சருமம் பொலிவாக, பொடுகை விரட்ட..கிச்சன் வேஸ்டை ‘இப்படி’ யூஸ் பண்ணுங்க!
Hair And Skin Care Tips : கிச்சனில் இருக்கும் சில பொருட்களை வைத்து நாம் நமது சருமத்தை பாதுகாக்க முடியும். அவை என்னன்னு தெரியுமா?
Hair And Skin Care Tips : சமைத்த பிறகு கிச்சனில் வீணான சமையல் பொருட்கள் இருப்பதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதே இல்லை. ஒரு சிலர் வெங்காய தோல், காய்கறி கழிவுகளை தங்களது செடி கொடிகளுக்கு உரமாக பயன்படுத்தினாலும், ஒரு சிலர் அவற்றை குப்பையில் தான் வீணாக கொட்டுகின்றனர். ஆனால், இதை நாம் சரியான முறையில். இதனால் நமது சருமம் பளபளப்பாக மாறுவதுடன், ஹிந்தி ஆன பொலிவையும் பெறலாம். அப்படி, நமது சருமத்திற்கு உதவும் பொருட்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
அரிசி தண்ணீர்:
சாதம் வெந்த பிறகு வடிக்கும் கஞ்சி நீரை, தலைமுடியை பளபளப்பாக்க பயன்படுத்துவோம். ஆனால், ஊற வைத்த அரிசி கூட, நம்மை அழக்காக்க உதவும். இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் வைட்டமின் சத்துகள், முகத்தில் இருக்கும் சிறு துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்க உதவும். அது மட்டுமன்றி, முடியை மென்மையாக்கவும், இதனை உபயோகிக்கலாம். எனவே, இது முடிக்கும் முகத்திற்கும் நன்மை கொடுக்கும் ஒரே பொருளாகும்.
வாழைப்பழத்தோல்:
வாழைப்பழம், உடலுக்கு சிறந்த புரதச்சத்தை கொடுக்கும் உணவுப்பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இது நம் முகத்திற்கும் பல நன்மைகளை கொடுக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் இ சத்துகள், பொட்டாசியம் சத்துகளும், ஆண்டி ஆக்ஸிடண்ட்சும், முகச்சருமத்தை மென்மையாக்க உதவும்.
இதை பயன்படுத்த நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், வாழைப்பழத்தை உரித்த பிறகு அதை தூக்கி போடாமல், அந்த தோலின் உட்புறத்தில் வெள்ளை நிறத்தில் இருக்கும் பகுதியை முகத்தில் தேய்க்க வேண்டும். இதனால், முகத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, முகத்தை ப்ரைட் ஆக்கவும், கருமையான இடங்கள் தெரியாமல் இருக்கவும் உதவும்.
உருளைக்கிழங்கு தோல்:
உருளைக்கிழங்கு தோல், ஒரு மறைக்கப்பட்ட பொக்கிஷமாகும். தயிர், பால் போல இதுவும் முகத்திற்கு நல்ல பொலிவு கொடுக்கும் விஷயங்களுள் ஒன்று. இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ், வைட்டமின்ஸ் மற்றும் மினரல் சத்துகள் அதிகமாக இருக்கின்றன. இவை, தோலாக அப்படியே இருப்பதால், இவற்றை ஃபேஸ் மாஸ்காக உபயோகித்து, முகத்தில் இருக்கும் அழுக்குகளை எடுக்கலாம். இதனால், முகப்பருக்கள் வருவதும், முகத்தில் அவ்வப்போது எரிச்சல் அல்லது அரிப்பு ஏற்படுவதும் குறையுமாம்.
மேலும் படிக்க | 1 வாரத்தில் சரும ஆரோக்கியம் மேம்பட இந்த வீட்டு வைத்தியங்கள் போதும்
தேநீர் பைகள்:
ஒரு சிலர், தேநீர் குடிக்க டீ தூளை உபயோகிக்காமல் டீ பேக்ஸை உபயோகிப்பர். இது, நமக்கு அழகான பியூட்டி பேகாகவும் உதவுகிறது. இதனை, நாம் குளிர வைத்து முகத்திற்கு உபயோகிக்கலாம். குளிர் சாதனப்பெட்டியில் இதனை சில மணி நேரங்கள் வைப்பதாலும், குளிர்ந்த நீரில் தோய்த்து இதனை உபயோகிப்பதாலும் முகத்திற்கு நன்மை பயக்கும்.
இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ், முகத்திற்கு பொலிவு கொடுக்கும். கண்களுக்கு கீழ் கருவளையம் இருப்பதை குறைக்க, கண் வீக்கம் குறைய இதனை உபயோகிக்கலாம். மேலும், தலைக்கு இதனை உபயோகிப்பதால் முடி பளபளப்பாவதுடன், பொடுகுத்தொல்லையும் குறையும்.
கெட்டுப்போன பால்:
கெட்டுப்போன பாலில் லாக்டிக் ஆசிட் இருக்கும். இதனை ஆரவைத்து முகத்தில் தேய்ப்பதால், முகத்தில் இருக்கும் அழுக்குகல் அகன்றோடுவதோடு, சருமத்தையும் பொலிவாக்கலாம். மேலும், பாலை தேன், ஓட்ஸ் ஆகியவற்றுடன் சேர்த்து ஃபேஸ் மாஸ்காக பயன்படுத்துவதால் முகம் பொலிவுறும்.
மேலும் படிக்க | சருமத்தை சாப்ட்டாக, பளபளப்பாக வைக்கணுமா... இந்த 5 ஜூஸ்களை குடிங்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ