High Heels அணிவதால் பின்பகுதியின் ஷேப் மாறுமா? இதோ அதற்கான பதில்!
பலருக்கு ஹை ஹீல்ஸ் அணியப்பிடிக்கும், ஆனால் இதனால் பலருக்கு பின்பகுதியின் வடிவம் மாறிவிடுமோ என்ற பயம் இருக்கிறது.
பெண்கள் பலருக்கு ஹை ஹீல்ஸ் அணிவது பிடித்த செயலாக இருக்கும். குறிப்பாக க்ராப் டாப்-ஜீன்ஸ், டி-ஷர்ட் போன்ற மேற்கத்திய உடைகளை அணியும் போதுதான் பலர் ஹீல்ஸ்களை அணிந்து வந்தனர். ஆனால், இப்போது அந்த நிலை இல்லை. சுடிதார் டாப், புடவை என எது அணிந்தாலும் அதற்கு ஏற்றார் போல ஹை ஹீல்ஸ்களும் விற்கின்றன. ஆனால், ஒரு சில பெண்கள் இதை அணிய தயங்குவர். காரணம், “ஹை ஹீல்ஸ் அணிந்தால் பின்புற பகுதியின் ஷேப் மாறிவிடும்” என பலர் கூறியதுண்டு. இது உண்மைதானா? ஹை ஹீல்ஸ் பயன்பாட்டால் நமது உடலின் ஒரு பகுதியின் அமைப்பே மாறிவிடுமா என்ன?
ஷேப் மாறுமா?
நீண்ட நேரம் ஹை ஹீல்ஸ் செருப்புகளை அணிவது உங்கள் கால்களின் வடிவத்தை மாற்ற நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஹை ஹீல்ஸ் கால் தசைகளை சுருக்கவும், முட்டிக்கு கீழ் பின்புறத்தில் உள்ள தசைநார்களை இறுக்கமடையவும் காரணமாகிறது. இதனால் வலி மற்றும் அசௌகரியம் போன்றவை ஏற்படும்.
ஹை ஹீல்ஸ்களை தொடர்ந்து உபயோகிப்பதால், கால்களில் வலி ஏற்படுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விடுகிறது. ஆனாலும், இது உங்கள் கால்கள் மற்றும் பின்புறத்தை கவர்ச்சிகரமானதாக மாற்றும் என கூறப்படுகிறது. ஹை ஹீல்ஸ் உபயோகிப்பவர்களுக்கு அவர்களின் கால்களில் உள்ள தசைகள் இறுகி, போடும் உடைகளுக்கு ஏற்ப கச்சிதமாக இருக்கும். ஆனாலும், ஹை ஹீல்ஸ் அணிவதால் ஏற்படும் வலிகளை தவிர்க்க சில வழிமுறைகள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதையும், அவற்றை எப்படி செய்யலாம் என்பதையும் இங்கு பார்க்கலாம் வாங்க.
ஸ்ட்ரெட்சிங் உடற்பயிற்சி:
ஹை ஹீல்ஸ் செருப்புகளை அணிவது உங்கள் கால் தசைகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே அவற்றை தொடர்ந்து வலுப்படுத்துவதும் நீட்டிப்பதும் (stretching) முக்கியம். பின்னங்காலை உயர்த்துவது போன்ற பயிற்சிகளைச் செய்யவும். படியின் விளிம்பில் நின்று உங்கள் கால் முனைகளால் உடலை உயர்த்தவும். பின்னர் மெதுவாக கீழே இறக்கவும். இந்த உடற்பயிற்சி உங்கள் பின்னங்கால்களை குறிவைத்து செய்வதாகும். குதிகால் நடைபயிற்சிக்கான வலிமையை உருவாக்க உதவுகிறது.
மேலும் படிக்க | உடல் பருமனுடன் இருக்கிறீர்களா..? ‘இந்த’ ஆடைகள் உங்களை ஒல்லியாக காட்டும்..!
சமநிலையை மேம்படுத்தவும்:
ஹை ஹீல்ஸ் அணியும் போது உங்கள் உடலில் நல்ல சமநிலையை பராமரிப்பது முக்கியம். இதற்காக ஒற்றைக்காலில் நிற்பது, யோகா பயிற்சிகளை மேற்கொள்வது போன்ற செயல்களை செய்யுங்கள்.வெளியில் ஹீல்ஸ் அணிந்து செல்வதற்கு முன், வீட்டில் ஹீல்ஸ் அணிந்து கொண்டு இந்த ஆசனங்களைப் பயிற்சி செய்வதன் மூலம் படிப்படியாக அசௌகரியத்தை குறைக்கலாம். இது, ஹை ஹீல்ஸ் ஷூக்களால் ஏற்படும் தோரணையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உங்கள் உடலைப் பயிற்றுவிக்கவும் உதவும்.
தோரணையில் கவனம் செலுத்துங்கள்:
ஹை ஹீல்ஸ் அணிவது பெரும்பாலும் நம் உடலின் தோரணை மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது, ஏனெனில் ஹை ஹீல்ஸ் அணிய நாம் முன்னோக்கி சாய்ந்து அல்லது முதுகை அதிகமாக வளைக்க முனைகிறோம். இந்த சிக்கலை தீர்க்க ஒரு பயனுள்ள ஒரு பயிற்சி, ஸ்குவாட்ஸ். உங்கள் கால்களை தோள்பட்டை அகலமாக வைத்து ஒரு சுவருக்கு எதிராக நின்று, நீங்கள் உட்கார்ந்த நிலையில் இருக்கும் வரை கீழே சரியவும், சுவருக்கு எதிராக உங்கள் முதுகை வைத்து, கண்ணுக்கு தெரியாத நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் காட்சிப்படுத்துங்கள்.
மேலும் படிக்க | தொப்பை தெரியாமல் ஆடை அணிவது எப்படி? இதோ சில ஈசி டிப்ஸ்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ