Money Saving Tips: உங்கள் பணத்தை சேமிக்க ஐந்து எளிய வழிகள்!

Money Tips: பொருளாதாரத்தின் அடிப்படையில் உங்களால் சேமிக்க முடியாத சூழல் ஏற்பட்டாலும், நீங்கள் எடுக்கும் சில முடிவுகளின் அடிப்படையில் உங்களால் பணத்தை சேமிக்க முடியும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 1, 2021, 06:23 PM IST
  • சில முடிவுகளின் அடிப்படையில் உங்களால் பணத்தை சேமிக்க முடியும்.
  • பலரின் சேமிப்பு கனவை கொரோனா உடைத்தெறிந்து விட்டது.
  • சில வழிகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் பணத்தின் ஒரு பகுதி சேமிக்கலாம்.
Money Saving Tips: உங்கள் பணத்தை சேமிக்க ஐந்து எளிய வழிகள்! title=

Money Tips: சில நேரங்களில் பணத்தை சேமிப்பதில் கடினமான விஷயம். அதுவும் இந்த கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வும், வேலையின்மை காரணமும் பலரின் சேமிப்பு கனவை உடைத்தெறிந்து உள்ளது. பணத்தை எவ்வாறு சேமிப்பது (how to save money) என்பதற்கான சில எளிய வழிகாட்டியை பின்பற்றுவதன் மூலம் உங்கள் பணத்தின் ஒரு பகுதி சேமிக்க உதவும். பொருளாதாரத்தின் அடிப்படையில் உங்களால் சேமிக்க முடியாத சூழல் ஏற்பட்டாலும், நீங்கள் எடுக்கும் சில முடிவுகளின் அடிப்படையில் உங்களால் பணத்தை சேமிக்க முடியும்.

உங்கள் செலவைக் கண்காணியுங்கள் (Where Your Money Goes)
உங்கள் பணம் எங்கு செல்கிறது, எங்கு செலவாகிறது என்று உங்களுக்குத் தெரிந்தால், தேவைப்படும் நேரத்தில் மாற்றங்களைச் செய்வது எளிதாக இருக்கும். உங்கள் பணம் எங்கு செல்கிறது என்பதை அறிய ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் வரை செலவு செய்யப்பட்டதை ஒரு படிவத்தில் எழுதி வைத்துக்கொள்வது நல்லது. அதன்பிறகு செலவு எங்கு செய்யப்பட்டது என்பது குறித்து அறிந்துக்கொள்ளலாம்.

சேமிப்புக்கான பட்ஜெட் தயார் செய்யுங்கள் (Budget for Savings)
ஒரு மாதத்தில் நீங்கள் எவ்வளவு செலவழிக்கிறீர்கள் எங்கு செலவழித்தீர்கள் என்று தெரிந்தவுடன், உங்கள் செலவுகளை குறைக்கவும், வீணான செலவுகளை தவிர்க்கவும் உதவியாக இருக்கும். அதன்பிறகு உங்கள் சேமிப்புக்கான பட்ஜெட்டில் கூடுதலாக பணத்தை சேர்க்க முடியும். உங்கள் செலவுகள் உங்கள் வருமானத்தை எவ்வாறு அளவிடுகின்றன என்பதை உங்கள் பட்ஜெட் குறித்துக்கொள்ள வேண்டும். அது உங்கள் அதிக செலவுகளைக் கட்டுப்படுத்தலாம். மறுபுறம் சேமிப்பு அதிகரிக்கலாம். 

ALSO READ | Money Tips!! வீட்டில் இருந்தபடியே ஒரு மணி நேரத்தில் ரூ. 1000 வரை சம்பாதிக்கலாம்

தவறாமல் சேமிக்கவும் (Save regularly)
ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளப் பணத்தில் இருந்து சிலவற்றை உங்கள் சேமிப்புக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யுங்கள் அல்லது உங்கள் சேமிப்புக் கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் தானியங்கி பரிமாற்றத்தை அமைக்கவும். அதாவது உங்கள் வருமானத்தில் 10 முதல் 15 சதவிகிதம் சேமிப்பதை நோக்கமாகக் கொண்டு சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 

சேமிப்பு இலக்குகளை அமைக்கவும் (Set your savings goals)
பணத்தை சேமிக்க சிறந்த வழிகளில் ஒன்று இலக்கை நிர்ணயிப்பது. நீங்கள் எதற்க்கா சேமிக்க விரும்புகிறீர்கள் என்று யோசிக்கத் தொடங்குங்கள். ஒருவேளை நீங்கள் திருமணம் செலவுகளுக்காக சேமிக்கலாம், விடுமுறைக்கு வெளியே செல்லத் திட்டமிடலாம் அல்லது ஓய்வூ காலத்திற்கு (Saving for Retirement) சேமிக்கலாம். உங்கள் சேமிப்பை பொறுத்து உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை, எவ்வளவு நேரம் சேமிக்கலாம் என்பதை கண்டுபிடிக்கவும். அதன்பிறகு குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளின் அடிப்படையில் சேமிக்கலாம்.

ALSO READ | உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க சக்ஸஸ் ஃபார்முலா.. வெறும் 500 ரூபாயில் தொடங்குகள்

உங்கள் சேமிப்பு அதிகரிப்பதை கவனிக்கவும் (Watch your savings grow)
உங்கள் பட்ஜெட்டை மதிப்பாய்வு செய்து ஒவ்வொரு மாதமும் உங்கள் முன்னேற்றத்தை சரிபார்க்கவும். இது உங்கள் தனிப்பட்ட சேமிப்புத் திட்டத்தின் சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்யவும் உதவுகிறது. பணத்தை எவ்வாறு சேமிப்பது என்பதைப் புரிந்துகொள்வது, உங்கள் இலக்குகளை விரைவாக அடைய, அதற்கான வழிகளைக் கண்டறிய உத்வேகம் அளிக்கும்.

ALSO READ | Demonetisation: தடைசெய்யப்பட்ட 500 ரூபாய் நோட்டு, ஆன்லைனில் 10000 ரூபாய் சம்பாதிக்க உதவும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News