நடைப்பயிற்சி மேற்கொண்டால் ஆயுள் அதிகரிக்குமா..! மருத்துவர்கள் கூறுவது இதுதான்..!
நடைப்பயிற்சியினால் நம் உடலில் பல நண்மைகள் உண்டாகிறது என்பது நமக்கு தெரியும். இருந்தாலும் நம்மில் பலர் உடலுக்கு அலுப்பு தரும் என்கிற காரணத்திற்காக நடைப்பயிற்சி மேற்கொள்ளாமலேயே பழகி விட்டோம்.
நம் அன்றாட வாழ்வில் நடைப்பயிற்சி என்பது சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. பல நேரங்களில் நாம் வாகனங்களை பயன்படுத்திய எல்லா இடத்திற்கும் செல்கிறோம். இவ்வாறு செய்வதால் நம் உடலில் உழைப்பு என்பது கொஞ்சம் கூட இல்லாமல் போவதாக சில மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் பல வித நோய்கள் மனிதர்களுக்கு வருவதாகவும் சில புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.
இளம் தலைமுறையினர் பாதிப்பு..
உடல் உழைப்பு இல்லாமையுடன் சேர்த்து, சரியான உணவுமுறையை பின்பற்றாதது, சரியான உடற்பயிற்சி இல்லாதது, அதிக வேலைப்பளு, மதுப்பழக்கம் உள்ளிட்டவைகளும் பல நோய் பாதிப்புகளுக்கு காரணிகளாக அமைகின்றன. குறிப்பாக, இந்த வகையான தீய பழக்கங்களுக்கு இன்றைய இளம் தலைமுறையினரே அதிகம் அடிமையாகியுள்ளதாகவும் கவலை அளிக்கும் ஒரு தரவு சாெல்கிறது அவர்களே பெரும்பாலும் உடல்பருமன், மனஅழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.
உடற்பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள்..
ஒரு நாளைக்கு பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை நடைப்பயிற்சி மேற்கொள்வதால் மாரடைப்பு மற்றும் பிற நோய் பாதிப்புகள் தவிர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. உணவிற்கு பிறகு கண்டிப்பாக 10 நிமிடம் நடந்தாக வேண்டும் என ஆரோக்கியத்தை பேணுவோர் அறிவுருத்துகின்றனர். அவ்வாறு நடந்தால், உணவு செரிமான பிரச்சனை வராமல் தடுக்கமுடியுமாம்.
மேலும் படிக்க | இவ்வளவு நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக ஏசியில் இருக்க வேண்டாம்!
ஆயுள் அதிகரிக்குமா?
காலையில் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்வதால் நாள் முழுக்க உடல் சுறுசுறுப்பாக இறக்கும். இதை, தினசரி வழக்கமாக செய்ய வேண்டிய ஒரு செயல்களுள் ஒன்றாக கருத வேண்டுமாம். இப்படி தினசரி செய்யும் போது நீண்ட ஆயுள் மற்றும் உடல் சிறப்பான ஆரோக்கியத்துடன் வாழ உதவி செய்வதாக சில மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தினசரி நம் வாழ்வில் நடைப்பயிற்சி இல்லாத ஒரு வாழ்வை வாழ்ந்து வந்தால் இதன் விளைவாக நாட்பட்ட நோய்கள், வளர் சீதை மாற்றம் போன்றவை ஏற்படுகிறன. அதனால் தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டால் நோய் நொடி அண்டுவதை தவிர்க்கலாம். வளர் சீதை மாற்றங்களில் இருந்தும் தப்பிக்கலாம்.
குறுகிய நடைப்பயிற்சி:
நடைப்பயிற்சிகளில், குறுகிய நடைப்பயிற்சி மிகவும் முக்கியமானது. அதாவது ஒவ்வொரு முறை உணவிற்கும் பின்பு சில நிமிடம் நடைப்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது என்ன சமீப காலமாக மருத்துவர்களால் கூறப்படுகிறது. இந்த குறுகிய நேர நடைப்பயிற்சி இரத்த அழுத்தத்தின் அளவையும் சக்கரையின் அளவையும் கட்டுக்குள் வைத்துக்கொள்கிறது. இதுமட்டுமின்றி TAPE- 2 நீரழிவு நோயினை தடுக்கிறது. அதோடு உடலில் தேவையற்ற கொழுப்பு சேராமல் பார்த்துக்கொண்டு உடல் எடை குறைக்க உதவுகிறது.
வாரத்தில் 75 நிமிடம் மிதமாக அல்லது தீவிரமாக உடல் செயல்பாடுகள் நடக்கும்போது ரத்த சக்கரை, இதய நோய்களின் இருந்து உயிர் போகும் அபாயத்தை 23% தவிர்க்க முடியுமாம். நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் மட்டுமே, உடல் எடை குறைந்துவிடும் என்று யாரும் தப்புக்கணக்கு போட்டு விடாதீர்கள். உணவு முறைகளிலும் நாம் போதிய கவனம் செலுத்த வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு முன்பும் பின்பும் நாம் எத்தகைய உணவுகளை எடுத்து கொள்கிறோம் என்பதை பொறுத்து, நமது உடல் எடை குறைவதும் அதிகமாகவதும் அமைகிறது.
உடல் எடை குறைப்பில் உடற்பயிற்சி எவ்வாறு உதவுகிறது?
குறைந்த இடைவெளியில் அதிக தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம் ஆகும். உங்கள் உடல் எடை, அதன் அடர்த்தியை பொறுத்து, உடலில் உள்ள கலோரிகள் கரைவது வேறுபடும். தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் தொடர்ந்து நடந்து வந்தால், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உடல் எடையில் உங்களாலேயே காண இயலும்.
எவ்வாறு உடற்ப்பயிற்சி செய்ய வேண்டும்?
30 நிமிட நடைப்பயிற்சியாக துவங்கி, பின் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை 10 நிமிடங்கள் சேர்த்துக்கொண்டே செல்ல வேண்டும். தினமும் 1 மணிநேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகுந்த பயன் அளிக்கும். இது முதலில் கடினமானதாக தோன்றினாலும், பின் பழக்கம் ஆகிவிடும். மலைப்பகுதி, பாலைவனம் பல்வேறு வகையான தளங்களில் நடக்க பழகிக்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி இந்த நேரத்தில் தான் செய்ய வேண்டும், இந்த நேரத்தில் செய்யக் கூடாது என்ற எந்த விதிமுறையும் இல்லை.
சர்வதேச எண்டோகிரானாலஜி ஜெர்னலில் குறிப்பிட்டுள்ளபடி, நடைப்பயிற்சியை, சூரிய ஒளி அதிகம் உள்ள காலை நேரங்களிலேயே மேற்கொள்வது நல்லது. உடல் எடையை குறைக்க இந்த நேரமே உகந்தது. காலை உணவுக்கு முன்னதாக நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில், உடலில் உள்ள கலோரி பற்றாக்குறை உள்ள நிலையில், நாம் நடைப்பயிற்சியை மேற்கொள்ளும்போது, அது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பினை கரைக்க உதவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ