8th Pay Commission விரைவில்.... ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும்!!

8th Pay Commission: ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பெரும் நன்மைகளைப் பெற உள்ளனர். 8 ஆவது சம்பள கமிஷன் தொடர்பாக அரசு தரப்பில் பெரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 13, 2023, 09:05 AM IST
  • ஊதியத்தில் பெரும் உயர்வு இருக்கும்.
  • குறைந்தபட்ச ஊதியம் 26 ஆயிரம் ரூபாயாக உயரக்கூடும்.
  • 8வது ஊதியக்குழுவை அரசு எப்போது அமல்படுத்தும்?
8th Pay Commission விரைவில்.... ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும்!!  title=

8வது ஊதியக் குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த செய்தி முக்கியமானதாக இருக்கும். ஆம்!! உங்கள் குடும்பத்தின் மாத வருமானம் அதிகரிக்கவுள்ளது. சம்பமம் அதிகரிக்குமா என்ற ஏக்கத்தில் உள்ள ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மிக விரைவில் உங்கள் சம்பளத்தில் பம்பர் அதிகரிப்பு இருக்கும். இதனுடன், ஓய்வூதியதாரர்களும் பெரும் நன்மைகளைப் பெற உள்ளனர். 8 ஆவது சம்பள கமிஷன் தொடர்பாக அரசு தரப்பில் பெரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8 ஆவது ஊதியக் குழுவுக்காக நீங்களும் காத்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு சிறந்த செய்தி கிடைத்துள்ளது.

8 ஆவது ஊதியக்குழு அமைக்கப்படும்

மிக விரைவில் 8 ஆவது ஊதியக் குழுவை அரசு அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அடுத்த ஆண்டு மத்திய ஊழியர்களின் சம்பளம் 44 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும் என நம்பப்படுகிறது. இதனுடன், ஃபிட்மென்ட் ஃபாக்டரைத் தவிர, வேறு சில ஃபார்முலாவில் சம்பளம் மதிப்பாய்வு செய்யப்படக்கூடும். அதே சமயம், இந்த சம்பள கமிஷனுடன் ஒப்பிடுகையில் அடுத்த சம்பள கமிஷன் அதாவது 8 ஆவது சம்பள கமிஷனில் பல வித மாற்றங்களைக் காணலாம்.

ஊதியத்தில் பெரும் உயர்வு இருக்கும்

7வது ஊதியக் குழுவில், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 மடங்கு இருந்தது, அதன் பிறகு ஊழியர்களின் சம்பளம் 14.29 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த உயர்வின் காரணமாக, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 18,000 ஆனது. அதே நேரத்தில், 8வது ஊதியக் குழுவின் கீழ், இம்முறை ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதன் பிறகு ஊழியர்களின் சம்பளம் 44.44 சதவீதம் உயரும். அதே சமயம் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ. 26 ஆயிரமாக அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க | 7th Pay commission: ஊழியர்களுக்கு ஜூலை 31ம் தேதி ஜாக்பார்ட்! DA இவ்வளவு அதிகரிக்கும்?

குறைந்தபட்ச ஊதியம் 26 ஆயிரம் ரூபாயாக உயரக்கூடும்

அரசு 8வது ஊதியக் குழுவை பழைய ஊதியக்குழுவின் அடிப்படையிலேயே அமைத்தால், அப்போது ஊதியத்தின் அடிப்படை ஃபிட்மெண்ட் பேக்டராக இருக்கும். இதனடிப்படையில் ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 மடங்காக உயர்த்தப்படலாம். இதன் பிறகு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தில் 44.44 சதவீதம் உயர்வு இருக்கும். இதன் மூலம் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 26 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும்.

8வது ஊதியக்குழுவை அரசு எப்போது அமல்படுத்தும்

தற்போது, ​​8 ஆவது கமிஷன் தொடர்பாக, மத்திய அரசு எந்த முன்மொழிவையும் முன்வைக்கவில்லை. மறுபுறம், அரசாங்கம் 2024 ஆம் ஆண்டில் 8 வது ஊதியக் குழு பற்றிய பரிந்துரைகளை முன்வைக்கக்கூடும் என்றும் அது 2026 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படலாம் என்று, அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை நடைமுறைப்படுத்த 2024-ம் ஆண்டு அடுத்த ஊதிய கமிஷன் அமைக்கப்படலாம். மறுபுறம், அடுத்த ஆண்டு நாட்டில் பொதுத் தேர்தல் நடக்கவுள்ளதால், மத்திய அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில், அரசாங்கம் ஊழியர்களுக்கு மிக விரைவில் ஒரு பெரிய பரிசை வழங்கக்கூடும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமலுக்கு வருகிறது

2013ல், 7வது சம்பள கமிஷன் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2016-ம் ஆண்டு அது அமல்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான உயர்வு ஏற்பட்டது. தற்போது ஊழியர்களின் அதிர்ஷ்டம் மீண்டும் ஜொலிக்கப் போகிறது. புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமல்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | 7th Pay Commission அரசின் பரிசு: ஜூலை 31 வரும் நல்ல செய்தி... பம்பர் டிஏ ஹைக், சம்பள உயர்வு!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News