Myths & Facts About Raw Milk Consumption: உடலுக்கு ஊட்டச்சத்துக்களை தரும் முக்கியமான உணவு பொருட்களுள் ஒன்று, பால். பலருக்கு சிறு வயதில் இருந்தே, உடல் வலுபெற வேண்டும் என்பதற்காக பால் கொடுத்து பழக்கப்படுத்துவர். பல நூற்றாண்டுகளாக பால், அனைவருக்கும் ஒரு முக்கிய உணவாக இருந்து வருகிறது. இருப்பினும் பாலின்ஆரோக்கிய நன்மைகள் பற்றிய கருத்துக்கள் மீது மக்களுக்கு எப்போதும் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. இரவில் பால் குடிப்பதால் செரிமான கோளாறு ஏற்படும் கூறுகின்றனர். பால் தொடர்பான இது போன்ற கருத்துக்கள் அனைத்தும் உண்மையா அல்லது வெறும் கட்டுக்கதையா என்று நம்மில் பலர் யோசிப்பதே இல்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பால் குடித்தால் உடல் எடை அதிகரிக்குமா?


பால் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளுள் ஒன்றாக பார்க்கப்படுவது, உடல் எடை அதிகரிப்பு. ஆனால், இது உண்மையல்ல என சில மருத்துவ ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது. ஏனென்றால், பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நல்லது என சில மருத்துவ ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாலில் கொழுப்பை நீக்கி விட்டு குடிப்பதால், உடல் எடையை குறைக்க முடியும் என கூறப்படுகிறது. 


பாலை அதிகம் கொதிக்க வைத்தால் சத்து குறைந்து விடுமா?


சிலர், பாலை அதிகம் கொதிக்க வைப்பதால் அதில் உள்ள ஊட்டச்சத்துகள் குறைந்து விடும் என கூறுவர். இதுவும் பால் மீது பலர் வைத்துள்ள தவறான அபிமானம் ஆகும். பாலை கொதிக்க வைப்பது அதை ஆரோக்கியமான முறையில் குடிப்பதற்காகத்தான் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பாலை கொதிக்க வைப்பதால் அதில் உள்ள பாக்டீரியாக்கள் குறைந்து குடிப்பதற்கு ஏதுவானதாக ஆகிறது. பாலை மீண்டும் மீண்டும் கொதிக்க வைப்பதால் அதன் சத்துக்கள் குறையாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 


பால் எலும்புகளில் இருந்து கால்சியத்தை வெளியேற்றுகிறதா?


பால் எலும்புகளில் இருந்து கால்சியத்தை வெளியேற்றுகிறது என்ற தவறான கருத்து அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் இன்றளவும் இல்லை. உண்மையில், பால் கால்சியத்தின் சிறந்த மூலாதாரமாக விளங்குகிறது. இது எலும்பு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாகவும் விளங்குகிறது. பால் உணவுகளை வழக்கமாக உட்கொள்வது வலுவான எலும்புகளுடன் தொடர்புடையது மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தையும் குறைக்கிறது.


மேலும் படிக்க | Weight Loss Tips: தினமும் 5 நிமிடம் இந்த பயிற்சி செய்தால் போதும்! பாதி எடை குறையும்!


பால் குடித்தால் சளி உருவாகுமா?


பால் குடிப்பதால் சளி உருவாகும் என நினைத்து பலர் பால் குடிப்பதே இல்லை. ஆனால், இருமல் சமயங்களில் பால் குடிப்பதால் சளியை மேலும் தூண்டிவிட வாய்ப்பிருக்கிறது. பாலினால் சளி உருவாகிறது என்பதற்கான எந்த வித அறிவியல் சான்றுகளும் இல்லை என்பதே உண்மை. 


பால் முகப்பருவை ஏற்படுத்துகிறதா?


பால் குடிப்பதால் முகத்தில் பருக்கள் வரும் என்ற கருத்து, பல ஆண்டு காலமாக பலரால் நம்பப்பட்டு வருகிறது. இது, ஒரு சிலரை பொருத்து வேறுபட்டாலும் இதை எந்த ஆராய்ச்சியாலும் நிரூபிக்க இயலவில்லை. முகத்தில் பருக்கள் வருவதற்கு மரபியல் பிரச்சனைகள், ஹார்மோன்கள், உணவு முறை உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம்.


பாலை கொதிக்க வைத்து குடிக்க வேண்டுமா? அப்படியே குடிக்க வேண்டுமா? 


பலருக்கு பாலை கொதிக்க வைத்து குடிப்பதா, அல்லது அப்படியே குடிப்பதான என்ற சந்தேகமும் இருக்கிறது. இது குறித்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் சில உண்மைகள் வெளிவந்துள்ளன. அதில், பாலை அப்படியே குடிப்பதை விட கொதிக்க வைத்து குடித்தால் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலை கொதிக்க வைப்பதால் அதில் உள்ள பாக்டீரியாக்கள் அழிவதாகவும் இதனால் உடலில் புரத சத்து அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், கொதிக்க வைத்த பாலில் வைட்டமின் பி2, பி3, பி6 , ஃபாலிக் அமிலம் போன்ற சத்துக்களும் உள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | குளிர்காலத்தில் காலையில் எழுந்திருக்க முடியவில்லையா? இதோ உங்களுக்கு டிப்ஸ்!


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ