்ற ஆவணங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மிக முக்கியமான ஆவணமாக ஆதார் அட்டை இருப்பதால் இதனை நாம் கவனமாக கையாள வேண்டும். ஆதார் அட்டை இல்லாமல் நம்மால் இப்போது எந்தவிதமான பணியையும் செய்யமுடியாது என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆதாரில் விவரங்களைப் புதுப்பிப்பது இனி இலவச சேவையாக கிடைக்காது. UIDAI விரைவில் இதற்கு கட்டணம் வசூலிக்க தொடங்கலாம். ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாகப் புதுப்பிக்க உங்களுக்கு ஜூன் 15 வரை மட்டுமே அவகாசம் உள்ளது என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் ஒருமுறை கூட ஆதாரில் எதையும் புதுப்பிக்காதவர்கள் ஆதாரை புதுப்பித்தல் அவசியம்.


இதுவரை, பயனர்கள் தங்கள் விவரங்களை ஆதார் அட்டையில் UIDAI இணையதளத்தில் இருந்து இலவசமாகப் புதுப்பிக்கலாம். இந்த வழியில், நீங்கள் ஆதார் அட்டையில் ஏதேனும் தகவலைப் புதுப்பிக்க வேண்டும் என்றால், அதை சரியான நேரத்தில் செய்யுங்கள். இல்லையெனில், ஜூன் 15க்குப் பிறகு, இந்தப் பணிக்காக உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். ஜூன் 15க்குப் பிறகு புதுப்பித்தலுக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம் .


ஆதாரை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு


UIDAI இணையதளத்தின்படி, ஆதார் பயனர்கள் ஜூன் 15, 2023க்கு முன் ஆதாரை இலவசமாகப் புதுப்பிக்கலாம். இதற்குப் பிறகு, தகவல்களைப் புதுப்பிப்பதற்கு மக்களிடம் பணம் வசூலிக்கப்படும். எனினும், கட்டணம் எவ்வளவு என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. சேவையைப் பொறுத்து புதுப்பித்தல் கட்டணம் தீர்மானிக்கப்படும்.


மேலும் படிக்க | ஆதார் அட்டையில் எத்தனை முறை பெயர் மற்றும் முகவரியை மாற்றலாம்?

ஆஃப்லைன் முறையில் அப்டேட் செய்ய 50 ரூபாய் கட்டணம்


ஆதாரை ஆஃப்லைனில் புதுப்பிக்க, அதாவது சேவை மையத்திற்கு சென்று புதுப்பிக்க, 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதே சமயம், ஜூன் 15க்கு முன் ஆன்லைனில் அப்டேட் செய்வதற்கு மக்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படாது.


ஆன்லைனில் ஆதாரை அப்டேட் செய்யும் வழிமுறை


1. முதலில் UIDAI இணையதளத்திற்கு செல்லவும்.


2. இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கொண்டு உள்நுழையவும்.


3. இப்போது நீங்கள் உங்கள் தனிப்பட்ட விவரங்களை புதுப்பிக்க அதற்கான சேவையை கிளிக் செய்யவும்


4. இதற்குப் பிறகு உங்கள் தகவலை நிரப்பவும்.


5. உங்கள் தகவலைச் சரிபார்க்க, ஆதாரமாக ஆவணங்களை இணைக்கவும்.


6. இப்போது சில நாட்களுக்குப் பிறகு உங்கள் தகவல்கள் ஆன்லைனில் புதுப்பிக்கப்படும்.


கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்


1. ஆதாரில் புதுப்பித்தல் அல்லது திருத்தத்திற்கான படிவத்தை உள்ளிடும்போது, ​​படிவம் முழுமையாக நிரப்பப்பட வேண்டும். எந்த விவரமும் முழுமையடையாமல் இருக்கக்கூடாது, அதில் எந்த தவறும் இருக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.


2. சரிபார்ப்புக்காக (வெரிஃபிகேஷன்), படிவத்துடன் சில ஆவணங்களை இணைக்கும் படி உங்களிடம் கேட்கப்படுகின்றன. அவற்றை நீங்கள் சரியாக சமர்பிக்க வேண்டும். இவற்றை நீங்கள் சரியாக கொடுக்கவில்லை என்றால் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படும்.


ஆதார் அட்டை அப்டேட் செய்வதன் முக்கியத்துவம்


ஆதார் அட்டை இல்லாவிட்டால் பல அரசுத் திட்டங்களில் இருந்து வரும் சலுகைகளை நாம் இழக்க நேரிடும். ஆதார் அட்டையின் தேவைகள் மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, பல முறை மாற்றங்களைச் செய்வது அல்லது அதனை அப்டேட் செய்ய வேண்டியது அவசியம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ஆதார் அட்டையில் தேவையான மாற்றங்களைச் செய்ய அனுமதிக்கிறது. 


மேலும் படிக்க | Aadhaar Update கோரிக்கை மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்படுகிறதா? இதுதான் காரணம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ