ஆதார் பான் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கிறதா? ஆன்லைனில் எளிதாக தெரிந்து கொள்ளலாம்
ஆதார் மற்றும் பான் எண் இணைப்பு குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் எளிதாக அதனை தெரிந்து கொள்ளலாம். மார்ச் 31 ஆம் தேதி ஆதார் - பான் எண் இணைப்புக்கு கடைசி தேதி என்பதால், உங்கள் ஆதார் பான் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை ஆன்லைன் மூலம் உறுதி செய்து கொள்ளுங்கள்.
ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க அறிவுறுத்தியிருக்கும் மத்திய அரசு, மார்ச் 31 ஆம் தேதி வரை காலக்கெடு கொடுத்துள்ளது. அதன்பிறகு ஆதார் - பான் எண் இணைக்க காலவகாசம் கிடையாது. ஒருவேளை நீங்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குப் பிறகு பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஏற்கனவே பலமுறை காலவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், இதன்பிறகு இந்த காலவகாசம் நீடிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்த பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கிறது. அதாவது, பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டிருக்கிறதா? என எப்படி உறுதி செய்வது என கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்கள் வீட்டில் இருந்தபடியே இதனை ஆன்லைன் வழியாக உறுதி செய்து கொள்ள முடியும். இதற்காக வெறும் 10 நிமிடங்கள் ஒதுக்கி கீழே கொடுக்கப்படிருக்கும் வழிமுறைகளின்படி செய்தால், ஆதார் எண் மற்றும் பான் கார்டு இணைப்பை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | Pan - Aadhar Link: மார்ச் கடைசிக்குள் செய்ய வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்
பான் கார்டுடன் ஆதார் இணைக்கவில்லை என்றால் என்ன? என கேட்பவர்களின் பான் எண் செல்லாததாகிவிடும். பான் எண் இல்லை என்றால் வருமான வரி செலுத்துவோர் ITR-ஐ நிரப்ப முடியாது. PAN எண் இல்லாமல் வங்கியில் 50,000 ரூபாய்க்குமேல் டெபாசிட் செய்ய முடியாது.
உங்கள் பான் கார்டு செல்லுபடியாகுமா? என்பதை இப்படி தெரிந்து கொள்ளுங்கள்
* முதலில் வருமான வரி இ-ஃபைலிங் இணையதளம் incometaxindiaefiling.gov.in/home-க்குச் செல்லவும்.
* இதற்குப் பிறகு Verify Your PAN Details என்பதைக் கிளிக் செய்யவும்.
* இப்போது உங்கள் PAN எண்ணை உள்ளிடவும்.
* அதன் பிறகு, பான் கார்டில் எழுதப்பட்டபடி உங்கள் முழு பெயரை உள்ளிடவும்.
* அந்த பக்கத்தில் தோன்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
* இதற்குப் பிறகு, உங்கள் PAN செயலில் உள்ளதா இல்லையா? என்பதைத் தெரிவிக்கும் ஒரு செய்தியை இணையதளத்தில் காண்பீர்கள்.
பான் கார்டு - ஆதார் இணைப்பை உறுதி செய்வது எப்படி?
* முதலில் incometax.gov.in-க்குச் செல்லவும்.
* 'ஆதார் நிலையை இணைக்கவும்' என்ற விருப்பத்தைக் கண்டுபிடித்து கிளிக் செய்யவும்.
* திறக்கும் புதிய விண்டோவில் View Link ஆதார் Status என்பதை கிளிக் செய்யவும்.
* ஆதார்-பான் இணைக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு ஒரு செய்தி காட்டப்படும்.
* ஆதார் மற்றும் பான் இணைக்கப்படவில்லை என்றால், அவற்றையும் தெரிந்து கொள்ளலாம்
பான் - ஆதாருடன் இணைப்பது எப்படி?
வருமான வரி இணையதளத்திற்குச் சென்று ஆதார் மற்றும் பான் எண்ணை 'லிங்க் ஆதார்' வசதியுடன் இணைக்கலாம். இதற்காக வருமான வரித்துறையின் இணையதளத்தில் லாக்-இன் ஐடியை உருவாக்க வேண்டும். அதன் பிறகு, அங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, நீங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கலாம்.
மேலும் படிக்க | PAN Aadhar Link: இவர்களெல்லாம் பான் கார்டு ஆதாருடன் இணைக்க தேவையில்லை...!
மேலும் படிக்க | ஆதார்-பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிவது?
மேலும் படிக்க | ஆதார் - பான் இணைப்பு: லட்சக்கணக்கானோருக்கு விலக்கு அளித்தது மத்திய அரசு..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ