ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த வகை கார்களுக்கு அபராதம் - தப்பிக்க வழி

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 8 ஆண்டுகளுக்கும் பழமையான கார்களுக்கு பிட்னஸ் சர்டிபிகேட் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 31, 2022, 07:20 PM IST
  • வணிக மற்றும் தனியார் வாகனங்களுக்கு கடுமையான விதி
  • ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது
  • பிட்னஸ் சர்டிபிகேட் இல்லையென்றால் கடுமையான அபராதம்
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த வகை கார்களுக்கு அபராதம் - தப்பிக்க வழி title=

பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில், 8 ஆண்டுகள் பழமையான வர்த்தக வாகனங்கள் பிட்னஸ் சோதனை நடத்த வேண்டும்.  இந்த புதிய விதியை 2023 ஏப்ரல் 1 முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.  பிப்ரவரி 2 ஆம் தேதி இந்த அறிவிப்பை வெளியிட்ட மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம்,  இது தொடர்பான ஆட்சேபனைகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.  

வணிக உபயோகத்துக்காக பயன்படுத்தப்படும் 8 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட லாரிகள், பேருந்துகள் போன்றவற்றில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிட்னஸ் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும், அவ்வாறு பரிசோதனைக்குட்படுத்தப்படும் வாகனங்கள் கட்டாயம் பிட்னஸ் சர்டிபிகேட் பெற்றிருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்களில் மட்டுமே இந்த பிட்னஸ் சோதனையை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | OnePlus-ன் புதிய மாடல் : விலை என்ன தெரியுமா.?

பிட்னஸ் சான்றிதழ் பெறாத வாகனங்களை சாலையில் இயக்கினால் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். சர்டிபிகேட் பெறாத வாகனங்கள் சாலையில் செல்ல அனுமதியில்லை எனத் தெரிவித்த அவர், அத்தைகய வாகனங்களே விபத்துகளுக்கும், சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கும் காரணம் என விளக்கமளித்துள்ளார். இத்தகைய வாகனங்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்தும்போது பயணிகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு அடையும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். 

ஸ்கிராப்பேஜ் கொள்கைக்காக, மத்திய அரசு 10 மாநிலங்களில் பிட்னஸ் தேர்வுக்கான ஹைடெக் R&C மையங்களை அமைக்க உள்ளது. இதற்கான அறிவிப்பையும் 22 டிசம்பர் 2021 அன்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த மையங்களில் இரு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், தனியார் மற்றும் வணிக வாகனங்களில் பிட்னஸ் பரிசோதனைக்கு பின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, இந்த வாகனங்களில் சிறப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படும். 

மேலும் படிக்க | Tips & Tricks: போலி பான் கார்டை கண்டறிவது மிகவும் சுலபம்! எளிய வழிமுறைகள்

பியுசி விசாரணையும் இங்கு நடைபெறும். மேலும், உடற்தகுதி தேர்வு நடத்தும் வாகனம் மற்றும் அதன் உரிமையாளர் பற்றிய அனைத்து தகவல்களும் அரசு இணையதளத்தில் கொடுக்கப்படும். இந்த இணையதளம் மத்திய தரவுகளுடன் இணைக்கப்பட்டு, வாகனங்களின் முழுமையான தகவல்கள் நாட்டின் எந்த மாநிலத்திலும் கிடைக்கும். இங்கு பாடி, சேஸ், சக்கரங்கள், டயர்கள், பிரேக்கிங், ஸ்டியரிங் போன்ற பல பாகங்கள் ஹைடெக் இயந்திரங்கள் மூலம் சோதனை செய்யப்படும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News