வாரன் பபே தனது 11 வயதில் பங்குகளில் முதலீடு செய்யத் தொடங்கினார், இன்று அவர் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
கோடீஸ்வரராக ஆக வேண்டும் என்பதை விரும்பாதவர்கள் யாரேனும் இருப்பார்களா என்ன... அது மிகவும் கடினமானதும் அல்ல. முறையாக திட்டமிட்டு ஸ்மார்ட்டாக முதலீடு செய்தால் போதும். கோடீஸ்வரர் ஆவதற்கு குறுக்குவழி எதுவும் தேவை இல்லை. அதை எப்படி தொடங்குவது என்பது மிகப்பெரிய கேள்வி.
வாரன் பபெட் தனது 11 வயதில் பங்குகளில் முதலீடு செய்யத் தொடங்கினார், இன்று அவர் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொரு நாளும் வெறும் 30 ரூபாயை டெபாசிட் செய்வதன் மூலம் கூட ஒரு கோடீஸ்வரர் ஆக முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
உங்கள் 20 வயது என்றால், தினமும் 30 ரூபாய் சேமிப்பதன் மூலம், அறுபது வயதில் அதை நீங்கள் ஒரு கோடி ரூபாயாக மாறலாம். 30 வயது என்றால், இந்த இலக்கை அடைய, நீங்கள் 30 முதலீடு டெபாசிட் செய்ய வேண்டும்.
ALSO READ | தீராத பணப்பிரச்சனையை தீர்க்கும் எளிய வாஸ்து குறிப்புகள்..!!!
ஒரு நாளைக்கு 30 ரூபாய் முதலீடு என்றால் ஒரு மாதத்தில் 900 ரூபாய். இந்த பணத்தை ஒவ்வொரு மாதமும் முறையான முதலீட்டு திட்டதில் (Systematic investment Plan-SIP) இல் முதலீடு செய்யுங்கள். 40 ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு மாதமும் 900 ரூபாயை மட்டுமே முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் கோடீஸ்வரராக முடியும்.
- உங்கள் வயது 20 வயது என்று வைத்துக்கொள்வோம்.
- நீங்கள் 40 ஆண்டுகளுக்கு தினமும் 30 ரூபாய் சேமிக்க வேண்டும்.
- ஒவ்வொரு மாதமும் ரூ .900 பரஸ்பர நிதியம், அதாவது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும்.
- மியூச்சுவல் ஃபண்டுகளில் சராசரியாக 12.5 சதவீத வீதத்தில் வட்டி கிடைக்கிறது
- 40 ஆண்டுகளுக்குப் பிறகு கோடீஸ்வரரானார்.
20 வயதிற்கு மேல் என்றால், நீங்கள் இப்போது முதலீடு செய்ய முடியாது என்று அர்த்தமல்ல. உங்களுக்கு 30 வயது என்றால், ஒரு கோடி என்ற இலக்கை அடைய, நீங்கள் 30 ரூபாய்க்கு பதிலாக தினமும் 95 ரூபாய் என்ற அளவில் டெபாசிட் செய்ய வேண்டும்.
உங்களுக்கு 40 ஆண்டுகள் அதிகம் என தோன்றினால், அதை விட குறைவான காலத்திற்கும் முதலீடு செய்யலாம். அந்த நிலையில் சராசரி வருவாய் 12 சதவீதம் வரை இருக்கலாம். நீங்கள் 35 ஆண்டுகள் தொடர்ந்து மியூச்சுவல் ஃபண்டில் டிவிடெண்ட் மறு முதலீட்டு திட்டத்தில் (DRIP) முதலீடு செய்தால், உங்களுக்கு 15% வருவாய் கிடைக்கும்.
டிவிடென்ட் மறு முதலீட்டு திட்டம் (Dividend Reinvestment Plan)
டிவிடென்ட் (Dividend) மறு முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்யும் போது, முதலீட்டுடன் ஈட்டிய டிவிடெண்டும் முதலீடாக மாறுவதால், முதலீட்டு தொகை தொடர்ந்து அதிகரிக்கிறது, அதன் மூலம் வருமானமும் அதிகரிக்கிறது.
ஆர்.டி.யும் (RD) ஒரு நல்ல தேர்வாகும்
ஒவ்வொரு மாதமும் 5500 ரூபாய் என்ற அளவில் ரெகரிங் டெபாசிட் செய்வதன் மூலம் கோடீஸ்வரர்களாக முடியும். இதற்கு, முதலில் வங்கியில் ஒரு RD கணக்கைத் திறந்து, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யுங்கள்.
இதை விட குறைந்த நேரத்தில் நீங்கள் கோடீஸ்வரராக விரும்பினால்
- 25 ஆண்டுகளுக்கு ரூ.9000
- 20 ஆண்டுகளுக்கு ரூ.15000
- 15 ஆண்டுகளுக்கு ரூ.26400
- 10 ஆண்டுகளுக்கு ரூ.51500 ரூபாய் என்ற அளவில் டெபாசிட் செய்ய வேண்டும்.
ALSO READ | தீராத பிரச்சனையா... வீட்டின் படிக்கட்டு காரணமாக இருக்கலாம்... !!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR