சிலர் செவ்வாய்கிழமை அன்று கடன் கொடுக்கக் கூடாது என்று கூறுவார்கள். அது ஏன்? அந்த நாளில் என்ன செய்தால் வீட்டில் செல்வத்தை அதிகரிக்கலாம் என்பதை இங்கே பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாய்கிழமையில் (Tuesday) பணம் கொடுக்க கூடாது. செவ்வாய்கிழமை முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. நாம் வணங்கும் இந்த தெய்வம் நமக்கு செல்வ வளத்தை கொடுப்பதுடன், அவைகள் நமது வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள் புரிகிறார்கள். இந்த காரணத்தினால் தான் அன்றைய தினம் பணப் (Money) பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்வதையும், மற்றவர்களுக்கு கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.


ALSO READ | இன்று செவ்வாய்க்கிழமை: மௌன அங்காரக விரதம் மேற்கொள்ள அருமையான நாள்!!


செவ்வாய்கிழமையில் செய்ய வேண்டியவை என்ன?
செவ்வாய்கிழமையில் 5 முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும். பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4-5 மணி நேரத்தில் படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும். நமது வீட்டில் செல்வம் எப்போதும் நிலைத்து இருக்க, வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம். வீட்டில் செல்வத்தை அதிகரிக்க சங்கு, நெல்லிக்காய், பசுவின் சாணம் மற்றும் ஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் ஆகியவற்றை வீட்டில் வைத்திருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் புது ஆடை உடுத்தினால் அதிகம் சேரும். தான தருமங்களை செவ்வாயில் செய்தால் தருமம் செய்வதும் அதிகரிக்கும். 


செவ்வாய்கிழமையில் செய்யக் கூடாதவை என்ன?
பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்காமல், இருவரும் வாசல் படிக்கு உள்ளே கொடுக்க வேண்டும். வீட்டில் உள்ள வாசற்படி, அம்மி, ஆட்டுக்கல், உரல் ஆகியவைகளில் உட்காரக் கூடாது. வீட்டை இரவில் பெருகும் போது, அந்த குப்பைகளை வெளியே கொட்டக் கூடாது. வீட்டில் சாமிக்கு பூஜை செய்யும் போது, ஈரத் துணியை உடுத்திக் கொண்டு பூஜை செய்யக் கூடாது. நம்முடைய வீட்டிற்குள் அல்லது வீட்டின் வெளியில் நகத்தை வெட்டக் கூடாது.


ALSO READ | கோடீஸ்வராக தினமும் ₹30 என்ற அளவில் முதலீடு செய்தால் போதும்..!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR