டிஏ உயர்வு, சமீபத்திய செய்தி: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படியில் மிகப்பெரிய மாற்றங்கள் நடக்கவுள்ளன. இது குறித்த பல வித பேச்சுவார்த்தைகள் ஒரு புறம் நடந்துகொண்டிருக்கின்றன. எப்படியும், அகவிலைப்படியின் காரணமாக ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படவுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி


மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படியில் திருத்தம் செய்யப்படுகின்றது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்கள் முதல் இந்த திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன. இதற்கான அறிவிப்புகள் பிந்தைய மாதங்களில் வந்தாலும், அகவிலைப்படி அதிகரிப்பு அரியர்  தொகையுடன் ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றது. அந்த வரிசையில் ஜூலை 2023 முதல் திருத்தப்பட்ட அகவிலைப்படி ஊழியர்களுக்கு கிடைக்கும். இதற்கான அறிவிப்பை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் அரசு வெளியிடக்கூடும். 


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய ஊழியர்களின் அகவிலைப்படியை அரசாங்கம் அதிகரிக்கிறது. ஊழியர்களுக்கு தற்போது 42 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஜூன் மாத ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகள் ஜூலை இறுதியில் வரும். இதன் அடிப்படையில், அடுத்த அகவிலைப்படி அதிகரிப்பு எவ்வளவு இருக்கும் என்பது தெளிவாகும். 


46% அகவிலைப்படி


ஜூலை மாதத்தில் அகவிலைப்படியை அரசு 4 சதவீதம் உயர்த்தினால், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 46 சதவீதமாக உயரும். அதாவது ஜூலை 1 ஆம் தேதி முதல் ஊழியர்களுக்கு 46 சதவீத டிஏ வழங்கப்படும். அதன் பின்னர் 46 சதவிகிதம் என்ற அடிப்படையில் ஜூலை 1 முதல் டிசம்பர் 2023 வரை அரசு அகவிலைப்படியை வழங்கும். அடுத்த டிஏ உயர்வு ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வரும். இருப்பினும், ஜனவரி 1 ஆம் தேதிக்கான டிஏ 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஜனவரி 1, 2024 முதல், அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் அகவிலைப்படி 50 சதவீதமாக இருக்கும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: உங்கள் கணவன் / மனைவி அரசாங்க ஊழியரா? உங்களுக்கு அடிச்சது ஜாக்பாட்


இப்போது ஊழியர்களுக்கு எவ்வளவு அகவிலைப்படி கிடைக்கிறது? 


தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவிகித அகவிலைப்படி கிடைத்து வருகின்றது. ஜனவரி 2023 முதல் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டு 42 சதவிகிதமாக அதிகரித்தது. இந்த மாற்றம் ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வந்தது. அடுத்தபடியாக ஜூலை 2023 முதல் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


அகவிலைப்படி 50% ஆகும்


ஜூலையை தொடர்ந்து ஜனவரி 2023 -லும் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரித்தால், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 50 சதவிகிதத்தை எட்டும். 


மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்?


2016 ஆம் ஆண்டின் குறிப்பாணையில், அகவிலைப்படி (DA) 50% அதாவது அடிப்படை சம்பளத்தில் 50% ஆகும்போது, அது பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அகவிலைப்படி பூஜ்ஜியமான பிறகு, இப்போது 42 சதவீத அகவிலைப்படி கிடைப்பது போல, மீண்டும் அகவிலைப்படியின் சதவிகிதம் 1, 2 என்ற முறையில் தொடங்கும். அகவிலைப்படி 50 சதவீதத்தை அடைந்தவுடன், அது அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும். 


தற்போது, ​​பே-பேண்ட் லெவல்-1 அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ. 18,000 ஆக உள்ளது. இது குறைந்தபட்ச அடிப்படை சம்பளம். ஆனால், இதே கணக்கீட்டை 50% அகவிலைப்படியில் பார்த்தால், ஊழியர்களுக்கு 9,000 ரூபாய் கிடைக்கும். அகவிலைப்படி 50 சதவீதம் ஆனவுடன் அது பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டு அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். அதாவது ரூ.18,000 சம்பளம் ரூ.9,000 அதிகரித்து ரூ.27,000 -ஐ எட்டும். இதற்குப் பிறகு, அகவிலைப்படி ரூ.27,000 -இல் கணக்கிடப்படும். டிஏ 0 ஆன பிறகு, அது 3 சதவீதம் அதிகரித்தால், அவர்களது சம்பளத்தில் மாதம் 810 ரூபாய் அதிகரிக்கும்.


மேலும் படிக்க | 8th Pay Commission: சம்பளத்தில் பெரிய ஏற்றம்.. ஊழியர்கள் காத்திருக்கும் ‘அந்த’ அறிவிப்பு விரைவில்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ