முன்பதிவில்லா ரயில் பயணம் எப்போது? இந்திய ரயில்வே

குறைந்த கட்டணத்தில் நீண்ட தூரம் ரயில் பயணிகள் பயணிப்பதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுகிறது இந்தியன் ரயில்வே.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 04:45 PM IST
  • முன்பதிவில்லா ரயில் பயணம் எப்போது?
  • விரைவில் அறிவப்பு வெளியாகிறது
  • பொதுப்பெட்டிகள் இணைப்பு பணி தொடக்கம்
முன்பதிவில்லா ரயில் பயணம் எப்போது? இந்திய ரயில்வே title=

ஹோலிப் பண்டிகை தொடங்க உள்ளதையொட்டி, ரயில் பயணிகளுக்கான மகிழ்ச்சியான செய்தியை இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வேயின் இந்த அறிவிப்பின்படி, முன்பைவிட குறைந்த கட்டணத்தில் ரயில் பயணிகள் பயணிக்க முடியும். அந்த அறிவிப்பு என்னவென்றால், முன்பதிவில்லா ரயில் பயணம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக முன்பதிவில்லா ரயில் பயணம் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. 

மேலும் படிக்க | OPS vs NPS: பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள நன்மைகள் என்ன, விவரம் இதோ

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் உட்ச்சத்தை தொட்டதால், ரயில் பயணங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் நீக்கப்பட்டு, முன்பதிவு செய்வோர் மட்டுமே ரயில்களில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது மார்ச் 2020 ஆம் ஆண்டு இந்த உத்தரவு அமலுக்கு வந்திருந்தது. இந்நிலையில், இந்த அறிவிப்பு விரைவில் திரும்ப பெறப்பட உள்ளது. 

இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்பதிவில்லா ரயில் பயணங்கள் இல்லாததால் நாடு முழுவதும் உள்ள மக்கள் போக்குவரத்து பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வந்தனர். குறிப்பாக மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் சுமையாக இருந்தது. இப்போது இந்த தடை நீக்கப்பட்டு, பொதுப்பெட்டிகளில் பயணிக்கக்கூடிய அனுமதி வழங்கப்பட இருப்பதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல், சர்வதேச விமானப்போக்குவரத்தும் மார்ச் 27 ஆம் தேதி முதல் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க | வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: இனி இந்த வசதியை ஆதார் மூலமே பெறலாம்

பொதுப்பெட்டிகளில் பயணிக்கக்கூடிய அனுமதி கொடுக்கப்பட்டவுடன் ரயில்நிலையங்களுக்கு நேரடியாக சென்று டிக்கெட் கவுண்டர்களில் டிக்கெட் எடுத்து உடனடி பயணத்தைக் கூட நீங்கள் மேற்கொள்ள முடியும். உடனடி பயணம் மேற்கொள்ள இருப்பவர்களுக்கும் இந்திய ரயில்வேயின் இந்த அறிவிப்பு வரப்பிரதசாதமாக இருக்கும். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News