புதுடெல்லி: வைக்கோலில் இருந்து சேலை தயாரிப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு விவசாயி, நெசவாளியும் கூட... வைக்கோலில் இருந்தும், புடவைகளை நெய்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள வீரண்ணாபலேம் கிராமத்தைச் சேர்ந்த மோவ்வா கிருஷ்ணமூர்த்தி ஒரு சாதாரண மனிதர், நெல்லில் இருந்து கிடைக்கும் வைக்கோலிலிருந்து புடவைகளை நெசவு செய்யும் கலையில் தேர்ச்சி பெற்றவர்.


“நான் சேலை நெசவு செய்ய சாதாரண வைக்கோலைப் பயன்படுத்துகிறேன். ஒரு சேலை தயாரிக்க கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆகும்,”என்கிறார் கிருஷ்ணமூர்த்தி. மூவா கிருஷ்ணமூர்த்தி (Movva Krishnamurthy) வைக்கோலில் இருந்து சேலை, ரவிக்கை போன்றவற்றை தயாரித்து தனது ஷோரூமில் (showroom) விற்பனை செய்கிறார்.  


Also Read | ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் தனுஷ் நடிக்கும் 'கர்ணன்' Teaser வெளியீடு!


Komarinenivaripalem என்ற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் கிருஷ்ணமூர்த்தி, 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த கிருஷ்ண மூர்த்தி, வீட்டில் இருந்த 20க்கும் மேற்பட்ட கால்நடைகளை பராமரிப்பதற்காக படிப்பை நிறுத்தினார். விவசாய வேலையின் ஒரு பகுதியாக, கோகுனாரா, ஜனபனாரா ( gogunara, janapanara) போன்ற தாவர வைக்கோல் பொருட்களை பயன்படுத்தி, கயிறுகள் உருவாக்குவதில் கைதேர்ந்தவரானார்  கிருஷ்ணமூர்த்தி.
  
1959 ஆம் ஆண்டில், அவரது கிராமத்திற்குச் சென்றிருந்த கால்நடை மருத்துவர்கள், மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த ஒரு கால்நடை நிகழ்ச்சியைப் பற்றி தெரிவித்தனர்.  


"போட்டிகளில் கவர்ச்சிகரமான பரிசுகள் இருக்கும் என்று அவர்கள் சொன்னார்கள். கைவேலைப்பாடுகளுக்கும் பரிசு கொடுப்பார்களா என்று கேட்டேன். சரியாக தெரியவில்லை, ஆனால் வித்தியாசமாக எதாவது உருவாக்கினால், பரிசுகளை கிடைக்கலாம் என்று சொல்லி ஊக்கப்படுத்தினார்கள்” என்று தனது இளம்பருவத்தை நினைவு கூர்கிறார் கிருஷ்ணமூர்த்தி.


கிருஷ்ணமூர்த்தி உருவாக்கிய வைக்கோலில் இருந்து உருவாக்கப்பட்ட புதிய மாதிரி கைத்துண்டுகள் போட்டியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவருக்கு பரிசும் கிடைத்தது. 


Also Read | நிர்வாணமாக தெருக்களில் சுற்றித்திரியும் ஆண்; ஏன் தெரியுமா?


பிறகு மாநில அரசு கால்நடை பராமரிப்பு நிகழ்ச்சியில் போட்டியிடுவதற்கான உத்வேகத்தைப் பெற்ற கிருஷ்ணமூர்த்தி,  உலோகம், மரம், தேங்காய் இலைகள், வைக்கோல் மற்றும் பல பொருட்களைப் பயன்படுத்தி சில விவசாயக் கருவிகளை உருவாக்கி குண்டூர் போட்டியில் பங்கேற்றார். 


தற்போது வைக்கோலில் இருந்து சேலைகளை உருவாக்கி புகழ் பெற்றிருக்கும் கிருஷ்ணமூர்த்தி, இதுபோன்ற புதிய முயற்சிகளுக்கு வரவேற்பு இருப்பதாக கூறுகிறார். தன்னுடைய புடவைகளுக்கு மேல்தட்டு மக்களிடையே அதிக தேவை இருப்பதால் பலருக்கு இந்த வேலையை கற்றுக் கொடுத்திருப்பதாகவும் கிருஷ்ண மூர்த்தி கூறுகிறார்.


80 வயதாகும் கிருஷ்ணமூர்த்தி, வைக்கோலில் இருந்து புடவை, ஜாக்கெட், கைப்பை என பல விதமான பொருட்களை தயாரித்து சாதனை படைத்திருக்கிறார்.


Also Read | ரஜினியின் எந்திரன் திரைப்படம் தொடர்பாக Director சங்கருக்கு எதிராக பிடிவாரண்ட்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR