Health Tips: உணவு உண்ட பிறகு வாக்கிங் செய்வதால் இத்தனை நன்மைகளா?

Walking After Meal: சுவையான உணவு, சீரான உறக்கம். இதை எண்ணி மனம் மகிழாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உணவு உட்கொண்ட பிறகு சற்று களைப்பார படுத்துக்கொள்ளும் பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால் இந்த ஒரு பழக்கம் உடலில் பல நோய்களை ஏற்படுத்தக்கூடும் என்பது பலருக்குத் தெரியாது. உடலை ஃபிட்டாக வைத்திருக்க ஆரோக்கியமான உணவு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு, உடல் முழுவதும் அந்த உணவு சென்று சேர்வதும் முக்கியமாகும். நாம் உண்ணும் உணவின் செரிமானம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடப்பது நல்லது.

 

1 /5

உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடப்பதால், உடலின் செரிமான அமைப்பு நன்றாக வேலை செய்யத் தொடங்குகிறது. உணவு சாப்பிட்ட பிறகு உங்களால் 15 முதல் 20 நிமிடங்கள் நடக்க முடிந்தால், அது இன்னும் பல நன்மைகளை அளிக்கும். தற்போது கொரோனா தொற்று உள்ள நிலையில், வீட்டை விட்டு வெளியே செல்வது பாதுகாப்பானது இல்லை என்பதால், உணவு உட்கொண்ட பிறகு, மொட்டை மாடியில் அல்லது பால்கனியில் நடக்கலாம். 

2 /5

உணவை உட்கொண்டவுடன் நடப்பது செரிமான செயல்முறையை துரிதப்படுத்துகிறது, உணவு விரைவாக ஜீரணமாக உதவுகிறது. உணவுக்குப் பிறகு தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் நடப்பதால் உடல் எடை குறைகிறது. உங்களை ஃபிட்டாக வைத்திருக்க இதை விட ஒரு எளிதான வழி கிடைக்காது. உணவு சாப்பிட்ட பிறகு நடப்பதால், வாயுத்தொல்லை, மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாது. மேலும் வளர்சிதை மாற்றமும் பலப்படுத்தப்படுகிறது.

3 /5

உணவைச் சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இது நல்ல இரவு உறக்கத்துக்கு வழிவகுக்கிறது. உணவு உட்கொண்ட பிறகு தினமும் நடப்பதால், தசைகள் சரியாக வேலை செய்யும். இதன் காரணமாக உடலில் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். உணவு சாப்பிட்ட பிறகு நடப்பது இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகள் உணவுக்குப் பிறகு சிறிது நேரம் கண்டிப்பாக நடக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

4 /5

ஒவ்வொரு நாளும் நீங்கள் உணவை உட்கொண்ட பிறகு குறைந்தது 15-20 நிமிடங்களாவது நடக்க வேண்டும். உங்களுக்கு அதிக நேரம் இருந்தால், இந்த நேரத்தை அதிகரிக்கலாம். ஆனால் நீங்கள் சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள் நடந்தால்தான் பயன் இருக்கும். 

5 /5

உணவு உட்கொண்ட பிறகு நீங்கள் நடக்கும்போது மெதுவாக நடக்க வேண்டும். வேகமாக நடப்பதால் பலன் இருக்காது. சாப்பிட்ட பிறகு விறுவிறுப்பாக, வேகமாக நடப்பது செரிமான அமைப்பைக் கெடுக்கும். சாப்பிட்ட பிறகு எந்தவிதமான கடின உடற்பயிற்சியையும் செய்ய வேண்டாம்.