தினமும் இரவு 10 மணிக்கே தூங்கினால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்?

Sleep Benefits: இரவு 10 மணி அல்லது அதற்கு முன்பு தூங்குவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

1 /6

தினசரி வாழ்க்கை முறையில் ஒரு மனிதனுக்கு தூக்கம் மிக முக்கியமானது. வேலை, குடும்பம் போன்ற பல்வேறு காரணங்களால் தூங்கும் நேரம் மாறுபடுகிறது.   

2 /6

இரவு சீக்கிரம் தூங்குவதால் இதய ஆரோக்கியம், மன ஆரோக்கியம் ஆகியவை மேம்படும். அதே சமயத்தில் தூக்கமின்மை காரணமாக மனசோர்வு, இதய நோய் போன்ற பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.  

3 /6

சமீபத்திய ஆய்வில் இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் தூங்க செல்வதன் மூலம் இதயம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை குறைக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.  

4 /6

தினசரி சீக்கிரம் தூங்கும் பழக்கத்தை பின்பற்றினால் அதிகாலை எழும்போது சுறுசுறுப்பாக இருக்க முடியும். அதே சமயம் உடலில் உள்ள ஹார்மோன்களும் சமச்சீராக இருக்கும்.  

5 /6

இரவு சீக்கிரம் தூங்கும் போது உடலுக்கு போதுமான ஓய்வு கிடைக்கிறது. இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்த முடியும்.  

6 /6

குழந்தைகள் இரவில் சீக்கிரம் தூங்கும் போது மறுநாள் பள்ளியில் சிறப்பாக செயல்பட முடியும். மேலும் நாள் முழுவதும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.