PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி: இந்த பலன் கிடைக்கும், விவரங்கள் இதோ
New PF withdrawal Rule: ஊதியம் பெறும் வகுப்பினரின் சம்பளத்தில் ஒரு பகுதி அவர்களின் இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதற்கு அரசு நல்ல வட்டியை கொடுக்கிறது.
புதிய பிஎஃப் வித்ட்ராயல் விதி: நீங்கள் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இப்போது நீங்கள் பிஎஃப் இருப்பை திரும்ப எடுக்கும்போது, TDS இல் நிவாரணம் கிடைக்கும். மத்திய பட்ஜெட் 2023 இல், நிதி அமைச்சர், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து (இபிஎஃப்) வருங்கால வைப்பு நிதியை (பிராவிடன்ட் ஃபண்ட் அல்லது பிஎஃப்) திரும்பப் பெறுவதற்கான விதிகளில் மாற்றத்தை அறிவித்துள்ளார். இப்போது சந்தாதாரர்கள் சில காரணங்களால் தங்கள் பிஎஃப் இருப்பை 5 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்க விரும்பி, பான் கார்டு இணைக்கப்படாமல் இருந்தால், அத்தகைய சூழ்நிலையில் இப்போது 30% க்கு பதிலாக 20% TDS செலுத்த வேண்டும். இந்த புதிய விதிகள் 1 ஏப்ரல் 2023 முதல் அமலுக்கு வரும். இருப்பினும், இணைக்கப்படாத பான் கார்டு வைத்திருப்பவர்களுக்குதான் இந்த விதிகள் பொருந்தும்.
முன்பை விட குறைவான டிடிஎஸ்
பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் (EPF) முதலீடு செய்வது எந்த ஒரு பணியாளருக்கும் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. ஊதியம் பெறும் வகுப்பினரின் சம்பளத்தில் ஒரு பகுதி அவர்களின் இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதற்கு அரசு நல்ல வட்டியை கொடுக்கிறது. பிஎஃப் இருப்பு எதிர்காலத்தில் நிதி நெருக்கடிகள் ஏற்பட்டால், அந்த சூழ்நிலைகளில் உதவுகிறது.
பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தேவை அல்லது சிரமம் ஏற்படும் சமயங்களில் பல முறை, 5 ஆண்டுகளுக்கு முன்பே பிஎஃப் இல் இருந்து தொகையை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இதுபோன்ற நேரங்களில் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் டிடிஎஸ் செலுத்த வேண்டும். இதன் போது, எந்த பிஎஃப் கணக்குகள் பான் கார்டுடன் இணைக்கப்படாமல் உள்ளதோ, அவர்கள் முன்பை விட குறைவான TDS செலுத்தினால் போதும். இதன் காரணமாக அவர்களுக்கு பெரிய நிவாரணம் கிடைக்கும்.
முன்பு இந்த வகையில் பிஎஃப்-இல் இருந்து பணம் எடுக்க 30% டிடிஎஸ் செலுத்த வேண்டியிருந்தது. அது இப்போது 20% ஆக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இனி சில்லறை பிரச்சனை வராது... ரிசர்வ் வங்கி கொண்டு வரும் புது திட்டம்!
பிஎஃப் கணக்கு துவங்கப்பட்டு ஐந்து வருடங்கள் ஆகாமல் இருந்து, தொகை எடுக்கப்பட்டு, பிஎஃப் கணக்கு பான் கார்டுடன் இணைக்கப்பட்டிருந்தால், TDS அதில் கழிக்கப்படாது. ஆனால் எடுக்கப்பட்ட தொகை, டாக்சபிள் இன்கம், அதாவது வரிக்கு உட்பட்ட வருமானத்தில் சேர்க்கப்படும். இந்த தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டும்.
உங்கள் பிஎஃப் இருப்பை இப்படி சரிபார்க்கவும்
- இதற்கு, நீங்கள் இபிஎஃப்ஓ-இல் பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு ஒரு செய்தியை அனுப்ப வேண்டும்.
- இதற்கு 'EPFOHO UAN' என உள்ளிட வேண்டும், அதாவது முதலில் EPFOHO மற்றும் பின்னர் UAN என டைப் செய்ய வேண்டும்.
- இந்த வசதி ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி, தமிழ், மலையாளம், குஜராத்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் பெங்காலி ஆகிய 10 மொழிகளில் கிடைக்கிறது.
- ஆங்கிலம் அல்லாத வேறு மொழியில் SMS அனுப்ப விரும்பினால், UAN ஐடிக்குப் பிறகு அந்த மொழியின் முதல் மூன்று எழுத்துக்களைச் சேர்க்கவும். உதாரணமாக, தமிழில் செய்தி அனுப்ப வேண்டும் என்றால், 'EPFOHO UAN TAM' என்று எழுத வேண்டும்.
மிஸ்டு கால் மூலம் பேலன்ஸ் செக் செய்வது எப்படி?
- பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் மிஸ்டு கால் மூலமாகவும் தங்களின் பிஎஃப் இருப்பை அறிந்து கொள்ளலாம்.
- இதற்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு, உங்கள் மொபைல் எண்ணுக்கு கணக்குத் தொகை தொடர்பான செய்தி வரும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ