மனிதனின் மூளையே வித்தியாசமானது. முக்கியமான விஷயங்களை முக்கியமான நேரத்தில் ஞாபகப்படுத்த முடியாத நமது மூளையால் 10 வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயத்தை அக்கு  அக்காக புட்டு வைக்க முடியும். சாவி எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வந்தோமா இல்லையா, வீட்டை பூட்டினோமா இல்லையா, போன்ற கேள்விகள் நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கும். இதற்கு காரணம் அவ்வப்போது நாம் சிறிய சிறிய விஷயங்களை கூட மறந்து போவதுதான்.  ஆனால் முக்கியமான விஷயங்களை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள சில வழிகளில் இருக்கின்ற. அவை,  என்ன தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கவனம்: 


ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்வதற்கு கவனம் மிகவும் முக்கியமாகும். இப்போது நீங்கள் ஒரு மீட்டிங்கில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால், அதில் பேசப்படும் விஷயங்கள் முக்கியமானதாக இருக்கலாம். அப்போது நீங்கள் அதிக கவனம் செலுத்தவில்லை என்றால் அந்த விஷயம் எதுவும் உங்கள் கவனத்தில் இருக்காது. என்னை விழும் இருக்காது. எனவே, ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள கவனம் செலுத்த வேண்டிய அவசியம். 


குறியீடுகள்:


ஒரு விஷயத்தை குறியீடுகள் வைத்தும் நாம் நினைவில் வைத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, உங்களுக்கு 30ஆம் தேதி ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கிறது என்று கூறியிருந்தால், அந்த தேதியை மனதில் வைத்து அதனுடன் ஏதேனும் முக்கியமான நபரை சந்திப்பது போல நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இது போன்ற குறியீட்டினால், உங்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும். 


பாடல்: 


இது மாணவர்களுக்கு உதவும் ஒரு முக்கியமான நினைவு திறன் பயிற்சி ஆகும். ஏதேனும் ஒரு செய்யுளை அல்லது கேள்விக்கான பதிலை நினைவில் கொள்ள, அதை பாடலாக மாற்றிக் கொள்ளலாம். இதனால், பல விஷயங்கள் பல நாட்களுக்கு மறக்காமல் இருக்கும். சிறுவயதில் நாம் எப்போதும் கேட்ட பாடல் கூட நமக்கு இப்போதும் ஞாபகம் இருப்பது இதற்கு ஒரு உதாரணம். 


ரைமிங் வார்த்தைகள்:


ஒரு முக்கியமான வாக்கியத்தை அல்லது பெயரை ஞாபகம் வைத்துக்கொள்ள அதை ரைமிங்காக வேறு ஏதேனும் ஒரு வார்த்தையுடன் சேர்த்துக் கொள்ளலாம். இது ஆங்கிலமாக இருந்தாலும் சரி தமிழக இருந்தாலும் சரி ரைமிங் வார்த்தைகள் அனைத்திலும் இருக்கும். எனவே நமது நினைவு திறனுக்காக இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். 


மேலும் படிக்க | இந்த 7 விஷயங்களை கவனிச்சீங்கங்கனா, காதலரா இருந்தாலும் பிரிந்துவிடுங்கள்..!


நினைவுகளுக்கான வீடு:


உங்களது நினைவாற்றலை இன்னும் பெருக்கிக் கொள்ள, முக்கியமாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஒரு பெட்டியில் இருப்பது போலவோ அல்லது ஒரு வீட்டில் இருப்பது போலவோ நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம். அது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்துவிடுமாக இருப்பது மிகவும் நன்றி. உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு பொருளில் நினைவை ஸ்டோர் செய்து வைப்பது போல கற்பனையை செய்ய வேண்டும். 


எழுதி வைப்பது: 


நாம் மொபைலில் அல்லது லேப்டாப்பில் டைப் செய்வது மிகவும் எளிமையான விஷயமாக தோன்றினாலும் நாம் கைப்பட ஒரு வாக்கியத்தையோ அல்லது முக்கியமான விஷயங்களை எழுதினால் அது நினைவில் ஓரளவிற்கு நிற்கும் என்று கூறப்படுகிறது. இது, மிகவும் பயனுள்ள முயற்சியாக இருப்பதாகவும் பலர் கூறுகின்றனர். 


காட்சி இணைப்பு:


ஒரு விஷயத்தை, கவனமாக நினைவில் வைத்துக்கொள்ள, அதனுடன் காட்சி இணைப்பை வைத்து கற்பனை செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, உங்களுக்கு நெருக்கமான நபருக்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் திருமணம் என்றால், அந்த திருமணத்திற்கு அந்த தேதியில் சென்று வருவது போல காட்சிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் அந்த தேதியும் மறக்காது, அந்த நபரும் மறக்க மாட்டார்.


மேலும் படிக்க | தினமும் இரவு 10 மணிக்கே தூங்கினால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ