8th Pay Commission 44.44% ஊதிய உயர்வு: விரைவில் 4 நல்ல செய்திகள்... ஊழியர்கள் ஹேப்பி!!

8th Pay Commission: எட்டாவது சம்பள கமிஷன் அமலுக்கு வந்தால், ஊழியர்களின் சம்பளம் இரண்டரை மடங்குக்கு மேல் உயரும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 15, 2023, 02:33 PM IST
  • பண்டிகைக் காலத்தில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு.
  • விரைவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்கும்.
  • 18 மாத டிஏ அரியர் தொகை குறித்த பெரிய அப்டேட்.
8th Pay Commission 44.44% ஊதிய உயர்வு: விரைவில் 4 நல்ல செய்திகள்... ஊழியர்கள் ஹேப்பி!! title=

8வது ஊதியக் குழுவின் சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக சில நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. அவற்றில் முக்கியமானது 8 ஆவது ஊதியக்குழுவின் அமலாக்கம் ஆகும். எட்டாவது ஊதியக் குழு தொடர்பாக மத்திய அரசால் எந்த விதமான முன்மொழிவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. எனினும், 2024 ஆம் ஆண்டில் எட்டாவது ஊதியக் குழுவை அரசாங்கம் கொண்டு வரக்கூடும் என்றும் 2026 ஆம் ஆண்டில் அது செயல்படுத்தப்படும் என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான வலுவான காரணங்களும் உள்ளன. அவற்றை பற்றியும், இன்னும் சில நாட்களில் கிடைக்கவுள்ள சில முக்கிய செய்திகள் பற்றியும் இந்த பதிவில் காணலாம்.  

எட்டாவது சம்பள கமிஷன் அமலுக்கு வந்தால், ஊழியர்களின் சம்பளம் இரண்டரை மடங்குக்கு மேல் உயரும். இதன் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

அகவிலைப்படி அதிகரிப்பு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் பெரிய பரிசு கிடைக்கவுள்ளது. ஜூலை 31ஆம் தேதி அகவிலைப்படி உயர்வு குறித்து பெரிய முடிவு எடுக்கப்படும். உண்மையில், ஜூலை 1, 2023 முதல் பெறப்படும் அகவிலைப்படியின் இரண்டாம் பாதிக்கான ஏஐசிபிஐ குறியீடு ஜூலை 31 அன்று வெளியிடப்படும். இதனுடன், அகவிலைப்படியை கணக்கிடுவதில் இது ஒரு முக்கிய பங்களிப்பாக கருதப்படுகிறது.

பண்டிகைக் காலத்தில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு

ஜூன் மாதத்துக்கான ஏஐசிபிஐ குறியீடு வெளிவந்தவுடன், ஊழியர்களுக்கு எத்தனை சதவீதம் டிஏ பலன் வழங்கப்படும் என்பது முடிவு செய்யப்படும். இறுதி எண் வெளியானவுடன், அகவிலைப்படி அதிகரிப்பு பண்டிகை காலத்தில் அறிவிக்கப்படலாம். இதனுடன், அரசு ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையும் வழங்கப்படும். இருப்பினும், இந்த அரையாண்டுக்கு, அகவிலைப்படியில் 4 சதவீதம் அதிகரிப்பு நிர்ணயிக்கப்படும் என நம்பப்படுகிறது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகின்றது. 

ஏஐசிபிஐ குறியீடு

இதற்கு முன்னர் ஏப்ரல், மே மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ஏஐசிபிஐ குறியீடு 45.50 ஆக அதிகரித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டு மொத்த அகவிலைப்படி 4 சதவிகிதம் உயரும் என நம்பப்படுகிறது. குறியீடு 134.7 புள்ளிகளாக உள்ளது. இதில் 0.50 புள்ளிகள் உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் ஜூன் மாதத்திற்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை. ஜூன் மாதத்திற்கான புள்ளிவிவரங்கள் ஜூலையில் வெளியிடப்படும். அத்தகைய சூழ்நிலையில், குறியீட்டில் சிறிது அதிகரிப்பு இருந்தாலும், ஜூலை 2023க்கான ஊழியர்களின் அகவிலைப்படியை 46% ஆக அதிகரிக்கக்கூடும். முன்னதாக மார்ச் 2023 இல், ஜனவரி 2023 முதலான அகவிலைப்படி அதிகரிப்பி பற்றிய அறிவிப்பு வெளியானது. இரண்டாவது பாதிக்கான அகவிலைப்படி அதிகரிப்பு செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் மோடி அரசாங்கத்தால் அறிவிக்கப்படலாம்.

விரைவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்கும்

மறுபுறம், மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் விரைவில் பெரிய சலுகைகளை வழங்கக்கூடும். அதோடு அவர்களின் சம்பளத்திலும் பெரிய உயர்வைக் காணலாம். 8வது ஊதியக்குழு விரைவில் அமைக்கப்படலாம் என நம்பப்படுகிறது. தேர்தலுக்கு முன் புதிய ஊதியக்குழு அமைப்பது குறித்து அரசு சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். இதனுடன், ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டரும் அதிகரிக்கலாம். முன்னதாக 2016-ம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் பெரிதாக உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில் ஏழாவது ஊதியக் குழுவும் அமல்படுத்தப்பட்டது. ஏழாவது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டதன் மூலம், ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 6,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க | 8th Pay Commission விரைவில்.... ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும்!!

ஃபிட்மெண்ட் ஃபாக்டரை உயர்த்த கோரிக்கை
 
ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் தொடங்கியுள்ளது. இம்முறை ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.68 மடங்கு அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 2017ல் இருந்து விடுக்கப்பட்டு வரும் வரும் இந்த கோரிக்கை குறித்து 2024 -இல் அரசு முக்கிய முடிவு எடுக்கலாம். 2024 ஆம் ஆண்டு இது அறிவிக்கப்பட்டால், 2026ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தலாம். எனினும், தற்போது, ​​இது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

குறைந்தபட்ச ஊதியம் 26 ஆயிரம் ரூபாயாக உயரக்கூடும்

அரசு 8வது ஊதியக் குழுவை பழைய ஊதியக்குழுவின் அடிப்படையிலேயே அமைத்தால், அப்போது ஊதியத்தின் அடிப்படை ஃபிட்மெண்ட் பேக்டராக இருக்கும். இதன் அடிப்படையில் ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 மடங்காக உயர்த்தப்படலாம். இதன் பிறகு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தில் 44.44 சதவீதம் உயர்வு இருக்கும். இதன் மூலம் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 26 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும்.

18 மாத டிஏ அரியர் தொகை குறித்த பெரிய அப்டேட்

மத்திய அரசு ஊழியர்கள் தங்களது 18 மாத அரியர் தொகைக்கான கோரிக்கை குறித்து அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகின்றனர். கொரோனா காலத்தின் அசாதாரண நிலையை சமாளிக்க, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் 18 மாத அகவிலைப்படி அதிகரிப்பை முடக்கியது. ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை 18 மாதங்களளுக்கான அரியர் தொகையை வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

நிலுவைத் தொகைக்காக பல ஊழியர் அமைப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளதாக மத்திய அரசு தெளிவுபடுத்திய போதிலும், அரசு தரப்பில் உறுதியான உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. சமீபத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் நிலுவைத் தொகையை வழங்க அரசு மறுத்துவிட்டது. மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை FRBM சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட இரண்டு மடங்கு அதிகமாகவே உள்ளது என்று நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார். பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு, 18 மாத அகவிலைப்படிக்கான முக்கிய ஏற்பாடுகள் ஊழியர்களால் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இதை ஏற்று 18 மாத அரியர் தொகையை அரசு அளிக்க முன்வந்தால், அதனால் 47 லட்சம் பணியாளர்கள் உட்பட 62 லட்சம் பேருக்கு பலன் கிடைக்கும். 

மேலும் படிக்க | 7th Pay commission: ஊழியர்களுக்கு ஜூலை 31ம் தேதி ஜாக்பார்ட்! DA இவ்வளவு அதிகரிக்கும்?

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News