தொப்பை தெரியாமல் ஆடை அணிவது எப்படி? இதோ சில ஈசி டிப்ஸ்..!

Fashion Tips In Tamil: சிலருக்கு என்ன செய்தாலும், என்ன உடை உடுத்தினாலும் வெளியில் தொப்பை தெரியும். இதை சரி செய்வது எப்படி? இதோ சில டிப்ஸ். 

Written by - Yuvashree | Last Updated : Sep 23, 2023, 11:47 AM IST
  • ஒல்லியாக இருக்கும் சிலருக்கும் தொப்பை பெரிதாக இருக்கும்.
  • தொப்பை தெரியும் என்பதற்காக சில உடைகளை உடுத்த முடியாமல் போகலாம்.
  • தொப்பை தெரியாமல் ஆடை அணிவது எப்படி? இதோ டிப்ஸ்.
தொப்பை தெரியாமல் ஆடை அணிவது எப்படி? இதோ சில ஈசி டிப்ஸ்..!  title=

நம்மில் பலருக்கு தொப்பை இருப்பது சகஜம். தொப்பை இருப்பதால் நாம் ஹெல்தியாக இல்லாமல் இருக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. ஒல்லியாக இருக்கும் பலருக்கும் வயிற்றுப்பகுதி மட்டும் கொஞ்சம் பெரிதாக இருக்கும். உடல் பருமனுடன் இருப்பவர்கள் சிலருக்கு தொப்பை பெரிதாக இருக்கும். இந்த தொப்பையினால் பலர் அழகாக இல்லாதது போல உணர்வார்கள். ஆனால், “ஆள் பாதி ஆடை பாதி” என்ற ஒரு பழமொழி இருக்கிறது. என்னதான் அக அழகு பெரிய விஷயம் இல்லை என்றும் சிலர் பேசினாலும் அவர்களில் சிலரே வெளிப்புற தோற்றத்தை வைத்துதான் பலரை எடை போடுகின்றனர். 

எந்த இடத்திற்கு செல்கிறோம், அந்த இடத்திற்கு ஏற்றவாறு உடை உடுத்தியிருக்கிறோமா என்பதை பொறுத்து நமது தன்னம்பிக்கை உயரும். சில நேரங்களில் நமக்கு பிடித்த ஆடைகளை தொப்பை காரணமாக அணிய முடியாமல் போய் விடும். இந்த சமயங்களில் எந்த மாதிரியான ஆடைகளை தேர்ந்தெடுப்பது? தொப்பையை எப்படி மறைப்பது? இதோ சில டிப்ஸ். 

1.சரியான ஆடைகளை தேர்ந்தெடுப்பது:

எப்போதும், எந்த ஆடைகளை தேர்ந்தெடுக்கும் போதும் அதை கண்டிப்பாக போட்டுப்பார்த்து வாங்க வேண்டும். பார்ப்பதற்கு நம் உடல் அளவிற்கு ஏற்றார் போல இருக்கும் துணிகள், நாம் வீட்டிற்கு வந்து உடுத்தி பார்க்கையில் சின்னதாக இருக்கும். அப்படி ட்ரையல் ரூமில் உடை உடுத்துகையில் நமக்கு சில உடைகள் சரியாக இல்லாதது போல தோன்றும். ஆனால், அந்த உடை நன்றாக இருக்கிறது என்பதற்காக அதை வாங்கிவிடுவோம். பின்னர் அதை போட்டால் தொப்பை தெரியும் என்பதற்காக போடாமலேயே வைத்திருப்போம். அதனால், உங்களுக்கு தகுந்த ஆடையை நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுங்கள். ஆன்லைனில் உடை வாங்குகிறீர்கள் என்றால், அதன் ரிவ்யூஸ்களை கவனிக்கவும். இது, தப்பான சைஸில் ஆடை வாங்குவதை தவிர்க்க உதவும். 

மேலும் படிக்க | ஆரோக்கியமான உறவுக்கு இந்த 5 ரகசியங்களை தெரிஞ்சிக்கோங்க!

2. தளர்வான ஆடைகளை வாங்குவது:

தளர்வான ஆடைகள், என்றால் பார்ப்பதற்கே தலையணை உரை போல இருக்கும் தொல தொல ஆடைகள் கிடையாது. நம் உடல் பாகங்களை அப்பட்டமாக பெரிதாக காண்பிக்காத ஆடைகளை தளர்வான ஆடைகள் ஆகும். ஃபிட் ஆன ஆடைகள் இல்லாமல், இது போன்ற தளர்வான ஆடைகள் அணிவதால் தொப்பை இருப்பவர்கள் அதை வெளியுலகிற்கு காண்பிப்பதில் இருந்து தவிர்க்கலாம். இடுப்பு சதை அதிகமாக இருப்பவர்களும் தளர்வான ஆடைகளை அணிந்து கொள்வது சிறந்தது. 

3.ஆடைகளின் நிறம்:

நம் நிறத்திற்கு ஏற்றவாறு உடைகளை உடுத்தும் காலம் எப்போதோ மலையேறி விட்டது. நம் உடலுக்கு எந்த நிறம் பொருந்துகிறதோ அந்த ஆடைகளை நாம் அணிய பழகி கொள்ள வேண்டும். டார்க் நிற உடைகளை அணிவது நமது இடுப்பு சதை, சுருக்கம், தொப்பை ஆகியவற்றை வெளியில் காட்டாமல் இருக்கும். அதனால், கருப்பு, பழுப்பு, சிவப்பு, சாம்பல் நிறம் உள்ளிட்ட நிற ஆடைகளை அணியலாம். இதனால், பார்ப்பவர்களுக்கு நம் ஆடையின் நிறத்தின் மீதே கவனம் இருக்கும் அன்றி உடல் சதையில் இருக்காது. 

4.கோடு போட்ட உடைகள்:

ஆண்கள், பெண்கள் என பாலின பாகுபாடு இன்றி இப்போது கோடு போட்ட ஆடைகள் விற்கப்படுகின்றன. சுடிதார்களிலும் புடவைகளும்தான் பெரும்பாலும் இது போன்ற டிசைன்களை பார்க்க முடியாது. இவ்வாறான கோடு போட்ட உடைகளை அணியும் போது உடல் எடையையும் தொப்பையையும் மறைக்க முடியும். அதிலும் செங்குத்தான நேர்கோடுகள் கொண்ட ஆடைகளை அணிவது உடல் அமைப்பை கொஞ்சம் ஒல்லியாக காண்பிக்கும். கட்டம் போட்ட உடைகளை அணிய விரும்புபவராக இருந்தால் சிறு சிறு கட்டங்கள் நிறைந்த ஆடைகளை அணியலாம். பெரிய கட்டங்கள் கொண்ட ஆடைகளை தவிர்க்கவும். 

மேலும் படிக்க | மனைவியிடம் கூறக்கூடாத ‘அந்த’ 5 விஷயங்கள்..! என்னென்ன தெரியுமா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News