உருளைக்கிழங்கு தோலில் இத்தனை நன்மைகளா? உண்மை தெரிஞ்சா தூக்கிப்போட மாட்டீங்க!!

Potato Peel Benefits: பொதுவாக உருளைக்கிழங்கு சமைக்கும் போது அதன் தோலை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் உருளைக்கிழங்கு தோலில் இருக்கும் சத்துக்கள் பற்றி தெரிந்து கொண்டால் இனி இதுபோன்ற தவறை செய்ய மாட்டீர்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 25, 2023, 02:03 PM IST
  • புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்.
  • எலும்புகளை வலுவாக்கும்.
  • இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
உருளைக்கிழங்கு தோலில் இத்தனை நன்மைகளா? உண்மை தெரிஞ்சா தூக்கிப்போட மாட்டீங்க!! title=

உருளைக்கிழங்கு தோல் நன்மைகள்: உருளைக்கிழங்கு காய்கறிகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் மக்கள் அதை அனைத்து காய்கறியிலும் கலந்து சமைக்க விரும்புகிறார்கள். கறி, குழம்பு, சிப்ஸ், போண்டா, பஜ்ஜி என இதை பல வகைகளில் நாம் சமைத்து உட்கொள்கிறோம். பலர் உருளைக்கிழங்கை மிகவும் விரும்புகிறார்கள். சில உருளைக்கிழங்கு பிரியர்களால் பலமுறை கூட ஒரே நாளில் அதை உட்கொள்ள முடியும், அலுப்பே தட்டாது.

பொதுவாக உருளைக்கிழங்கு சமைக்கும் போது அதன் தோலை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் உருளைக்கிழங்கு தோலில் இருக்கும் சத்துக்கள் பற்றி தெரிந்து கொண்டால் இனி இதுபோன்ற தவறை செய்ய மாட்டீர்கள். கிரேட்டர் நோய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணரான ஆயுஷி யாதவ், உருளைக்கிழங்கு தோல் ஏன் மனித உடலுக்கு நன்மை பயக்கும் என்று கூறியுள்ளார். அதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

உருளைக்கிழங்கு தோலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன

உருளைக்கிழங்கு தோல் ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷமாக கருதப்படுகிறது. இதில் பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. இது தவிர, உருளைக்கிழங்கு தோலில் வைட்டமின் பி3க்கு பஞ்சமில்லை.

உருளைக்கிழங்கு தோலின் நன்மைகள்

1. இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

உருளைக்கிழங்கு தோல் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஏனெனில் அதில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றின் உதவியுடன் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. இப்போது, ​​இந்தியாவில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், உருளைக்கிழங்கு தோல்  பலருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க | அடிவயிற்று சதை சட்டுனு குறையுமா? காலை உணவில் இதை சாப்பிடாதீங்க

2. புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்

உருளைக்கிழங்கு தோலில் பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன, அவை சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்சிடெண்டுகள் ஆகும். இதனுடன், இந்த தோலில் குளோரோஜெனிக் அமிலம் காணப்படுகிறது. இது புற்றுநோயின் அபாயத்தை பெருமளவில் குறைக்கிறது.

3. எலும்புகளை வலுவாக்கும்

உருளைக்கிழங்கு தோலில் கால்சியம் போன்ற பல முக்கியமான தாதுக்கள் உள்ளன. இது இயற்கையாகவே எலும்புகளை வலுப்படுத்தும் வேலையை செய்கிறது. இதன் காரண்மாக எலும்பின் அடர்த்தி அதிகரிக்கிறது. 

4. பளபளப்பான நிறத்தை அளிக்கும்

உருளைக்கிழங்கில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது. இது சருமத்திற்கு இயற்கையான ப்ளீச்சிங் மற்றும் பளபளப்பை வழங்குகிறது. முகத்தில் கரு வட்டங்கள், கோடுகள் மற்றும் சுருக்கங்களைத் தடுப்பதில் உருளைக்கிழங்கு தோல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடல் எடையை எளிதாக குறைக்க உதவும் கொய்யாபழம்! இந்த முறையில் சாப்பிடுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News