2022 பட்ஜெட்டில், கிரிப்டோ கரன்ஸி மற்றும் வெர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துகளை விற்பனை/பரிமாற்றம் செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என முன்மொழியப்பட்டுள்ளதோடு, மேலும், மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளின் பரிமாற்றத்தின் போது, வரம்பை மீறும் பரிவர்த்தனைகளுக்கு ஒரு சதவிகிதம் TDS விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் கிரிப்டோகரன்ஸி அனுமதிக்கப்படுமா என்பது குறித்த எதிர்ப்பார்ப்புகள், அனுமானங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், மாநிலங்கள் அவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கிரிப்டோ கரன்சியை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும், தற்போது இந்தியாவில் அது முறைப்படுத்தப்படவில்லை என்றும் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அமைச்சர், “இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கிரிப்டோ கரன்சியை வெளியிடுவதில்லை. தஏபோது புழக்கத்தில் உள்ள காகித நாணயம் தான் சட்டப்பூர்வமானது. 1994ம் ஆண்டின் RBI சட்ட விதிகளின்படி RBI மூலம் வழங்கப்படுகிறது. பாரம்பரிய காகித நாணயத்தின் டிஜிட்டல் பதிப்பு மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) என்று அழைக்கப்படுகிறது” என்றார்.
மேலும் படிக்க | கிரிப்டோகரன்சி விளம்பரம் தொடர்பாக கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டது ASCI
CBDC டிஜிட்டல் கரன்சி, காகித நாணயம் மீதான சார்பை குறைப்பதோடு, பரிவர்த்தனை செலவும் குறையும் என்றார்.
காலப்போக்கில் நோட்டுகள் அச்சடிப்பது குறைந்துள்ளதாக அமைச்சர் சபையில் மேலும் தெரிவித்தார். 2019-20ஆம் ஆண்டில் ரூ.4,378 கோடி மதிப்பிலான நோட்டுகள் அச்சிடப்பட்ட நிலையில், 2020-21ஆம் ஆண்டில் ரூ.4,012 கோடி நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. அதேசமயம், 2016-17ல் ரூ.7,965 கோடி மதிப்பிலான நோட்டுகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டன என்றார்.
மேலும் படிக்க | கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்கிறீர்களா; வருமான வரி விதிகள் கூறுவது என்ன !
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR