நம்பர் பிளேட் மூலம் வாகன உரிமையாளர் விவரங்களை சரிபார்ப்பது எப்படி?
இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் என எந்த ஒரு வாகனமாக இருந்தாலும் பதிவு செய்யப்பட்டு இருந்தால் அதன் விவரங்களை எளிதாக பெற முடியும்.
ஒரு வாகன உரிமையாளரின் விவரங்களை தெரிந்து கொள்ள நினைத்தாலும் அல்லது செகண்ட் ஹேண்டில் வாகனத்தை வாங்க நினைத்தாலும் அந்த குறிப்பிட்ட வாகனத்தின் நம்பர் பிளேட் மூலம் விவரங்களைப் பெறுவது இப்போது எளிதாகிவிட்டது. இது தவிர ஏதேனும் விபத்து ஏற்பட்டால், காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்ய வாகன உரிமையாளரின் சரியான விவரங்கள் கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியம். விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் நம்பர் பிளேட் இருந்தால் போதும், அந்த வாகனத்தின் உரிமையாளரின் விவரங்களை எளிதாக பெற்று விடலாம்.
மேலும் படிக்க | CUR: கடன் அட்டையில் கடன் வரம்பை அதிகரிப்பது நல்லதா? கிரெடிட் கார்டு டிப்ஸ்!
மேலும் செகண்ட் ஹேண்ட் வாகனத்தை வாங்கும் போது, தற்போதைய வாகன உரிமையாளரின் விவரங்களைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். உங்களுக்கு வாகன உரிமையாளர் யார் என்று தெரியாத பட்சத்தில் வாகனத்தின் நம்பர் பிளேட்டை மூலம் வாகன உரிமையாளர் விவரங்களை சரிபார்க்க முடியும். இது வாகன விவரங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை பொது மக்களுக்கு உறுதி செய்கிறது. அரசின் பரிவாஹனில் நம்பர் பிளேட் மூலம் வாகன உரிமையாளர் விவரங்களை சரிபார்க்க முடியும். பரிவஹன் இணையதளத்தில் வாகனப் பதிவு எண்ணை பயன்படுத்தி வாகன உரிமையாளர் விவரங்களை எப்படி கண்டுபிடிப்பது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
வாகன உரிமையாளரின் விவரங்களை தெரிந்து கொள்ள முதலில் அரசின் அதிகாரப்பூர்வ பரிவாஹன் இணையதளத்திற்குச் செல்லவும். பிறகு அதில் 'தகவல் சேவைகள்' என்பதைக் கிளிக் செய்து, 'உங்கள் வாகன விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்' என்பதைத் தேர்வு செய்யுங்கள். இந்த இணையதளத்தில் நீங்கள் ஏற்கனவே பயனராக இருந்தால், உங்கள் விவரங்களை உள்ளிடலாம் அல்லது நீங்கள் புதிய பயனராக இருந்தால் புதிய கணக்கை உருவாக்கவும். பிறகு வாகனப் பதிவு எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, 'VAHAN Search' என்பதைக் கிளிக் செய்யவும்.
அனைத்து விவரங்களையும் சரியாக உள்ளிட்ட பிறகு வாகன உரிமையாளரைப் பற்றிய சரியான தகவல் மற்றும் பிற வாகன விவரங்கள் உங்கள் முன் திரையில் தோன்றும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், பரிவஹன் இணையதளத்தில் நம்பர் பிளேட்டைப் பயன்படுத்தி வாகன உரிமையாளர் விவரங்களை எளிதாகச் பெற்று கொள்ள முடியும். வாகனங்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு சூழ்நிலைகளில் சட்டப்பூர்வ இணக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த இந்தச் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ