Skin Care Tips: சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளவும், சுருக்கமின்றி எப்போதும் இளமையாக தோற்றமளிக்கவும் இந்த பானங்கள் உங்களுக்கு உதவும். இதனை அடிக்கடி அருந்துவது சரும ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.
சருமத்தை பொழிவாக வைத்திருக்க பலரும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுவார்கள். வீட்டு வைத்தியங்கள், உணவு முறை மூலமே சருமத்தை நீங்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்.
காய்கறிகள், பழங்கள் ஆகியவை உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கு பெரும் நன்மைகளை தரவல்லது.
அந்த வகையில், இயற்கையான இந்த பானங்களை குடித்தே நீங்கள் உங்களின் சருமத்தை பளபளவென வைத்துக்கொள்ளலாம். இந்த பானங்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
கீரைகள், கிரீன் ஆப்பிள் உள்ளிட்டவற்றின் ஜூஸ்களை குடிக்க வேண்டும். இதனால் குளோரோபில், ஆண்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ, சி, இ உள்ளிட்டவை இவற்றில் இருக்கும். இதனால் உங்களின் சருமம் பளபளக்கும். முகப்பருக்கள் ஏற்படாது.
தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் துளசி ஆகியவற்றை சேர்த்து ஜூஸாக குடியுங்கள். இதனாலும் உங்கள் சருமம் பளீரென ஆகும். தர்பூசணியில் லைக்கோபீன், வெள்ளரிகாயில் இருக்கும் சிலிக்கா ஆகியவை சருமத்திற்கு தேவைப்படும் கொலாஜன் என்ற புரதத்தை உடலில் அதிகரிக்கச் செய்யும். மேலும், துளிசியில் உள்ள ஆண்டிஆக்ஸிடன்ட்கள் சுற்றுச்சூழல் மாசுபாடுகளில் இருந்து சருமத்தை காக்கும்.
மாதுளை ஜூஸ்: இதில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமிண் சி, கே ஆகியவை கொலாஜனை அதிகப்படுத்தும். சருமத்தில் நீர்த்தன்மையை அதிகரிக்கச் செய்யும். இதனால் சருமம் பளபளக்கும், மிருதுவாகும்.
மஞ்சள் நீரை கலந்து குடித்தால் மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற கொலாஜனை அதிகப்படுத்தும். சருமம் சுருக்கமின்றி காண உதவும். சருமத்தில் உள்ள சிறு சிறு துளைகளை சீர்செய்து பருக்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். எப்போதும் இளமையாக தோற்றமளிக்கவும், சருமம் பொலிவாகவும் இருக்க இதை நீங்கள் குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இவை வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்கள் அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை Zee News உறுதிசெய்யவில்லை.