புதுடெல்லி: புதிய நிதியாண்டு, புதிய விதிகள்! புதிய நிதியாண்டு FY 22-23 இன்று (ஏப்ரல் 01) தொடங்கியுள்ள நிலையில், புதிய மற்றும் சீர்திருத்தப்பட்ட வருமான வரி விதிகளும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏப்ரல் 1 முதல், தனிநபர் வரிவிதிப்பு தொடர்பான பல விதிகள் மாற்றப்பட உள்ளன. புதிய நிதியாண்டில் இருந்து மாறும் 5 முக்கிய வருமான வரி விதிகளை பற்றி இங்கே காணலாம். 


வர்சுவல் டிஜிட்டல் சொத்துக்களுக்கு 30 சதவீத வரி


வர்சுவல் டிஜிட்டல் சொத்துகளில் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் வருமானத்திற்கு ஏப்ரல் 1 முதல் 30 சதவிகிதம் வரி விதிக்கப்படும். 


பிப்ரவரியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், "வர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துகளின் பரிவர்த்தனைகளில் அபரிமிதமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனைகளின் அளவு அதிகரித்துள்ளது. இந்த பரிவர்தனைகள் செய்யப்படும் முறைகளும் (ஃப்ரீக்வென்சி) அதிகரித்துள்ளன. ஆகையால் இவற்றுக்கு குறிப்பிட்ட வரி முறையை வழங்குவது கட்டாயமாகியுள்ளது. அதன்படி, வர்சுவல் டிஜிட்டல் சொத்துக்களின் வரிவிதிப்புக்கு, எந்தவொரு வர்சுவல் டிஜிட்டல் சொத்தையும் மாற்றுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று நான் முன்மொழிகிறேன்.” என்று கூறியிருந்தார்.


ITR தாக்கல் சாளரம் புதுப்பிக்கப்பட்டது


அடுத்த நிதியாண்டிலிருந்து திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கை (ஐடிஆர்) தாக்கல் செய்யும் மக்களுக்கும் நிதி அமைச்சர் அவகாசம் அளித்து நிவாரணம் அளித்தார். குறைந்த வரி தாக்கல் செய்யப்பட்டால், திருத்தப்பட்ட வரி தாக்கல் சாளரம் மதிப்பீடு செய்யப்பட்ட ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு திறந்திருக்கும் என்று அவர் அறிவித்துள்ளார். ஏப்ரல் 1 முதல் இந்த விதி அமலுக்கு வருகிறது.


மேலும் படிக்க | ஜெட் எரிபொருள் விலை உயர்வு; இனி விமானப் பயண கட்டணமும் உயரும் 


பிஎஃப்-ல் வரி விதிப்பு


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கும் மேலாக பிஎஃப்-ல் முதலீடு செய்பவர்களுக்கு வரி விதிக்கப்படும் என்று முன்மொழிந்தார். மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டிய பணியாளரின் வருங்கால வைப்பு நிதி பங்கின் மீதான வட்டிக்கு எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.


 வர்சுவல் டிஜிட்டல் சொத்துக்களின் (விடிஏ) இழப்புகளை அவற்றின் ஆதாயங்களுக்கு எதிராக செட் ஆஃப் செய்ய முடியாது 


மக்களவை உறுப்பினர்கள் மத்தியில் பரிசீலனைக்கு அளிக்கப்பட்ட நிதி மசோதா, 2022-ன் திருத்தங்களின்படி, வர்சுவல் டிஜிட்டல் சொத்துக்களில் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்வது தொடர்பான பிரிவில் இருந்து 'மற்றவை' என்ற வார்த்தையை நீக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. வர்சுவல் டிஜிட்டல் சொத்துகளின் (VDA) பரிமாற்றத்தால் ஏற்படும் இழப்பை மற்றொரு VDA இன் பரிமாற்றத்தால் ஏற்படும் வருமானத்திற்கு எதிராக அமைக்க அனுமதிக்கப்படாது என்பதை இது குறிக்கும். 


உதாரணமாக, ஒருவர், பிட்காயினில் ரூ. 100 ஆதாயத்தைப் பெற்று, டாஜ்காயினில் (Dogecoin) ரூ. 70 இழப்பைப் பெற்றால், அவரது வரிப் பொறுப்பு அவர் ஈட்டிய ரூ. 100-ல் இருக்கும், நிகர லாபமான  ரூ. 30-ல் (இழப்பை நீக்கிய பிறகு) இருக்காது.  


மாநில அரசு ஊழியர்களின் என்பிஎஸ் கழிப்பு 


மாநில அரசு ஊழியர்கள் இப்போது தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) 80CCD(2) பிரிவின் கீழ் 14 சதவீத வரிச் சலுகையைப் பெற முடியும். மேற்கூறிய பிரிவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்படுவதைப் போன்றே மாநில அரசு ஊழியர்களுக்கும் கழிக்கப்படும்.


மேலும் படிக்க | EPFO: ஆன்லைனில் இபிஎஃப்-ஐ மாற்றுவது எப்படி? முழு செயல்முறை இதோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR