ஆச்சர்ய தகவல்! குதிகால் உயர செருப்புகள் ஆண்களுக்காகத் தான் வடிவமைக்கப்பட்டது..!!

ஹைஹீல்ஸ் எனப்படும்  குதிகால் உயர செருப்புகள் ஆண்களுக்காகத் தான் வடிவமைக்கப்பட்டது என்றால் ஆச்சர்யமாக உள்ளதா.. ஆம் ஆனால், அது தான் உண்மை.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 6, 2021, 03:57 PM IST
  • குதிரை சவாரி மற்றும் போரில் ஈடுபடும் போது ஹை ஹீல்ஸ் பயன்படுத்தப்பட்டது.
  • பாரசீகத்தில் முதன்முதலில் ஹை ஹீல்ஸ் பயன்படுத்தப்பட்டது.
  • 1740 ஆம் ஆண்டு பெண்கள் முதன்முறையாக ஹை ஹீல்ஸ் அணிந்தனர்.
ஆச்சர்ய தகவல்! குதிகால் உயர செருப்புகள் ஆண்களுக்காகத் தான் வடிவமைக்கப்பட்டது..!! title=

ஹை ஹீல்ஸ் பற்றிய சுவாரஸ்யமான கதை: பெண்களுக்கு ஹை ஹீல்ஸ் மிகவும் பிடிக்கும். பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவதன் மூலம் சமூகத்தில் தங்களது அந்தஸ்தை வெளிப்படுத்துகிறார்கள் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பெண்கள் ஆடம்பரமான பார்டி அல்லது பெரிய நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, ​​அவர்கள் ஹை ஹீல்ஸ் செருப்புகளை அணிய விரும்புகிறார்கள் என்றும் ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஹை ஹீல்ஸ் பெண்களுக்காக அல்ல, ஆண்களுக்காகத் தான் வடிவமைக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆண்களுக்காகவே ஹை ஹீல்ஸ் செருப்பு வடிவமைக்கப்பட்டது என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். உண்மையில், முதல் குதிகால் உயர காலணிகள் ஆண்களுக்காக உருவாக்கப்பட்டன, அவர்கள் போர் மற்றும் குதிரை சவாரி செய்யும் போது பயன்படுத்தினார்கள்.  குதிரை சவாரியின் போது குதிகால் காலணிகளை அணிவது பிடியை வலுப்படுத்த பயன்படுகிறது என்பதால் ஆண்கள் ஹை ஹீல்ஸ் காலணிகளை பயன்படுத்தினார்கள்.

ALSO READ | வட கொரியா: தடை செய்யப்பட்ட படத்தை பார்த்த மாணவருக்கு 14 வருட சிறை..!!

ஹை ஹீல்ஸ் 10 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் முறையாக பாரசீக இராச்சியத்தில் ஆண்கள் ஹை ஹீல்ஸ் அணியத் தொடங்கினர். போரின் போது, ​​பாதுகாப்பிற்கு ஹை ஹீல்ஸ் மிகவும் வலுவானதாகவும் சிறந்ததாகவும் கருதப்பட்டது.

1599 ஆம் ஆண்டில், பாரசீக மன்னர் ஷா அப்பாஸ் தனது தூதரை ஐரோப்பாவிற்கு அனுப்பியபோது, ​​அவருடன் உயர் ஹீல் காலணிகள் ஐரோப்பாவை அடைந்தன. இதற்குப் பிறகு, ஹை ஹீல் ஷூக்களை பயன்படுத்துவது உலகம் முழுவதும் அதிகரித்தது. படிப்படியாக, பல நாடுகளில் ஹை ஹீல்ஸ் காலணிகள் பயன்படுத்தத் தொடங்கி, அதை அணிவது பிரபுக்கள் மற்றும் மன்னர்களின் அம்சமாக மாறியது. பிரான்சின் ஆட்சியாளரான லூயிஸ் XIV, 10 அங்குல உயரமான ஹீல் ஷூக்களை அணிந்ததாக வரலாறு கூறுகிறது, ஏனெனில் அவரது உயரம் ஐந்து அடி நான்கு அங்குலங்கள் மட்டுமே.

ALSO READ | அந்தரங்க ‘பகுதிக்குள்’ நுழைந்த இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு; நடந்தது என்ன..!!

ஆனால், இதற்குப் பிறகு 1740 ஆம் ஆண்டு  முதல் முறையாக பெண்கள் ஹை ஹீல்ஸ் அணியத் தொடங்கினார்கள். அப்போதிருந்து, பெண்கள் ஹை ஹீல்ஸை முழுமையாக ஆக்கிரமித்தனர், அடுத்த 50 ஆண்டுகளில், இது ஆண்கள் அல்ல பெண்கள் பயன்படுத்தும் காலணிகள் என்ற நிலையை எட்டி விட்டது. காலப்போக்கில், அதன் வடிவத்திலும் வடிவமைப்பிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஹை ஹீல்ஸ் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்றாலும், அது த்ற்போதும் பலரின் விருப்பமாக உள்ளது. ஹைஹீல்ஸ் அணிவது நேரடியாக இடுப்பு, முதுகெலும்பு, முழங்கால்கள் மற்றும் குதிகால் ஆகியவற்றை பாதிக்கிறது. நீண்ட நேரம் ஹை ஹீல்ஸ் செருப்பு அணிவதால் மூட்டு வலியும் ஏற்படும்.

ALSO READ | விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; விண்வெளி நடையை ஒத்தி வைத்தது NASA!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Telegram Link: https://t.me/ZeeNewsTamil

Trending News