வாழைப்பழத்தை தூங்கும் முன் சாப்பிடலாமா? இதனால் நல்ல தூக்கம் வருமா? உண்மையும் பொய்யும்!

Lifestyle Tips: இரவு தூங்குவதற்கு முன்  வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்குமா என்பது குறித்து இதில் விரிவாக தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Aug 29, 2024, 06:43 PM IST
  • வாழைப்பழம் ஊட்டச்சத்து நிறைந்தது.
  • இதில் மேக்னீஸியம், பொட்டாஸியம், வைட்டமிண் பி6 உள்ளது.
  • இதை இரவில் சாப்பிடுவது வழக்கமாக உள்ளது.
வாழைப்பழத்தை தூங்கும் முன் சாப்பிடலாமா? இதனால் நல்ல தூக்கம் வருமா? உண்மையும் பொய்யும்! title=

Lifestyle Tips In Tamil: இரவில் சீக்கிரமாக தூங்குவது அதாவது 10 மணிக்கு முன் தூங்குவது உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் நல்லது என பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள். காரணம், நீங்கள் அடுத்த நாள் காலையில் விரைவாக எழுந்திருக்கலாம் என்பதாலும், போதுமான தூக்கம் இருக்கும் என்பதாலும் இதனை கூறுவார்கள். அதேபோல், தூங்குவதற்கு சில மணிநேரங்கள் முன்னர், செல்போன், லேப்டாப்களை பார்க்காமல் இருக்க வேண்டும் எனவும் கூறுவார்கள். அதேபோல், இரவு உணவையும் தூங்குவதற்கு முன் இரண்டு, மூன்று மணிநேரங்கள் முன்னர் சாப்பிட வேண்டும் என்கிறார்கள். 

உடல்நலனையும், மனநலனையும் ஆரோக்கியமாக வைத்திருக்க இரவில் இத்தனை விஷயங்கள் செய்ய வேண்டியது அவசியமாகிறது. அதிலும், இரவில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது என பெரிய லிஸ்ட்டே இருக்கிறது. பொதுமக்கள் அன்றாடம் இரவில் பின்பற்றும் பல பழக்கவழக்கங்கள் உடல்நலனுக்கு கேடு என்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது, இரவில் சாப்பிட்ட உடன் தூங்குவது, இரவு தண்ணீர் குடிக்காமல் தூங்குவது உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

இரவில் வாழைப்பழம் சாப்பிடலாமா?

அந்த வகையில், இரவில் வாழைப்பழம் சாப்பிட்டு தூங்குவதை பெரியவர்கள் அனைவரும் நல்லது என கூறியிருப்பார்கள். அதாவது, பொட்டாஸியம் நிறைந்த வாழைப்பழத்தை சாப்பிட்டு தூங்கினால் உங்களின் தூக்கம் சிறப்பாக அமையும் என கூறுவார்கள். ஆனால், வாழைப்பழத்திற்கும் தூக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை என ஆய்வு ஒன்று தற்போது தெரிவித்துள்ளது. வாழைப்பழத்தை சாப்பிடுவது உங்களுக்கு தூக்கத்தை வரவழைக்காது என அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | முட்டையை இதோடு கலந்து தேய்த்தால் முடி பளபளப்பாகும் - பொலிவாகும் வறண்ட முடி..!

வாழைப்பழத்தில் பொட்டாஸியம் மட்டுமின்றி மேக்னீஸியம் மற்றும் வைட்டமிண் பி6 ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்ரன. இது உங்களின் உடலுக்கு நன்மையே ஆகும். ஆனால், ஒரே ஒரு வாழைப்பழம் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை பூர்த்தி செய்யாது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். 

உதாரணத்திற்கு, வாழைப்பழத்தில் பொட்டஸியம் அதிகம் இருக்கிறதுதான். ஆனால், உங்களின் உடலுக்கு தினுமும் தேவைப்படும் பொட்டாஸியத்தில் அளவில் வெறும் 10 சதவீதத்தைதான் ஒரு வாழைப்பழம் கொண்டிருக்கும் என்பதை நீங்கள் மனதில் வைக்க வேண்டும். 

வாழைப்பழத்தால் என்ன நன்மை?

வாழைப்பழத்தில் இருக்கும் மேக்னீஸியம் உங்களை ரிலாக்ஸாகவும், நிதானமாகவும் வைத்துக்கொள்ள உதவும். ஒரு வாழைப்பழத்தில் 30 மி.கிராம்., மேக்னீஸியம் உள்ளது. உங்களின் உடலுக்கு தினமும் 400 மி.கிராம் மேக்னீஸியம் தேவையாகும். எனவே, தேவையான மேக்னீஸியம் அளவை ஈடுகட்ட அதற்கேற்ற உணவுகளை சாப்பிடுங்கள். வைட்டமிண் பி6 உங்களின் மனநிலை சீராக்கும். உடலில் செரோடோனினையும் அதிகரிக்கும். வைட்டமிண் பி6 தினமும் 1.3 மி.கிராம் தேவைப்படுகிறது. ஒரு வாழைப்பழத்தில் 0.4 மி.கிராம் வைட்டமிண் பி6 தான் உள்ளது. இது தூக்கத்தையும் வரவழைக்கும். 

வாழைப்பழத்தில் அதிக ஊட்டச்சத்து இருக்கிறது, இது உடலுக்கு தீங்கும் இல்லை. எனவே, நீங்கள் படுக்கைக்கு முன் தயங்காமல் வாழைப்பழத்தை சாப்பிடலாம், தினமும் நீங்கள் சாப்பிடலாம். ஆனால், தூக்கத்திற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள். அதிக ரத்த சர்க்கரை அளவு கொண்டவர்கள் மட்டும் வாழைப்பழத்தை அளவோடு எடுத்துக்கொள்ளுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெறவும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | கோஹினூர் வைரம் போல் உங்களை பளபளவென மினுமினுக்க வைக்கும் மந்திர பானம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News