இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் கார்கள்!
இந்திய சந்தையில் ரெனால்ட் கிகர் கார் தான் மிக குறைந்த விலைக்கொண்ட காம்பேக்ட் எஸ்வியூக்களில் ஒன்றாகும்.
பல ஆண்டு காலமாகவே வாகன உற்பத்தியாளர்கள் அனைத்து வாகனங்களிலும் மேனுவல் டிரான்ஸ்மிஷனை வழங்குகிறார்கள், குறிப்பாக குறைந்த விலையில் மற்ற நாடுகள் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை வழங்குகிறது. இருப்பினும் மாறிக்கொண்டிருக்கும் காலத்திற்கேற்ப வாடிக்கையாளர்களும் அவர்களின் எதிர்பார்ப்பை பெருகிக்கொண்டே போகின்றனர். அவர்கள் வாங்கும் வாகனங்கள் சிறந்த தோற்றத்தை கொண்டிருக்க வேண்டும் என்று கருதுகின்றனர், மேலும் புதுவிதமான அம்சங்கள் நிரம்பியிருக்க வேண்டும் என்றும் நினைக்கின்றனர். மேலும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
வாடிக்கையாளர்களின் தேவைகளை பொறுத்து வாகன உற்பத்தியாளர்களும் அவர்களது உற்பத்திகளை மேம்படுத்தி வருகின்றனர். வாகன உற்பத்தியாளர்கள் பாரம்பரியமான AT முதல் குறைவான AMT மற்றும் அதிக சக்திவாய்ந்த DCT உட்பட பல்வேறு வகையான ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர். என்ன தான் இதுபோன்ற சிறப்பம்சங்கள் நிறைந்த வாகனங்களை வாங்க ஆசைப்பட்டாலும் அவை நமது பட்ஜெட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருந்தால் கூடுதல் சிறப்பானதாக இருக்கும். அந்த வகையில் இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் டாப் 5 ஆட்டோமேட்டிக் எஸ்யூவிக்கள் கிடைக்கின்றன, அதனை பற்றி இங்கே பார்க்கலாம்.
மேலும் படிக்க | ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த வகை கார்களுக்கு அபராதம் - தப்பிக்க வழி
டாடா நெக்ஸான் :
டாடா நெக்ஸான் ஆனது இந்திய வாகன உற்பத்தியாளரின் கச்சிதமான எஸ்யூவி ஆகும். இந்த நெக்ஸான் ஏஎம்டியின் விலை ரூ.10.70 லட்சம் (ஆன்-ரோடு) என்ற அளவில் இருந்து தொடங்குகிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவிகளில் இதுவும் ஒன்று என்பதில் எவ்வித ஆச்சரியமில்லை. இதில் இனிமையான விஷயம் என்னவென்றால் பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றை பெறுவதற்கான ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இது 1.2-லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5-லிட்டர் ரெவோடார்க் டீசல் இன்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.
நிசான் மேக்னைட் :
நிசான் மேக்னைட் ஒரு எக்கனாமிகல் ஸ்மால் எஸ்யூவி. நிசான் மேக்னைட்டின் சக்தியின் மூலம் 1.0 லிட்டர் சாதாரணமாக ஆஸ்பிரேட்டட் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையாகவே ஆஸ்பிரேட்டட் செய்யப்பட்ட பெட்ரோல் எஞ்சின் 71பிஹெச்பி மற்றும் 96என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது. இது ஐந்து மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது, டர்போ-பெட்ரோல் இயந்திரம் 99 ஹார்ஸ்பவர் மற்றும் 152 பவுண்டு-ஃபீட் ஆஃப் டார்க்கை உற்பத்தி செய்கிறது. இந்த இன்ஜினில் சிவிடி கியர்பாக்ஸ் மற்றும் ஐந்து மேனுவல் டிரான்ஸ்மிஷன் உள்ளது. இந்த நிசான் மேக்னைட் ஆட்டோமேட்டிக் காரின் விலை ரூ. 9.98 லட்சத்தில்(ஆன்-ரோடு) ஆகும்.
ரெனால்ட் கிகர் :
ரெனால்ட் கிகர் ஆனது மிகவும் குறைந்த விலைகொண்ட காம்பேக்ட் எஸ்யூவிக்களில் ஒன்றாகும். இதன் பிளாட்பாரம், இன்ஜின் மற்றும் பல பண்புகள் நிசான் மேக்னைட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரெனால்ட் கிகருக்கு 1.0-லிட்டர் ஆஸ்பிரேட்டட் மற்றும் 1.0-லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் எஞ்சின் ரசக்தி அளிக்கிறது. இயற்கையாகவே ஆஸ்பிரேட்டட் செய்யப்பட்ட இஞ்சின் ஐந்து-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஐந்து-வேக ஏஎம்டி டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் டர்போசார்ஜ் இன்ஜின் ஆனது ஐந்து-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த குறைந்த விலைக்கொண்ட கிற்பார் ஆட்டோமேட்டிக்க்கின் விலையானது ரூ. 8.47 லட்சம் (ஆன்-ரோடு) ஆகும்.
டாடா பஞ்ச் :
மைக்ரோ எஸ்யூவி என்று சொல்லப்படும் வகைகளில் டாடா பஞ்ச் வாகனமும் ஒன்றாகும். இந்திய சந்தையில் டாடா பஞ்ச் ரூ.8.44 லட்சம் (ஆன்-ரோடு) விலையில் விற்கப்படுகிறது. மேலும் இது 1.2-லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் உடன் ஐந்து-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு சக்தியை பெறுகிறது.
மாருதி சுஸுகி வைடாரா பிரெஸ்ஸா :
இது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யூவி ஆகும், ஏடி ட்ரான்ஸ்மிஷனை கொண்டுள்ள இந்த வகை கார் பணத்தை செலவு செய்வது வாங்குவதற்கு வொர்த் ஆனது. மாருதி சுசுகி வைடாரா பிரெஸ்ஸா 2020 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினைப் பெற்றது ஆனால் டீசல் பயன்பாட்டை பெறவில்லை. இந்த மாருதி சுசுகி வைடாரா பிரெஸ்ஸாவின் விலையானது ரூ.9.98 லட்சம் என்கிற அளவில் இருந்து தொடங்குகிறது.
மேலும் படிக்க | டாடா நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி: ஏப்ரல் முதல் உயர்கின்றன விலைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR