Post Office வாடிக்கையாளர்களே அலர்ட், ஏப்ரல் 1 முதல் முக்கிய மாற்றங்கள்
தபால் அலுவலக விதி: தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (எம்ஐஎஸ்), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்), அஞ்சலக நிலையான வைப்புத்தொகை (கால வைப்புத்தொகை) மீதான வட்டி ஏப்ரல் 1, 2022 முதல் பணமாக செலுத்தப்படாது.
தபால் அலுவலக விதி: தபால் நிலைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் தொடர்பான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இந்திய அஞ்சல் துறையின் சேமிப்புக்கான வட்டி விதியை இப்போது மாற்றப்பட்டுள்ளது. நீங்களும் தபால் அலுவலக வாடிக்கையாளராக இருந்தால், அப்டேட்களை தெரிந்து கொள்ளுங்கள். இதனுடன், தபால் துறை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு, வட்டி செலுத்துவது குறித்து பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள் அமல்
அஞ்சலகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "ஏப்ரல் 1, 2022 முதல், தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (எம்ஐஎஸ்), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்), அஞ்சலக நிலையான வைப்பு (கால வைப்புத்தொகை) ஆகியவற்றுக்கான வட்டி ரொக்கமாக செலுத்தப்படாது. அஞ்சலக சேமிப்புக் கணக்கு அல்லது கணக்கு வைத்திருப்பவரின் வங்கிக் கணக்கில் மட்டுமே வட்டி செலுத்தப்படும். அதேபோல் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமானத் திட்டம் அல்லது கால வைப்புத்தொகை ஆகியவற்றுடன் கணக்கு வைத்திருப்பவர் தனது வங்கி விவரங்களை இணைக்கவில்லை என்றால், மொத்த வட்டி காசோலையாகவோ அல்லது அவரது தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படும்.
மேலும் படிக்க | PPF கணக்கு விதிகளில் பெரிய மாற்றம்: அறியாமல் போனால் நஷ்டம் உங்களுக்கு
சேமிப்புக் கணக்கு லிங்க் செய்யப்ப்ட வேண்டும்
நீங்கள் வட்டிப் பணத்தை மாதாமாதம், காலாண்டு அல்லது ஆண்டுக்கு ஒருமுறை எடுத்தாலும், தபால் நிலையத்தின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன், ஒரு வாடிக்கையாளர் தனது சேமிப்புத் திட்டத்துடன் வங்கி அல்லது தபால் அலுவலகத்தின் சேமிப்புக் கணக்கை இணைக்கவில்லை என்றால், ஏப்ரல் 1 முதல் சிக்கலைச் சந்திக்க நேரிடும். எனவே, எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க, அனைத்து வாடிக்கையாளர்களும் மார்ச் 31, 2022க்கு முன் தபால் அலுவலகத் திட்டத்தை சேமிப்புக் கணக்குடன் இணைக்க வேண்டியது கட்டாயமாகும்.
எனவே வட்டித் தொகையை தொடர்ந்து எளிதாக பெற வேண்டுமெனில் சீனியர் சிட்டிசன் சேமிப்பு, மாத வருமான திட்டம், கால டெபாசிட் ஆகிய கணக்குகளை உங்கள் வங்கிக் கணக்குடன் அல்லது தபால் அலுவலக சேமிப்புக் கணக்குடன் இணைக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல், டெபாசிட் கணக்குகளுக்கு வட்டி செலுத்தப்படுவதே பல கணக்குதாரர்களுக்கு தெரியவில்லை என தபால் துறை தெரிவித்துள்ளது.
பல்வேறு கணக்குகளுக்கு பணம் செல்லும்
மார்ச் 31க்குள் இரண்டு கணக்குகளையும் இணைக்கவில்லை என்றால், ஏப்ரல் 1ம் தேதிக்குப் பிறகு பெறப்படும் வட்டியானது தபால் அலுவலகத்தின் பல்வேறு அலுவலகக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும். ஒரு முறை வட்டித் தொகை இதர அலுவலகக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டவுடன், அதை தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு அல்லது காசோலை மூலம் மட்டுமே பெற முடியும்.
5 வருட மாதாந்திர வருமானத் திட்டத்தில் (எம்ஐஎஸ்), வட்டிப் பணம் மாதாந்திர அடிப்படையில் செலுத்தப்படுகிறது. அதேசமயம் 5 ஆண்டு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு (SCSS), வட்டி காலாண்டு அடிப்படையில் செலுத்தப்படுகிறது. அதே நேரத்தில், TD கணக்கிற்கான வட்டி ஆண்டு அடிப்படையில் செலுத்தப்படுகிறது.
மேலும் படிக்க | LIC IPO முக்கிய அப்டேட்: ரஷ்யா உக்ரைன் விவகாரத்தால் தாமதமாகிறதா வெளியீடு?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR