இந்தியன் ரயில்வே உணவு பிளாசாக்கள்: ரயில்வே பயணிகளுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. பயணிகளின் பயணத்தை பாதுகாப்பானதாகவும் வசதியாகவும் மாற்ற இந்தியன் ரயில்வே இப்போது ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு சிறந்த உணவு மற்றும் அனுபவத்தை வழங்குவதற்காக உணவு பிளாசாக்கள், துரித உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களை திறக்க இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன் மூலம், பயணிகளுக்கு முக்கியமான இந்த வசதி கிடைக்கும். எனினும், இதனால் ஐஆர்சிடிசி பெரும் நஷ்டத்தை சந்திக்கும்.


எங்கள் கூட்டாளர் இணையதளமான ஜீ பிசினஸ்-இன் ஆய்வுக் குழு இது பற்றிய விரிவான தகவலை அளித்துள்ளது. இந்த புதிய முயற்சி மூலம் ஐஆர்சிடிசி-யின் வருவாய் எவ்வாறு பாதிக்கப்படும் என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஐஆர்சிடிசி-க்கு பொறுப்பு வழங்கப்பட்டது


நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த முடிவு ஐஆர்சிடிசி-இன் எதிர்மறையான வளர்ச்சியைக் காட்டுகிறது. இந்தியன் ரயில்வே ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. 17 ரயில்வே மண்டலங்களுக்கு உணவு பிளாசாக்கள், துரித உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களை அமைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இப்போது நீங்கள் ரயில் நிலையங்களில் உள்ள ஃபுட் பிளாசாக்களில் இருந்து சுவையான உணவைப் பெற முடியும். முன்னதாக இந்த உரிமை ஐஆர்சிடிசியிடம் இருந்தது.


மேலும் படிக்க | ATM விதிமுறைகளை மாற்றிய SBI வங்கி; புது வழிமுறை இதோ 


ஐஆர்சிடிசி-க்கு அதிர்ச்சி


முன்னதாக ஐஆர்சிடிசி-க்கு ஒதுக்கப்பட்ட இடம் இதுவரை காலியாக இருந்ததால், அங்கு வருமானம் ஈட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரயில்வே பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்தது. இது தவிர, அதிக உரிமக் கட்டணம் மற்றும் ரயில் நிலக் கட்டணங்கள் காரணமாக, ஐஆர்சிடிசியால் ஃபுட் கோர்டை அமைக்க முடியவில்லை. 'மோசமான இடம், செயல்பாட்டு மற்றும் நிதி சாத்தியக்கூறு இல்லாததால், இங்கு அமைப்பதில் சிரமங்கள் இருந்தன'. என ஐஆர்சிடிசி கூறியது.


எவ்வளவு நஷ்டம் ஏற்படக்கூடும்?


இதனால் ஐ.ஆர்.சி.டி.சி-க்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் கோவிட் 19 இன் முதல் நிதியாண்டில் ஐஆர்சிடிசி லாபம் ஈட்டியது, ஆனால், கொரோனா காரணமாக, நிதியாண்டு 2020 (FY20) மற்றும் நிதியாண்டு 2021 (FY21) இல் வருமானம் கணிசமாகக் குறைந்து காணப்பட்டது. ஏனெனில் ஊரடங்கு காரணமாக ரயில்வே சேவை தடைபட்டது. 


அத்துடன் அந்த நேரத்தில் கேட்டரிங் நிறுத்தப்பட்டது. ஆனால், டிசம்பர் மாதத்தில், நிலைமை சீரடைந்த பிறகு, 'ரெடி டு ஈட்' பிரிவு மற்றும் ரயில்வே பேண்ட்ரியின் வருமானம் அதிகரித்து வந்தது. ஐஆர்சிடிசி தரவுகளின்படி, FY20, FY21 இல், கேட்டரிங் மூலம் கிடைக்கும் வருமானம் முறையே 17 சதவீதம், 28 சதவீதம் குறைந்துள்ளது.


அதே சமயம், ரயில்வே-யின் இந்த முடிவிற்குப் பிறகு, ஃபுட் பிளாசா கட்டப்பட்ட பிறகு, ரயில்வே பேண்ட்ரி மற்றும் ரெடி டு ஈட் வருமானத்தில் அதிக தாக்கம் இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.


மேலும் படிக்க | இந்த ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் உயர்வு, ஓய்வு பெறும் வயதும் நீட்டிக்கப்பட்டது 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR