பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் வேண்டாம்; ₹44,793 ஓய்வூதியம் தரும் NPS திட்டம்!

நீங்களும் உங்கள் மனைவியும், வயதான காலத்தில் யாரையும் பணத்துக்காகச் சார்ந்திருக்கக்கூடாது என் விரும்பினால், இன்றே தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 16, 2022, 12:11 PM IST
  • கை நிறைய பணம் கொடுக்கும் சிறந்த ஓய்வூதிய திட்டம்
  • தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு
  • ஒவ்வொரு மாதமும் கை நிறைய பணம் கிடைக்கும்
பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் வேண்டாம்; ₹44,793 ஓய்வூதியம் தரும் NPS திட்டம்! title=

நீங்களும் உங்கள் மனைவியும், வயதான காலத்தில் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் எதிர்காலத்தில் யாரையும் பணத்துக்காகச் சார்ந்திருக்கக்கூடாது என்றும் நீங்கள் விரும்பினால், இன்றே தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.

உங்கள் மனைவி பெயரில் புதிய பென்ஷன் திட்டத்தில் (NPS) கணக்கைத் தொடங்கலாம். NPS கணக்கில் முதலீடு செய்தால், உங்கள் மனைவி60 வயதை எட்டியதும் மொத்த தொகை வழங்கும். இதனுடன்,  ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய வடிவில் வழக்கமான வருமானமும் கிடைக்கும். உங்கள் மனைவி வயதான காலத்தில் யாரையும் பணத்துக்காக சார்ந்திருக்காத நிலை ஏற்படும்.

இதில், முதலீடு செய்வதும் மிக எளிது. புதிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS)உங்கள் வசதிக்கேற்ப மாதம் தோறும் அல்லது ஆண்டுதோறும் பணத்தை டெபாசிட் செய்யலாம். வெறும் 1,000 ரூபாயில் உங்கள் மனைவி பெயரில் என்பிஎஸ் கணக்கைத் தொடங்கலாம். NPS கணக்கு, கணக்கு உள்ளவரின் 60 வயதில் முதிர்ச்சியடைகிறது. எனினும் புதிய விதிகளின்படி, நீங்கள் விரும்பினால், மனைவியின் வயது 65 வரை என்பிஎஸ் கணக்கில் முதலீடு செய்யலாம்.

மேலும் படிக்க | EPFO அளிக்கும் அசத்தல் வாய்ப்பு: இதில் பதிவு செய்தால் லாபம் காணலாம்

உங்கள் மனைவிக்கு 30 வயதான நிலையில், அவருடைய NPS கணக்கில் ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் முதலீடு செய்தால். ஆண்டுதோறும் முதலீட்டில் 10 சதவீதம் வருமானம் கிடைகு நிலையில், 60 வயதில் அவர் கணக்கில் மொத்தம் ரூ.1.12 கோடி இருக்கும். இதில் அவர்களுக்கு சுமார் 45 லட்சம் ரூபாய் கிடைக்கும். இது தவிர, அவர்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் 45,000 ரூபாய் ஓய்வூதியம் பெறுவார்கள். 

மொத்த தொகை மற்றும் ஓய்வூதியம்

வயது - 30 ஆண்டுகள்
மொத்த முதலீட்டு காலம் - 30 ஆண்டுகள்
மாதாந்திர பங்களிப்பு - ரூ 5,000
முதலீட்டின் மதிப்பிடப்பட்ட வருமானம் - 10%
மொத்த ஓய்வூதிய நிதி - ரூ. 1,11,98,471 (முதிர்வின் போது தொகையை திரும்பப் பெறும் தொகை)
ஆண்டுத் திட்டத்தில் செய்யும் முதலீடு - ரூ. 44,79,388
மதிப்பிடப்பட்ட வருடாந்திர விகிதம் 8% - ரூ 67,19,083
மாதாந்திர ஓய்வூதியம்- ரூ 44,793.

NPS என்பது மத்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் தொழில்முறை நிதி மேலாளரால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த தொழில்முறை நிதி மேலாளர்களுக்கு மத்திய அரசு இந்தப் பொறுப்பை வழங்குகிறது. எனவே, NPS திட்டத்தில் செய்யப்படும் உங்கள் முதலீடு முற்றிலும் பாதுகாப்பானது. NPS தொடக்கத்திலிருந்து சராசரியாக 10 முதல் 11 சதவிகிதம் ஆண்டு வருமானத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | PF Account: எளிய வழியில் உங்கள் புதிய வங்கிக் கணக்கை பிஎஃப் கணக்குடன் சேர்க்கலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News