இந்த ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் உயர்வு, ஓய்வு பெறும் வயதும் நீட்டிக்கப்பட்டது

Salary Hike: அரசு, ஊழியர்களின் ஓய்வு வயது மற்றும் சம்பளம் இரண்டையும் உயர்த்தியுள்ளது. அரசாங்கம், ஊழியர்களின் சம்பளத்தை 23.29% உயர்த்தியுள்ளது

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 15, 2022, 10:35 AM IST
  • அரசு ஊழியர்களின் ஊதியத்தில் உயர்வு.
  • ஊழியர் சங்கத்தின் ஒப்புதலுடன் எடுக்கப்பட்ட முடிவு.
  • நிலுவையில் உள்ள டிஏவும் வழங்கப்படும்.
இந்த ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் உயர்வு, ஓய்வு பெறும் வயதும் நீட்டிக்கப்பட்டது title=

அரசு ஊழியர்கடுளுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. அரசு, ஊழியர்களின் ஓய்வு வயது மற்றும் சம்பளம் இரண்டையும் உயர்த்தியுள்ளது. அரசாங்கம், ஊழியர்களின் சம்பளத்தை 23.29% உயர்த்தியுள்ளது, அதே நேரத்தில் ஓய்வு பெறும் வயது 60 வயதிலிருந்து 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான செய்தி எந்த மாநில ஊழியர்களுக்கு?

ஆந்திர மாநில அரசு தனது ஊழியர்களுக்கு இந்த மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. மாநில அரசு தனது ஊழியர்களுக்கு இரட்டை பரிசை வழங்கியுள்ளது. ஊழியர்களின் சம்பளம் 23.29% அதிகரித்துள்ளது. இதனுடன், ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதும் 60 வயதிலிருந்து 62 ஆக உயர்ந்துள்ளது. புதிய சம்பளம் ஜனவரி 2022 முதல் வழங்கப்பட்டுள்ளது. 

ஊழியர் சங்கத்துடன் சந்திப்பு

ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் நடத்திய கூட்டத்தில் கலந்தாலோசித்து இந்த முடிவை எடுத்தார். தற்போது உயர்த்தப்பட்ட ஊதியத்தின் பலனை அரசு ஊழியர்கள் பெறுவார்கள் என்று முதல்வர் அறிவித்தார். இக்கூட்டத்தில் ஊழியர்களின் மற்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண இந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க | புதிய விதி அமல்; பழைய வாகனங்கள் மறுபதிவு கட்டணம் 8 மடங்கு உயரும்! 

ஊழியர்களுக்கு எப்போது பணம் கிடைக்கும்

இந்த மாற்றம் ஜூலை 1, 2018 முதல் அமலுக்கு வரும் என்றும், இது தொடர்பான பணப் பலன்கள் ஏப்ரல் 1, 2020 முதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட சம்பளத்துடன், புதிய சம்பளம் 2022 ஜனவரி 1 முதல் கிடைக்கும். அதாவது, ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு உள்ளது. அரசாங்கத்தின் இந்த முடிவால் ஆண்டுக்கு ரூ.10,247 கோடி கூடுதல் நிதிச்சுமை அரசாங்க கருவூலத்துக்கு ஏற்படும் என அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள டிஏவும் வழங்கப்படும்

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, நிலுவையில் உள்ள அகவிலைப்படியும் (டிஏ) ஜனவரி மாதச் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும் என்று ஊழியர் சங்கங்களுக்கு முதல்வர் தெரிவித்தார். இதனுடன், வருங்கால வைப்பு நிதி, காப்பீடு, விடுப்பு பணமாக்குதல் மற்றும் நிலுவையில் உள்ள பிற கொடுப்பனவுகள் ஆகியவை ஏப்ரல் மாதத்திற்குள் முழுமையாக கொடுத்து முடிக்கப்படும். அதாவது, இந்தக் கூட்டத்தில் அரசு ஊழியர்களின் சம்பளம் தொடர்பான பல பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டது. 

மேலும் படிக்க | பான் கார்டு பயன்படுத்துவோருக்கு முக்கிய தகவல்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News