Ration Card Update: ரேஷன் கார்டு விஷயத்தில் மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு திருத்தங்களை கடுமையாக மேற்கொண்டு வருகின்றன. ஒருபுறம் இலவச ரேஷன் திட்டத்தை டிசம்பர் வரை நீட்டித்த மத்திய அரசு, மறுபுறம் ரேஷன் கார்டில் நடக்கும் முறைகேடுகளை களை எடுக்க தொடங்கியிருக்கிறது. தகுதியற்ற ரேஷன் கார்டுகளை நீக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்த மத்திய அரசு, மீண்டும் அதற்கான பணிகளை தொடங்கியிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தகுதியற்றவர்களின் பெயர்கள் நீக்கம்


தற்போது உ.பி அரசு மாநிலத்தில் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உ.பி., அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, தகுதியில்லாதவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, கோரிக்கையின் அடிப்படையில் தகுதியானவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டுகளில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தகுதியுடையவர்கள், பயன்பெற முடியாதவர்கள் பயன்பெறுவார்கள். இலவச ரேஷன் சலுகையை ஏழைகளுக்கு மட்டும் வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Aadhaar Card: ஆதாரில் எத்தனை முறை அப்டேட் செய்ய முடியும்? கட்டணம் என்ன?


எந்த அடிப்படையில் பெயர்கள் சேர்க்கப்படுகின்றன?


புதிய ரேஷன் கார்டுக்கான விண்ணப்பத்தை பரிசீலிக்கும் வகையில், பழைய கார்டுகள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியில்லாதவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து புதிதாக தேவைப்படுபவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை விகிதத்தின் அடிப்படையில் இப்போதும் தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் பெயர்கள் சேர்க்கப்படுகின்றன.


மக்கள் தொகை அதிகரிப்பு


நாடு முழுவதும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, மக்கள் தொகை எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ரேஷன் கார்டு தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இதற்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கும் நிலையில், தகுதியில்லாதவர்களை கண்டுபிடித்து களையெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை உத்திரபிரதேசம் மட்டுமல்லாது, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் செய்து வருகின்றன.


மேலும் படிக்க | அக்.1 முதல் புதிய கிரெடிட் / டெபிட் கார்டு முறை - டோக்கன் உருவாக்குவது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ