புதுடெல்லி: ஆதார் அடிப்படையிலான உடனடி PAN ஒதுக்கீடு சேவை உங்களுக்கு உடனடியாக PAN கார்டைப் பெற்றுத் தருகிறது. இதற்கு நீங்கள் UIDAI வழங்கிய ஆதார் எண்ணை (Aadhaar Number) வழங்க வேண்டும். இது வேறு எந்த PAN-னுடனும் இணைக்கப்பட்டிருக்கக் கூடாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த ஆதார் எண்ணின் e-KYC UIDAI-உடன் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. வருமான வரி தரவுத்தளத்தில் e KYC தரவின் சரியான செயல்முறைக்குப் பிறகு, நீங்கள் PAN அட்டையைப் பெறுவீர்கள்.


ஆதார் e-KYC மூலம் உடனடி PAN-க்கு யார் விண்ணப்பிக்க முடியும்?


UIDAI-யிலிருந்து Aadhaar எண்ணைப் பெற்று, தங்கள் மொபைல் எண்ணை ஆதாருடன் பதிவு செய்தவர்கள் உடனடி PAN-க்கு விண்ணப்பிக்கலாம்.


இருப்பினும் சில நேரங்களில் உங்கள் ஆதார் அங்கீகாரம் நிராகரிக்கப்படலாம். e-KYC-யின் போது உங்கள் Aadhaar அங்கீகாரம் நிராகரிக்கப்பட்டால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கே காணலாம்:


தவறான OTP காரணமாக Aadhaar அங்கீகாரம் நிராகரிக்கப்படலாம். சரியான OTP ஐ உள்ளிட்டு இந்த சிக்கலை தீர்க்க முடியும். சரியான OTP-ஐ உள்ளிட்டும் அது நிராகரிக்கப்பட்டால், நீங்கள் UIDAI ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.


ALSO READ: Tax Alert: வங்கிக் கணக்கில் விவரிக்கப்படாத தொகை இருந்தால் 83% வரி கட்ட நேரிடலாம்!!


e-KYC மூலம் விண்ணப்பிக்க ஏதேனும் கட்டாயத் தேவை உள்ளதா?


உங்கள் மொபைல் எண் ஆதார் தரவுத்தளத்தில் UIDAI உடன் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.


வருமான வரித் துறையால் வழங்கப்படும் நிரந்தர கணக்கு எண் (PAN) மிக முக்கியமான நிதி ஆவணமாகும். லேமினேட் செய்யப்பட்ட இந்த பிளாஸ்டிக் அட்டை பிரபலமாக PAN அட்டை என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நபருக்கும் மொத்த விற்பனை, விற்றுமுதல் அல்லது வரவு செலவு ரசீதுகளுடன் ஒரு வணிகமோ அல்லது தொழிலோ இருக்கும். இப்படிப்பட்ட தொழில் அல்லது வருமானம் கொண்டவர்களது வருமானம் முந்தைய ஆண்டில் ரூ .5 லட்சத்தை தாண்டக்கூடிய அளவில் இருந்தால் அவர்கள் PAN அட்டை பெற வேண்டும். கூடுதலாக, PAN எண்ணை மேற்கோளிடுவது கட்டாயமாக இருக்கும் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்களும் கண்டிப்பாக Pan கார்டை வைத்திருக்க வேண்டும்.


ALSO READ: SBI: OTP அடிப்படையில் ATM-ல் பணம் எடுக்கும் முறையில் இன்று முதல் பெரிய மாற்றம்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR