தங்கம் என்றாலே எல்லாருக்கும் அலாதி பிரியம் தான், இந்த உலோகம் மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது.  அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தங்கம் என்றால் அதிக விருப்பம், தங்கம் அழகுபடுத்தும் ஆபரணம் மட்டுமின்றி முதலீடு செய்வதற்கு சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.  பொதுவாக பண்டிகை தினங்களில் தங்கத்தை வாங்குவது மங்களகரமானதாகவும், மகிழ்ச்சியை தருவதாகவும் பார்க்கின்றனர், அதனாலேயே பண்டிகை தினங்களில் பலரும் தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.  தங்கத்தின் விலை குறையும்போது மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக நகைக்கடைகளில் அலைமோதுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தங்கத்தை அணிகலன்களாக மட்டும் வாங்காமல் நாணயங்கள், தங்க கட்டிகள், காகித வடிவில் அல்லது தங்க பரிவர்த்தனை-வர்த்தக நிதிகள் (தங்க ஈடிஎஃப்), இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் தங்கம் வழங்கும் தங்கப் பத்திரங்கள் வடிவில் வாங்குகின்றனர்.  தங்கத்தில் செய்யும் முதலீடு பாதுகாப்பானதாகவும், லாபகரமானதாகவும், நமது எதிர்கால நிதி சிக்கல்களை சமாளிக்கும் வகையிலும் இருக்கிறது.  தங்கத்தில் பலரும் முதலீடு செய்து அதிக தங்கத்தை வாங்கி வைத்திருப்பதிலும் சில சட்ட சிக்கல்கள் இருக்கிறது, ஒருவர் எவ்வளவு தங்கம் சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்கிற வரம்பு இருக்கிறது.  நமது நாட்டில் 1968-ம் ஆண்டு தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் உருவாக்கப்பட்டது, இதன் மூலம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் குடிமக்கள் தங்கம் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.



மேலும் படிக்க | ஆதார் தரவுகளை பாதுகாக்க பயோமெட்ரிக்சை 'லாக்' செய்தால் போதும்: முழு செயல்முறை இதோ


ஆனால் இந்த சட்டம் 1990-ல் ரத்து செய்யப்பட்டுவிட்டது, இதனைத்தொடர்ந்து தற்போது இந்தியாவில் தங்கம் வைத்திருப்பதற்கு எந்தத் தடையும் இல்லை, அதேசமயம் தங்கம் வைத்திருப்பதற்கு சரியான ஆதாரம் மற்றும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.  ஒரு நபரின் பாலினம் மற்றும் திருமண நிலை ஆகியவற்றின் அடிப்படையில் அவர் வைத்திருக்கும் குறிப்பிட்ட அளவு நகையை பறிமுதல் செய்ய முடியாது. அதன் அடிப்படையில் திருமணமான பெண் 500 கிராம் வரை தங்க ஆபரணங்களையும், திருமணமாகாத பெண்கள் 250 கிராம் வரையிலான தங்க ஆபரணங்களையும் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் வைத்திருக்கலாம்.  அதுவே ஆண்கள் 100 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இந்த அளவு வைத்திருப்பவரின் தங்கத்தை வருமான வரித்துறையினரின் சோதனையின் போது தங்கத்தை பறிமுதல் செய்ய முடியாது.


மேலும் தங்கம் வைத்திருப்பதற்கு சரியான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் முறையாக வைத்திருக்கும் பட்சத்தில் தங்கம் வைத்திருப்பதற்கு வரம்பு எதுவுமில்லை.  வருமான வரித்துறையின் சோதனையின் போது வரி செலுத்துவோரின் நகைகளை பறிமுதல் செய்வதிலிருந்து விடுவிப்பதற்காக மட்டுமே இந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.  தங்க முதலீட்டின் மீதான வரி செலுத்துவோர் வைத்திருக்கும் காலத்தைப் பொறுத்தது, தங்கத்தை 3 ஆண்டுகளுக்கு மேல் வைத்திருந்தால், லாங் டெர்ம் கேபிடல் கெயின் மூலமாக 20 சதவீதம் மற்றும் ஷார்ட் டெர்ம் கேபிடல் கெயின் வரி விதிக்கப்படும்.


மேலும் படிக்க | ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்வது எப்படி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ