LPG மானியம் தவறுதலாக கைவிட்டுப் போனதா? மீண்டும் சுலபமாக பெறலாம்
தற்செயலாக எல்பிஜி மானியம் உங்கள் கை நழுவிப் போய்விட்டதா? கவலை வேண்டும், மானியத்தை மீண்டும் பெற சுலபமான வழி இருக்கிறது.
தற்செயலாக எல்பிஜி மானியம் உங்கள் கை நழுவிப் போய்விட்டதா? கவலை வேண்டும், மானியத்தை மீண்டும் பெற சுலபமான வழி இருக்கிறது.
எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் மீண்டும் மானியம் பெறுவதற்கான வசதியை வழங்குகின்றன.
How to apply for LPG subsidy: வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு அரசாங்கம் மானியம் வழங்குகிறது. இருப்பினும், மானியம் வேண்டாம் என்றால் அதை விட்டுக் கொடுக்கும் தெரிவும் உள்ளது. நுகர்வோர் விருப்பப்பட்டால், அவர் எல்பிஜி மானியத்தை (LPG subsidy) தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரில் விட்டுக் கொடுக்கலாம்.
Also Read | சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பதிவு கட்டணம் விலக்கு
சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுப்பதற்காக 'கிவ் இட் அப்' முன்முயற்சியை ('Give It Up' initiative) அரசாங்கம் தொடங்கியது. அரசாங்கத்தின் இந்த திட்டத்தின் கீழ் மானியத்தை விட்டுக் கொடுத்தவர்களும், தவறுதலாக எல்பிஜி மானியத்தை விட்டவர்களும், அதை மீண்டும் பெற விரும்பினால், என்ன செய்வது? என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுவது இயல்பானது தான்.
எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் மீண்டும் மானியம் பெற வசதி அளிக்கின்றன. தற்செயலாக எல்பிஜி மானியத்தை கைவிட்டவர்களுக்கு இது பெரிதும் பயனளிக்கும்.
எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு மானியத்தின் நேரடி நன்மையை வழங்குவதற்காக, அரசாங்கம் அவர்களின் எரிவாயு இணைப்பை வங்கி கணக்கு மற்றும் ஆதார் அட்டையுடன் இணைத்தது. இதனுடன், நாடு முழுவதும் உள்ள மக்கள் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுப்பதற்காக 'கிவ் இட் அப்' முன்முயற்சியை ('Give It Up' initiative) அரசாங்கம் தொடங்கியது. இப்படி விட்டுக் கொடுப்பவர்களின் மானியத் தொகை உண்மையாக மானியம் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும்.
Also Read | Hilarious! தடுப்பூசி ஃபார்முலா தொடர்பான கெஜ்ரிவாலின் யோசனை இணையத்தில் வைரல்
மீண்டும் எவ்வாறு மானியம் பெறுவது?
எல்பிஜி மானியத்தை மீண்டும் தொடங்க, வாடிக்கையாளர்கள் தங்கள் எரிவாயு நிறுவனத்திற்குச் சென்று விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்துடன், ஒரு அடையாள சான்று, முகவரி ஆதாரம், எரிவாயு இணைப்பு ஆவணங்கள் மற்றும் வருமானத்திற்கான ஆதாரத்தின் நகலும் வழங்கப்பட வேண்டும்.
ஆண்டு வருமானம் 10 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் குறைவாக இருப்பவர்களுக்கு மானியம் கிடைக்கும். இது தொடர்பாக ஒரு படிவத்தை வாடிக்கையாளர்களை பூர்த்தி செய்து எரிவாயு நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும்.
Also Read | பால் குடிப்பதால் நன்மைகள் மட்டுமல்ல, சிலருக்கு பாதிப்புகளும் உண்டு
விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட ஏஜென்சியால் விசாரணை நடத்தி, ஒரு வாரத்திற்குள் மீண்டும் உங்களுக்கு மானியத்தைக் கொடுக்கும்.
எல்பிஜி மானியம் குறித்த முழுமையான தகவலுக்கு நுகர்வோர் தங்களது அருகிலுள்ள எரிவாயு விற்பனையாளர் அல்லது எரிவாயு நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும். அங்கு, நுகர்வோருக்குத் தேவையான விரிவான தகவல்கள் கிடைக்கும். எனவே மானியத்தை மீண்டும் பெறுவது சுலபானதே…
Also Read | தமிழகத்தில் இன்று முதல் மே 15 வரை பரவலாக மழை பெய்யலாம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR