வாழ்க்கை ஒரு நிமடம் இருப்பது போல மறு நிமிடம் இருப்பதிலை. ஒரு சில முறை வாழ்வில் மாற்றங்களே ஏற்படாதது போல தோன்றும், பல விஷயங்களில் சலிப்பு தட்டி விடும். எப்போதோ ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தால் நம் வாழ்வை நாமே விறுவிறுப்பு இன்றி பார்க்கும் படம் போல பார்த்துக்கொண்டிருப்போம். வாழ்வில் மகிழ்ச்சி அடையவும், நெகடிவாக யோசிக்காமல் இருக்கவும் சில விஷயங்களை நாம் தினசரி நடவடிக்கைகளாக கடை பிடிக்கலாம். இவற்றை நீங்கள் இரவு தூங்க போவதற்கு முன்பு, அதாவது 7 மணிக்கு பிறகு செய்து வந்தால் கண்டிப்பாக மன அளவில் எதையும் தாங்க சக்தி கிடைக்கும். அவை என்ன? இங்கே பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.நினைவுகளை அசை போடுவது..


“நினைவுகளை அசை போடுவது” என்றவுடன் பழைய நினைவுகளை அசைப்போட்டு மனதினை புண்படுத்திக்கொள்ள கூடாது. இரவு தூங்க செல்வதற்கு முன், நீங்கள் படுக்கையில் படுத்திருக்கும் போது அன்றைய நாளில் நடந்த விஷயங்களை நினைத்து பாருங்கள். உங்களை சிரிக்க வைத்த தருணங்கள், சவாலாக இருந்த தருணங்கள் என அனைத்தையும் நினைத்து பாருங்கள். அந்த நாளில் நீங்கள் வெற்றி பெற்றிருந்தாலும், தோல்வி அடைந்திருந்தாலும் அனைத்தையும் நினைத்து பாருங்கள். சின்ன வெற்றியாக இருந்தாலும் அதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும், பெரிய தோல்வியாக இருந்தாலும் அதை நினைத்து துவண்டு விடாமல் அதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று யோசிக்க வேண்டும். 


2.ஸ்க்ரீன்களிடம் இருந்து தள்ளியிருங்கள்:


தூங்க செல்வதற்கு முன்பு பலர் செய்யும் பெரிய தவறு, பல மணி நேரம் சமூக வலைதளங்களில் நேரம் செலவிடுவது அல்லது பொழுதுபோக்கிற்காக தொடர்ந்து சீரிஸ் பார்ப்பது. ஸ்க்ரீனில் இருந்து வெளியேறும் நீள கதிர்கள் உங்களது தூக்கத்தை கெடுத்து விடும் என்கின்றனர் மருத்துவர்கள். தூங்க செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு லேப்டாப், போன் உள்ளிட்டவற்றை தள்ளி வைத்து விட வேண்டும். இதற்கு பதிலாக ஒரு நல்ல புத்தகத்தை படிக்கலாம், சூடாக ஒரு குளியல் போடலாம் அல்லது சிம்பிளான யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இது உடலளவிலும் மனதளவிலும் உங்களை உறுதிப்படுத்த உதவும். 


மேலும் படிக்க | Money Saving Tips: உங்கள் பணத்தை சேமிக்க ஐந்து எளிய வழிகள்!


3.நாளை குறித்த அட்டவணை:


காலையில் எழுந்தவுடன் ‘இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும்..’ என்று ஆயிரம் எண்ணங்கள் நம் மனதில் ஓடுவதை நாம் உணர்ந்திருப்போம். இப்படி, பரபரவென தினமும் எழுந்திருப்பதை தவிர்க்க, முன் தினமே அடுத்த நாளுக்கான அட்டவணைகளை தயார் செய்தல், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாளை செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களை பட்டியலிடுங்கள். இது உங்களது பதற்றத்தை தடுக்க உதவும். உங்களது முழு நாளை நிம்மதியாக எதிர்கொள்ளவும் இது உதவும். 


4.மூச்சு பயிற்சி:


தூங்க செல்வதற்கு முன்பு உங்கள் நாசி வழியாக மூச்சை இழுத்து வாய் வழியாக வெளியே விடுங்கள். இது, அடிக்கடி எங்காவது படிக்கும் டிப்ஸாக இருந்தாலும் மிகவும் பயனுள்ள டிப்ஸ் இது. மூச்சு பயிற்சி செய்வதால் நரம்பு மண்டலம் ரிலாக்ஸ் ஆகும். மன அழுத்தம், உடல் சோர்வு ஆகியவை குறையும். மன அமைதிக்கும் மூச்சு பயிற்சி வழி வகுக்கும். நல்ல தூக்கத்திற்கும் இது உதவும். 


5.பிடித்த விஷயங்களை செய்தல்:


தூங்க செல்வதற்கு முன்பு உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு விஷயத்தை செய்யுங்கள். அது, ஒரு புத்தகத்தின் சில பக்கங்களை படிப்பதாக இருக்கலாம், சரும பாதுகாப்பிற்காக நீங்கள் செய்யும் விஷயங்களாக இருக்கலாம். எதை செய்தாலும் அதை நீங்கள் உங்களுக்காக செய்ய வேண்டும். “எனக்கு நான் முதன்மை” என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளவும் செல்ஃப்-கேர் உதவும். இது, உங்களை பற்றிய நல்ல புரிதலையும் உருவாக்கும். 


மேலும் படிக்க | மகிழ்ச்சியாக வாழ இந்த 6 வழிமுறைகளை உங்கள் வாழ்வில் கொண்டு வாருங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ