இந்தியன் ரயில்வே: ரயில்வே பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி வந்துள்ளது. நீண்ட தூர ரயில்களில் பயணத்தின் போது போர்வைகள் மற்றும் படுக்கை வசதிகள் மீண்டும் தொடங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. ரயில்வே சார்பில், ரயில்களின் ஏசி பெட்டிகளில் போர்வைகள் மற்றும் லினன் (படுக்கைக்கான விரிப்புகள்) வழங்கும் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
உடனடியாக அமலுக்கு கொண்டு வர உத்தரவு
ரயில்வே வழங்கி வந்த இந்த வசதி 2020 ஆம் ஆண்டு கோவிட் காரணமாக நிறுத்தப்பட்டது. அனைத்து ரயில்வே மண்டல பொது மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் அளித்துள்ள உத்தரவில், 'ஏசி' பெட்டிக்குள் படுக்கை விரிப்பு, போர்வை, திரைச்சீலைகள் வழங்கும் பணியை உடனடியாக துவக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசதிகள் படிப்படியாக மீட்டெடுக்கப்படுகின்றன
கோவிட்-19 பாதிப்பு அதிகரித்ததை அடுத்து, 2020ல் முன்னெச்சரிக்கையாக ஏசி பெட்டிகளில் கொடுக்கப்பட்ட இந்த வசதியை ரயில்வே நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுநோய்களின் போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க | ரயில்களின் 5 இலக்க எண்ணில் மறைந்திருக்கும் சுவாரஸ்ய தகவல்கள்!
முன்பதிவு செய்யப்படாத பெட்டியிலும் பயணம் செய்யலாம்
சமீபத்தில், மார்ச் 27 முதல் சர்வதேச விமானங்களைத் தொடங்க அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தது. முன்னதாக, ரயிலில் முன்பதிவு செய்யப்படாத கோச்களை இணைக்கவும் ரயில்வேயால் ஒரு பெரிய முடிவு எடுக்கப்பட்டது. ரயில்வேயின் இந்த நடவடிக்கையால் கோடிக்கணக்கான பயணிகள் முன்பு போல் மலிவான டிக்கெட்டில் பயணம் செய்ய முடியும். இப்போது ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்பு, போர்வைகள், திரைச்சீலைகள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பயணிகளுக்கு மிகுந்த நிம்மதி கிடைக்கும்.
போர்வைகள், கம்பளிகள், படுக்கை விரிப்புகள் ஆகியவை கிடைக்காததால், நீண்ட தூர பயணம் செல்லும்போது, பயணிகள் இவற்றையும் சுமந்துகொண்டு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. உணவு, கம்பளி, படுக்கை விரிப்பு போன்ற சேவைகள் தவிர பயணிகளுக்கான மற்ற வசதிகள் இன்னும் சீரமைக்கப்படவில்லை.
மேலும் படிக்க | ரயில் நிலையத்தில் இனி விமான டிக்கெட் புக் செய்யலாம், PAN, Aadhaar செய்யலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR