Indian Railways: நாம் அனைவரும் அவ்வப்போது ரயில்களில் பயணிக்கிறோம். ரயில் பயணத்திற்காக சிலர் ஆன்லைனிலும், சிலர் ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு கவுண்டர்களிலும் டிக்கெட்டை பெறுகிறோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரயில்வே முன்பதிவு கவுண்டரில் (Railway Booking Counter) இருந்து டிக்கெட் எடுக்கப் போகும் பயணிகள், சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும், இல்லையெனில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். 


முன்பதிவு கவுண்டரில் இருந்து பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது பயணிகள் செல்ல உள்ள இடத்தின் முகவரி (destination address) மற்றும் பின்கோடை உள்ளிடுவதை இந்திய ரயில்வே கட்டாயமாக்கியுள்ளது, பயணிகள் அவ்வாறு செய்யாவிட்டால் டிக்கெட் வழங்கப்படாது. ஆகையால் பயணிகள் டிக்கெட் வாங்க கவுண்டருக்கு செல்லும் முன், முகவரி மற்றும் பின்கோடை தயாராக வைத்திருக்க வேண்டும்.


முன்பதிவு கவுண்டரில் இருந்து டிக்கெட் வாங்கும் விதிகள்
இந்த விதி இந்திய ரயில்வேயால் கடந்த ஆண்டு கட்டாயமாக்கப்பட்டது, தொற்றுநோய்களின் இந்த காலத்தில் மக்களுடம் தொடர்பு கொள்ள இது உதவும். 


ALSO READ: Indian Railways: ரயில் பயணத்தில் பயணிகள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விதிகள்!! 


முன்னதாக, கொரோனா தொற்றுநோய் காரணமாக, மார்ச் 2020 முதல் ரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது. இருப்பினும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல அரசு சிறப்பு ரயில்களை இயக்கியது. இதற்காக, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளில் பயணிகள் முழுமையான முகவரி மற்றும் பின் கோடை வழங்க வேண்டும் என்பதை ரயில்வே கட்டாயமாக்கியது. கொரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ள நிலையிலும், இந்த விதி தொடர்ந்து செயலாக்கத்தில் உள்ளது. இருப்பினும், பின்னர் முன்பதிவு கவுண்டரில் வாங்கும் டிக்கெட்டுக்கு பின் கோட் கட்டயம் என்ற விதியில் இந்திய ரயில்வே (Indian Railway) நிவாரணம் அளித்தது.


சமீபத்திய அறிக்கையின்படி, தன்பாத் ரயில் நிலையத்தின் முன்பதிவு கவுண்டரில் ஒரு பெரிய மக்கள் கூட்டம் காணப்பட்டது, அங்கு கூடியிருந்த மக்களிக் பெரும்பாலானோர் படைப்பறிவில்லாதாவ்ர்கள் என்பதும் அவர்களுக்கு தங்கள் பின்கோட் பற்றி தெரியவில்லை என்பதும் தெரிய வந்தது. இப்படிப்பட்ட சிக்கல்களைத் தவிர்க்க, ரயில்வே ஏற்கனவே பின்கோட் கட்டாயம் என்ற விதியை மாற்றி இருந்தாலும், தன்பாத் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் பின்கோட் கேட்கப்பட்டது தெரியவந்தது.


இந்த காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டது


ஒரு பயணிக்கு கொரோனா தொற்று (Coronavirus) இருப்பது தெரியப்பட்டால், அவரை எளிதாக கண்டறியவே இத்தகைய முடிவு ரயில்வேயால் எடுக்கப்பட்டது, இருப்பினும், இதற்கு முன்னர், டிக்கெட் முன்பதிவு முறையில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது பயணிகள் முழு முகவரியை உள்ளிடுவது கட்டாயமாக இருக்கவில்லை. முன்னதாக, முகவரிக்கு பதிலாக அப்பகுதியின் பெயரையும் மாவட்டத்தின் பெயரையும் நிரப்புவது மட்டுமே போதுமானதாக இருந்தது.


ALSO READ: Indian Railways: டிக்கெட் புக் செய்கையில் நினைவில் கொள்ள வேண்டிய புதிய குறியீடுகள்