மகிழ்ச்சியாக வாழ இந்த 6 வழிமுறைகளை உங்கள் வாழ்வில் கொண்டு வாருங்கள்

வாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்ற இந்த வழிமுறைகளை உங்கள் தினசரி நடவடிக்கைகளில் உபயோகப்படுத்துங்கள்.   

Written by - Yuvashree | Last Updated : May 4, 2023, 04:07 PM IST
  • மகிழ்ச்சியாக வாழ சிறந்த வழிமுறைகள்
  • உணவு கட்டுப்பாடு, நல்ல தூக்கம் மிகவும் அவசியம்.
  • உடற் பயிற்சி மனதையும் உடலையும் திடப்படுத்தும்.
மகிழ்ச்சியாக வாழ இந்த 6 வழிமுறைகளை உங்கள் வாழ்வில் கொண்டு வாருங்கள் title=

வேலை முடிந்தால் வீடு, வீட்டை விட்டு வெளியாறினாலே சோர்வு என நம்மில் பலர் தினசரி வாழ்வினை எதிர்கொள்கிறோம். இதற்கு காரணம் கால சூழ்நிலைகளும் அன்றாட வாழ்க்கை மாற்றங்களும் மட்டுமல்ல. நாமும்தான். இதனால் பலர் மகிழ்ச்சியே இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இதை எதிர்த்து சில பழக்க வழக்கங்கள் மூலம் நம் வாழ்வில் உள்ள மகிழ்ச்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும். 

நல்ல உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்:

துரித உணவுகளல் சாப்பிடும் போது நன்றாகத்தான் இருக்கும் ஆனால், அப்படி சாப்பிட்டால் உடலுக்கும் கேடு, மனதிற்கும் கேடு. அப்படி உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க டயட் மிகவும் முக்கியம். ப்ரெட்,கோதுமை, ஓட்ஸ் போன்ற உணவு வைகைகளை அளவாக எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு கலாச்சாரத்தை சேர்ந்த உணவுகள் பிடிக்கும் என்றால் கம்பு, கேழ்வரகு, கூழ் ஆகிய உணவு வகைகளை சாப்பிடலாம். இவற்றால் மனதும் உடலும் சுத்தமாக இருக்கும். 

தூக்கம் அவசியம்:

உங்களுக்கு நிம்மதியாக தூக்கம் வந்துவிட்டாலே, நீங்கள் வாழ்க்கையில் பாதி ஜெயித்து விட்டீர்கள் என்று அர்த்தம். உங்கள் தூக்கத்தை முதன்மை படுத்துங்கள். லேட் நைட் உரையாடல்கள், இரவு 12 மணி வரை சீரிஸ் பார்த்து விட்டு தூங்குவது போன்ற பழக்கங்களை விட்டுவிடுங்கள். நல்ல தூக்கத்தை தக்கவைத்து கொள்வது நற்பழக்க வழக்கங்களுள் ஒன்று. உங்கள் தூக்கத்திற்கான அட்டவணையை நீங்களே முடிவு செய்யுங்கள். அப்படி செய்தால், உங்களது வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை நீங்களே கண்கூடாக காண முடியும். 

உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள்:

எடையை குறைக்க மட்டுமல்ல மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைக்கவும் உடற்பயிற்சி உதவும். உங்களது கோபம், துன்பம், துயரம் எல்லாவற்றையும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் சரி செய்யுங்கள். முதலில் 5 நிமிடங்கள் உடற் பயிற்சி செய்ய ஆரம்பித்து மெல்ல மெல்ல உங்களால் எவ்வளவு நேரங்களுக்கு உடலுக்கு வேலை கொடுக்க முடியுமோ அதைக் கொடுங்கள்.

மேலும் படிக்க | EPFO:58 வயதுக்கு முன்னரே பென்ஷன் வேண்டுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?

கெட்ட வட்டாரத்தை கத்தரியுங்கள்:

பள்ளி, கல்லூரி, வேலை பார்க்கும் இடம் என பலர் உங்களை சுற்று இருப்பர். ஆனால் அவர்களெல்லோரும் உங்களது நண்பர்கள் கிடையாது. ஒருவர் உங்களை ஒரு இடத்தில் சங்கடப்படுத்துகிறார்கள் என்றால் அவர்கள் உங்கள் நண்பர்களே கிடையாது. இது போன்று டாக்ஸிக்கான நபர்களை உங்கள் வாழ்விலிருந்து முதலில் கத்தரியுங்கள். இது, கண்டிப்பாக உங்களுக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். 

வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள்:

காலையில் எழுவது, வெளியில் செல்வது, மீண்டும் தூங்குவது என நம் நாள் இதற்குள்ளேயே அடங்கி விடுகிறது. இதை விடுத்து உங்கள் ஒவ்வொரு நாளையும் எப்படி அர்த்தமுள்ளதாக மாற்றலாம் என்று யோசியுங்கள். உதாரணத்திற்கு உங்களுக்கு பிடித்த செயல்களை செய்யலாம். ஏதாவது ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்ளலாம். நீண்ட நாட்களாக சுத்தம் செய்ய வேண்டும் என்ற அறையை சுத்தம் செய்யலாம்.

இப்படி பல விஷயங்கள் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாகவும் அழகானதாகவும் மாற்றும். 

மேலும் படிக்க | பெண்கள் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்யலாம்... எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News