ஒரு நாளைக்கு 3 முதல் 5 கப் காபி குடித்தால் பிபி, சுகர், கல்லீரல் பிரச்சனை வராது - அப்பல்லோ மருத்துவர்

Coffee health benefits : ஒரு நாளைக்கு மூன்று முதல் 5 கப் காபி குடித்தால் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் கல்லீரல் பிரச்சனைகள் வராது என அப்பல்லோ மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 3, 2024, 10:15 AM IST
  • காபி தினமும் 3 முதல் 5 கப் குடிக்கலாம்
  • நீரிழிவு, இதய நோய் ஆபத்துகள் வராது
  • அப்பல்லோ மருத்துவர் சொன்ன தகவல்
ஒரு நாளைக்கு 3 முதல் 5 கப் காபி குடித்தால் பிபி, சுகர், கல்லீரல் பிரச்சனை வராது - அப்பல்லோ மருத்துவர் title=

கல்லீரல் நோய், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவை மக்களிடையே அதிகம் காணப்படும் உடலியல் ஆரோக்கிய பிரச்சனைகளாக இருக்கும் நிலையில், இதனை காபி குடித்தால் வராமல் தடுக்கலாம் என நரம்பியல் மருத்துவர் சுதிர்குமார் தெரிவித்துள்ளார். ஹைதராபாத் இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றும் நரம்பியல் மருத்துவர் சுதிர்குமார் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இப்படியான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். மேலும், காபியின் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும்போது இந்த தகவலையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். 

காபி பல ஆரோக்கிய நன்மைகளை அளிப்பதாக அறியப்பட்டாலும், சர்க்கரை இல்லாமல் மற்றும் குறைந்த பாலுடன் இதனை குடிக்கலாம் என அவர் வலியுறுத்தியுள்ளார். காபியின் நன்மைகளை அவர் குறிப்பிடும்போது, மிகவும் குறிப்பிடத்தக்க நன்மைகளாக டைப் 2 நீரிழிவு, கரோனரி தமனி நோய், பக்கவாதம், கொழுப்பு கல்லீரல், உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட சிறுநீரக நோய், மனச்சோர்வு மற்றும் சில புற்றுநோய்களுக்கான ஆபத்தை குறைக்கும் ஆற்றல் காபியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். காபி குடிப்பதால் ஆயுட்காலம் அதிகரிக்கும் என்றும் மருத்துவர் சுதிர் குமார் கூறியுள்ளார். ஒரு நாளைக்கு 3-5 கப் காபி பாதுகாப்பானதாகவும், ஆரோக்கியமானதாகவும் கருதப்படுகிறது. காபியில் சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்கவும், என்று கூறியுள்ளார் அவர்.

மேலும் படிக்க | காபி தூளை உங்கள் முடிக்கு தடவினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

தூக்கமின்மை உள்ளவர்கள் "உறங்குவதற்கு முன் சுமார் 5-6 மணி நேரம் காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்" என்றும் டாக்டர் சுதிர்குமார் அறிவுறுத்தியுள்ளார். "கர்ப்பிணிப் பெண்கள் ஒரு நாளைக்கு 1-2 கப் காபி உட்கொள்ளலாம், ஆனால் அதற்கு மேல் குடிக்காதவாறு கட்டுப்படுத்த வேண்டும், கடுமையான உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கிரீன் டீக்கு மாற வேண்டும். அல்லது ஒரு நாளைக்கு 1 கப் காபி மட்டும் குடித்துக் கொள்ளலாம் எனவும் டாக்டர் சுதிர்குமார் கூறியுள்ளார்.

அதிக சாதாரண இரத்த அழுத்தம் மற்றும் தரம் 1 உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு காபி பாதுகாப்பானது என கூறியுள்ளார். உயர் இரத்த அழுத்தத்திற்கு எதிரான ஊட்டச்சத்துக்கள் அதாவது, வைட்டமின் ஈ, நியாசின், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் மற்றும் காபியில் உள்ள பாலிபினால்கள் ஆகியவை உயர் இரத்த அழுத்தத்தின் அதிக ஆபத்துடன் காபி தொடர்புடையதாக இருக்கலாம் என்று நிபுணர் விளக்கியுள்ளார். கடுமையான உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் காபியை விட கிரீன் டீயை விரும்பலாம், சுதிர் குமார் பரிந்துரைத்துள்ளார். 

பார்கின்சன் மற்றும் அல்சைமர் நோய்கள் உட்பட காபியின் ஆரோக்கிய நன்மைகளை பல ஆராய்ச்சிகள் ஆதரித்துள்ளன. நரம்பியல் இதழின் ஏப்ரல் இதழில் ஆன்லைனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், அதிக காபி நுகர்வோருக்கு பார்கின்சன் நோய் வருவதற்கான ஆபத்து குடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது. 37 சதவீதம் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பாத வெடிப்பு தொல்லை இனி இல்லை! ‘இதை’ செய்தால் அழகான பாதம் பெறலாம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News