பணத்தை இரட்டிப்பாக்குவது எப்படி: தபால் நிலைய திட்டங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. மத்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் தபால் அலுவலக திட்டமான "கிசான் விகாஸ் பத்ரா" வில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் சம்பாதித்த வருமானத்தை இரட்டிப்பாக்கலாம். தபால் நிலையத்தின் இந்த திட்டத்தின் கீழ், வைப்புத் தொகையை இரட்டிப்பாக்க மத்திய அரசாங்கம் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீங்கள் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய திட்டமிட்டால், நீங்கள் Kisan Vikas Bhadra திட்டத்தில் முதலீடு செய்யலாம். உண்மையில், இந்த திட்டத்தின் கீழ், தற்போது, ​​பணம் 124 மாதங்களில் இரட்டிப்பாகும் என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.


மத்திய அரசாங்கம் தனது வட்டி விகிதத்தை 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு வரை அதாவது செப்டம்பர் 30 வரை 6.9 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. எவ்வளவு காலம் பணம் இரட்டிப்பாகும் என்பது வட்டி விகிதத்தைப் பொறுத்தது. தற்போது, ​​6.9 சதவீத வட்டி விகிதம் காரணமாக, வாடிக்கையாளர்களின் பணம் சுமார் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் (Money Guaranteed) என்பது உறுதி.


ALSO READ |  தபால் நிலையத்தில் நீங்கள் முதலீடுசெய்யும் 100 ரூபாய் பெரிய நன்மையை தரும்


இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கான நிபந்தனைகள்: 
இந்த திட்டத்தில் ரூ 1000, ரூ 5000, ரூ 10,000 மற்றும் ரூ .50,000 என தங்களுக்கு ஏற்றவாறு முதலீடு செய்யும் திட்டங்கள் உள்ளன. மேலும் அதிகபட்ச முதலீடு என எந்த வரம்பும் இல்லை. இந்த திட்டத்தில் தனியாகவும் கணக்கை திறக்கலாம் அல்லது கூட்டாகவும் சேரலாம். முதலீடு செய்ய குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். முதலீட்டாளர் ஒரு இந்திய குடிமகனாக (Indian citizen) இருந்தால் மட்டுமே முதலீட்டாளர் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.


இந்த திட்டத்தில் நீங்கள் இன்று 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், 124 மாதங்களுக்குப் பிறகு உங்களுக்கு 1 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதேபோல், இந்த திட்டத்தில் இன்று 20 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 124 மாதங்களுக்குப் பிறகு உங்களுக்கு 40 லட்சம் ரூபாய் கிடைக்கும். எந்தவொரு முதலீட்டாளரும் அவர்கள் எவ்வளவு முதலீடு செய்ய விரும்புகிறார்கள் என்பதைப் பொறுத்தது.


ALSO READ |  தபால் அலுவலகத்தின் 7 சூப்பர்ஹிட் திட்டங்கள்... இதில் கிடைக்கும் நன்மைகள் என்ன?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR