அமேசான்-பிளிப்கார்ட் விற்பனை: ஆன்லைன் ஷாப்பிங்கில் நாட்டம் கொண்டவரா நீன்கள்? பம்பர் தள்ளுபடிகளுக்காக காத்திருக்கிறீர்கள் என்றால், உங்கள் காத்திருப்பு நேரம் முடிவடையவுள்ளது. செப்டம்பர் 23 முதல், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற மாபெரும் இ-காமர்ஸ் வலைத்தளங்கள் தங்கள் பண்டிகைக் கால விற்பனையை அறிவித்துள்ளன. அமேசானின் பண்டிகை கால விற்பனை 28-29 நாட்களுக்கு நீடிக்கும். நிறுவனம் இந்த விற்பனைக்கு அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (Amazon Great Indian Festival) என்று பெயரிட்டுள்ளது. பிளிப்கார்ட் தனது பிக் பில்லியன் டேஸ் 2022 விற்பனையை செப்டம்பர் இறுதி வரை தொடரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2 ஆண்டுகாலத்துக்கு பிறகு மீண்டும் வந்த வெளிச்சம்


அமேசான் இந்தியாவின் துணைத் தலைவர் நூர் படேல், இந்த பண்டிகை சீசன் விற்பனையில் பங்கேற்கும் 11 லட்சம் விற்பனையாளர்களை அமேசான் கொண்டுள்ளது என்று பிடிஐ இடம் தெரிவித்துள்ளார். இதில் 2 லட்சம் உள்ளூர் கடைகளாக இருக்கும். அமேசான், நாட்டில் உள்ள, அணுகக்கூடிய அனைத்து பின்கோடுகளிலும் டெலிவரி செய்யும் என்று கூறியுள்ளது. தொற்றுநோயால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால், அமேசான் 2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வருவதால், இந்த முறை பண்டிகை காலங்கள் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.


பிரைம் உறுப்பினர்கள் இந்த பலனைப் பெறுவார்கள்


அமேசான் பிரைம் உறுப்பினர்கள் இந்த விற்பனையை 24 மணி நேரத்திற்கு முன்பே அணுக முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, பிரைம் உறுப்பினர்களுக்கு செப்டம்பர் 23க்கு ஒரு நாள் முன்னதாகவே விற்பனையில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.


மேலும் படிக்க | Flipkart Offer: ரூ.700 விற்பனையாகும் மிகச்சிறந்த 50 MP கேமரா ஸ்மார்ட்போன் 


இந்த பண்டிகைக் காலத்தில், அனைத்து வகைகளிலும் 2000-க்கும் மேற்பட்ட புதிய அறிமுகங்களை நிறுவனம் எதிர்பார்க்கிறது என்று நூர் படேல் கூறினார். இந்த நிகழ்வின் முதல் கட்டமாக, பாரத ஸ்டேட் வங்கி பங்குதாரராக செயல்படும். எஸ்பிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடியும் வழங்கப்படும்.


தீபாவளிக்கு 3-4 நாட்களுக்கு முன் வரை விற்பனை இருக்கும்


இந்த விற்பனை தீபாவளிக்கு 3-4 நாட்கள் முன் வரை இருக்கும் என்று நூர் படேல் தெரிவித்தார். ‘150 க்கும் மேற்பட்ட இன்ஃப்ளூயன்சர்களுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். அவர்கள் 600 லைவ் ஸ்ட்ரீம்களைச் செய்வார்கள். இது வாடிக்கையாளர் வாங்குவதை எளிதாக்கும்’ என்று அவர் கூறினார். இது தவிர, வாடிக்கையாளர்களுக்கு லைவ் ஒலி (LIVE-Only) தள்ளுபடி வழங்கும் வசதியும் இருக்கும்.


பிளிப்கார்ட்டும் தயார் நிலையில் உள்ளது


தன்னிடன் 4.2 லட்சம் விற்பனை கூட்டாளர்கள் உள்ளதாக ஃபிளிப்கார்ட் கூறுகிறது. அமிதாப் பச்சன், ஆலியா பட், எம்எஸ் தோனி போன்ற பல்வேறு பிரபலங்களுடன் பிக் பில்லியன் டேஸ் நிகழ்வை பிளிப்கார்ட் தொடங்கியுள்ளது.
 
130 பிக் பில்லியன் டேஸ் ஸ்பெஷல் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஃபேஷன், எலக்ட்ரானிக்ஸ், மொபைல் போன்கள், பெரிய உபகரணங்கள், தனிநபர் பராமரிப்பு மற்றும் கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட 90 பிராண்டுகள் இதை தயார் செய்துள்ளதாகவும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | Realme C33: ரூ.549-க்கு ரியல்மீ ஸ்மார்ட்போனை வாங்கலாம்; ஆனால் ஒரு கண்டிஷன் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ