Free Food Packets: நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளால் ஏழைகளுக்காக பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தற்போது, அந்த வகையில் ராஜஸ்தான் மாநில அரசு ஏழைகளுக்கு இலவச உணவுப் பொட்டலங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏழைக் குடும்பங்களுக்கு இலவச உணவு பாக்கெட்டுகள் வழங்கும் திட்டத்துக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். 'அன்னபூர்ணா உணவு பாக்கெட் திட்டம்' (Annapurna Food Packet Scheme) எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தில் மாதம் ரூ.392 கோடி செலவாகும். 


மேலும் படிக்க | JanDhan Account: அரசின் பெரிய பரிசு, ரூ. 10,000 கிடைக்கும், இப்பவே இதை பண்ணுங்க


அன்னபூர்ணா உணவு பாக்கெட் திட்டம்


இந்தத் தகவலை நேற்று (ஏப். 14) ராஜஸ்தான் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாநிலத்தின் 1.06 கோடி குடும்பங்களுக்கு இந்த உணவு பொட்டலங்களை வழங்க முதல்வர் கெலாட் முக்கிய முடிவை எடுத்துள்ளார். முதலமைச்சரின் இலவச அன்னபூர்ணா உணவு பாக்கெட் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.


அனைத்து அத்திவாசியப் பொருள்களும்...


இதன் கீழ், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் வரும் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகள் இலவசமாக விநியோகிக்கப்படும். இதன்படி, ஒவ்வொரு பாக்கெட்டிலும் தலா ஒரு கிலோ பருப்பு, சர்க்கரை, உப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், தலா 100 கிராம் மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் 50 கிராம் மஞ்சள் தூள் உள்ளிட்டவை வழங்கப்படும். ஒவ்வொரு பாக்கெட்டின் விலை ரூ.370 ஆக இருக்கும். இத்திட்டத்திற்கு மாதந்தோறும் சுமார் 392 கோடி ரூபாய் செலவாகும்.


பதிவு எப்போது தொடங்கும்?


இத்திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களின் பதிவு ஏப்ரல் 24ஆம் தேதி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அகவிலை நிவாரண முகாமில் செய்யப்படும். இத்திட்டத்தில், கூட்டுறவுத் துறையின் கீழ் வரும் CONFED (ராஜஸ்தான் மாநில கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு லிமிடெட்) பொருள்களை வாங்கி, பாக்கெட்டுகளைத் தயாரித்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்பும். இவை ரேஷன் கடை மூலம் விநியோகிக்கப்படும். இதை கூட்டுறவு துறை கண்காணித்து வருகிறது. 


மேலும் படிக்க | இனி கம்மி விலையில் காஸ் சிலிண்டர் - அரசு எடுத்த முக்கிய முடிவு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ