How To Get Rid Of Lice : சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள், அதிகமாக சிரமப்படுவது, பிள்ளைகளின் தலையில் இருக்கும் பேன்-ஈறு தொல்லையை எப்படி ஒழித்துக்கட்டுவது என்பது குறித்துதான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரின் தலைகளிலும் குடும்பம் நடத்தும் பேனின் சில்மிஷம் தாங்க முடியாத ஒன்றாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செய்யக்கூடாத தவறு:
 
ஒரே டவள், சீப்பு, தலையணை, கீழே போட்டு படுக்கும் துணி போன்றவற்றை பயன்படுத்துவது சில குடும்பத்தில் வழக்கமாக நடைபெறும் விஷயமாக இருக்கும். அவர்கள் இனி இந்தத் தவறை செய்ய வேண்டாம்.


ஒருவர் பயன்படுத்திய டவள், சீப்பு, தலையணை போன்றவை மற்றொருவர் பயன்படுத்துவதால் பேன் இருக்கும் தலைக்காரர்களின் பேன் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மூலம் சீப்பில் கண்ணுக்குத் தெரியாமல் பேன் ஓட்டிக்கொள்ளும். ஒருமுறை உங்கள் தலையில் பேன் ஏறிவிட்டால் மீண்டும் அதை விரட்டுவது கடினம். அதனால், அது வராமல் பார்த்துக்கொள்வது நல்லதாகும். 


பேன் முட்டை:


பேன் முட்டை காதுக்குப் பின் மற்றும் கழுத்துக்குகீழ் அதிகளவில் இருக்கும். பேனை தலையில் தேடி அதைக்கண்டுப்பிடிப்பதற்குள் நாம் சோர்ந்துவிடுவோம்.


தலையில் பயன்படுத்தும் நாம் என்னென்ன பொருட்கள் உபயோகிக்கிறோம் என்பதை பொறுத்தும், பேன் உருவாகும். இந்தப் பேனுக்கு ஒரு முடிவே இல்லையா என்று கேட்கும் பேன் காரர்களுக்கு மருத்துவர்கள் கூறும் சில அறிவுரைகள் இதோ…


மேலும் படிக்க | பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகை, 6 லட்சம் பெறுவது 


  • தலையில் அதிகம் வாசனைத் திரவியமுள்ள பொருட்களைப் பயன்படுதுவதை தவிர்க்க வேண்டும்.

  • அதிக வாசனை இருக்கும் ஷாம்பு, கண்டிஷனர், எண்ணெய் போன்ற தலையில் பயன்படுத்தும் பொருட்களை, மருத்துவர்கள் குறிப்பிட்டு கூறுகின்றனர்.

  • ஒரே டவள், சீப்பு, தலையணை, படுக்கும் துணி இவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு  எச்சரிக்கை:

  • ஒவ்வொரு குடும்பத்தில் ஒவ்வொரு விதமான தலை வைத்திருக்கும் மனிதர்கள் இருக்கின்றனர். அவர்களுக்குத் தான் இது…

  • குழந்தைகளுக்கெனத் தனி டவள், சீப்பு, தலையணை மற்றும் பெற்றோர்களுக்குத் தனியாகவும் பயன்படுத்த வேண்டும்.

  • தலையில் பேன், ஈறு பிரச்சனைகள்,  சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை யாராக இருந்தாலும் எரிச்சலாக இருக்கும். இதனால் அடிக்கடி நாம் தலையைச் சொரிந்துக்கொண்டே இருக்கின்றோம். இது, பிறருக்கு நாம் அசுத்தமாக இருக்கிறோமாே என்ற எண்ணத்தை கொடுத்து விடலாம்.


பேன், ஈறை ஒழித்துக்கட்ட எளியமுறை:


  • பூண்டு இது நம் வீட்டில் அதிகமாக இருக்கும் ஒரு சமையல் பொருளாகும். இதை வைத்து, நாம் பேன்-ஈறையும் ஒழித்துக்கட்டலாம். 

  • பூண்டை வைத்து என்ன செய்ய வேண்டும்? 

  • ஒரு பல் பூண்டை எடுத்துக்கொண்டு, நன்றாக அரைக்கவும். பிறகு அதில் இருக்கும் சாற்றை, முடியின் வேர் பகுதியிலிருந்து  5 மில்லிமீட்டருக்கு தள்ளித் தலைமுடி முழுவதும் அப்ளை செய்யவும். 10 முதல் 20 நிமிடம்வரை தலையில் ஊற வைக்க வேண்டும். 

  • பூண்டை, தலையில் தேய்க்கும் போது எரிச்சலாக இருக்கும். இதனால் பயம் கொள்ளத் தேவையில்லை. தலையில் பூண்டை தேய்ப்பதன் நோக்கமே பேனை ஒழித்துக்கட்டதான். இது பேனுக்கு எரிச்சல் கொடுக்கும். அதனால் பேன் மயக்கமடைந்து, இறந்து விடும்.

  • பூண்டை தேய்த்து ஊர வைத்தப்பின் தலையை நன்றாக தண்ணீர் வைத்து வாஷ் பண்ணவும். தலையை நன்றாக அலசிய பின் டவளால் துவட்டவும். நாம் தலைத்துவட்டிய டவளை பார்த்தால் தெரியும். எவ்வளவு பேன் மயங்கிவிழுந்து டவளில் ஒட்டிக்கொண்டியிருக்கும் என்று.

  • தேங்காய் எண்ணெய் சூடுப்படுத்திக்கொண்டு அதில் கற்றாழை மற்றும் வேப்பிலையை சேர்த்து மிக்ஸ் செய்து பிறகு அதைத் முடியில் தடவவும். 10-20 நிமிடம்வரை ஊரவைக்கவும். பிறகு தண்ணீரால் வாஷ் செய்யவும். 

  • இது தலையில் இருக்கும் பேனை வேப்பிலை, கற்றாழை இந்த இரண்டு நாற்றத்தால் பேன் உடனடியாக மயங்கிவிழுந்து செத்துவிடும். 

  • ஒரு மனிதன் தன்னுடைய தலையை நல்ல முறையில் பராமரித்தால் நிச்சயம் பேன், ஈறு இரண்டும் நமக்கு குட்-பை சொல்லிவிடும்.


மேலும் படிக்க | ஒரு நாளைக்கு 3 முதல் 5 கப் காபி குடித்தால் பிபி, சுகர், கல்லீரல் பிரச்சனை வராது - அப்பல்லோ மருத்துவர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ