கொரோனா காலத்திலிருந்து வீட்டுக் கடன் விகிதங்கள் வரலாறு காணாத வகையில் குறைந்த அளவில் இருந்து வருகின்றன. ஆனால் இது எத்தனை காலத்துக்கு தொடரும் என சொல்வது கடினம். விரைவில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிசர்வ் வங்கி 2020 முதல் ரெப்போ விகிதத்தை 4 சதவீதமாக நிலையாக வைத்துள்ளது. இதுவரை ஒருமுறை கூட இது உயர்த்தப்படவில்லை. தேவையான தகுதிகள் இருந்தால், 6.40 சதவீத வீதத்தில் வீட்டுக் கடனைப் பெற முடிவதற்கு இதுவே காரணம். டஜன் கணக்கான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் 7 சதவீதத்திற்கும் குறைவான விகிதத்தில் கடன்களை வழங்குகின்றன. 


எனினும், பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், கடன்கள் இப்போது இருப்பது போல் தொடர்ந்து மலிவாக இருக்காது. இந்த ஆண்டு பாலிசி வட்டி விகிதம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் வீட்டுக் கடன்களின் விகிதங்களும், அதற்கு நாம் கட்டவேண்டிய வட்டியும் அதிகமாகும். அதன் விளைவு எப்படி இருக்கும் என காணலாம். 


வீட்டுக் கடன் எவ்வளவு உயரும்? 
நீங்கள் 6.50% வட்டி விகிதத்தில் 20 ஆண்டுகளுக்கு வீட்டுக் கடன் வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்தக் கடனின் ஒவ்வொரு ரூ.1 லட்ச அசல் தொகைக்கும் சுமார் ரூ.79,000 வட்டி செலுத்துவீர்கள். கடனுக்கான வட்டி விகிதம் 0.25% முதல் 6.75% வரை அதிகரித்தால், உங்கள் வட்டி சுமார் ரூ.82,000 ஆக உயரும். விகிதம் 7% ஆக இருந்தால், வட்டி ரூ 86,000 ஆக இருக்கும். அதாவது, வட்டி விகிதத்தில் சிறிய அதிகரிப்பு கூட வட்டியில் ஆயிரக்கணக்கான ரூபாய் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. 


1. இருப்பு பரிமாற்றம்
உங்கள் கடன் விகிதத்திற்கும் சந்தை விகிதத்திற்கும் இடையே பெரிய (0.25-0.50%) வித்தியாசம் இருக்கும்போது வீட்டுக் கடன் மறுநிதியளிப்பு அதாவது இருப்புப் பரிமாற்ற (பாலன்ஸ் டிரான்ஸ்ஃபர்) விருப்பம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. உங்கள் விகிதம் 7.50% ஆக இருந்து சந்தையில் 7%-ல் கடன் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அத்தகைய சூழ்நிலையில், இருப்பு பரிமாற்றம் பயனுள்ளதாக இருக்கும். 


உங்கள் கடனுக்கு இன்னும் 20 ஆண்டுகள் இருந்தால், ஒவ்வொரு ரூ.1 லட்சம் கடனுக்கும் சுமார் ரூ.7,400 சேமிக்கலாம். ஆனால் பாதிக்கு மேல் கடன் கால அவகாசம் இருந்தால் மட்டுமே இருப்பு பரிமாற்றம் சரியான முடிவாக இருக்கும். செயலாக்கக் கட்டணம் மற்றும் MOD கட்டணங்கள் போன்ற பரிமாற்றக் கட்டணங்களும் உள்ளன.


மேலும் படிக்க | ஊழியர்களே உஷார்: EPFO ஊதிய வரம்பில் மாற்றம், கையில் கிடைக்கும் சம்பளம் குறையக்கூடும் 


2. இஎம்ஐ-ஐ அதிகரிக்கவும்
பொதுவாக, ஒருவரது வருமானம் காலப்போக்கில் அதிகரிக்கும். ஆனால் இஎம்ஐ அப்படியே இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒருவர் தானாக முன்வந்து இஎம்ஐ-யை அதிகரிக்கலாம். கூடுதல் இஎம்ஐ, கடனின் அசல் தொகையைக் குறைக்கும். இது உங்கள் கடனை விரைவாக செலுத்த உதவும். கடன் காலம் குறைய ஆரம்பிக்கும். 


இந்த முறை சிறிது சிறிதாக முன்பணம் கட்டுவது போன்றது. உதாரணமாக, 7% வட்டியில் 20 ஆண்டுகளுக்கு ரூ.30 லட்சம் கடனுக்கான EMI சுமார் ரூ.23,000 ஆக இருக்கும். இரண்டாவது வருடத்தில் இருந்து இதை 26,000 ரூபாயாக உயர்த்தினால், 3 இஎம்ஐ-கள் குறையும். வட்டியும் ரூ.25.96 லட்சத்தில் இருந்து ரூ.25.10 லட்சமாக குறையும்.


3. முன்பணம் செலுத்துவதற்கான வசதி 
வட்டி விகிதம் அதிகரிக்கும் பட்சத்தில் நீங்கள் இஎம்ஐ-ஐ அதிகரிக்க விரும்பவில்லை என்றால், உங்களுக்கு மூன்றாவது ஒரு வசதியும் உள்ளது. நீங்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது ப்ரீ-பேமண்ட் செலுத்தி கடனின் அசல் தொகையை குறைக்கலாம். பெரும்பாலான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் இஎம்ஐ தொகையை விட குறைந்தது 1-2 மடங்கு தொகையை ப்ரீ பேமண்டாக செலுத்துவதை விரும்புகின்றன. உதாரணமாக, நீங்கள் 20 ஆண்டுகளுக்கு 7% வீதத்தில் ரூ.30 லட்சம் வீட்டுக் கடனைப் பெற்று, தொடக்கத்திலேயே ரூ.50,000 ப்ரீ-பேமண்ட் செலுத்தினால், 7 இஎம்ஐ-கள் குறைக்கப்பட்டு வட்டி 25.96 லட்சத்தில் இருந்து 24.48 லட்சமாகக் குறையும். 


மேலும் படிக்க | SBI அற்புதமான சலுகை, ஷாப்பிங் செய்து 70% தள்ளுபடி பெறுங்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR