Tax Alert: வங்கிக் கணக்கில் விவரிக்கப்படாத தொகை இருந்தால் 83% வரி கட்ட நேரிடலாம்!!

ஒருவரிடம் பணம், தங்கம், நகைகள் அல்லது பிற மதிப்புமிக்க பொருட்களின் உரிமை இருந்து, அது வந்ததற்கான பதிவு அந்த நபரிடம் இல்லை என்றாலும், அது குறித்து அவரால் எந்த விளக்கமும் அளிக்க முடியவில்லை என்றாலும் அவர் சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 20, 2020, 07:46 PM IST
  • விவரிக்கப்படாத தொகைக்கு 83.25 சதவீதம் என்ற அதிகபட்ச விகிதத்தில் வரி விதிக்கப்படுகிறது.
  • பண மதிப்பிழப்பின் போது பல வரி செலுத்துவோர் வங்கிக் கணக்குகளில் பெரும் தொகையை டெபாசிட் செய்தனர்.
  • அத்தகைய நபர்களுக்காக வருமான வரித்துறை இத்திட்டத்தைக் கொண்டு வந்தது.
Tax Alert: வங்கிக் கணக்கில் விவரிக்கப்படாத தொகை இருந்தால் 83% வரி கட்ட நேரிடலாம்!! title=

கடந்த ஆண்டு உங்கள் வங்கிக் கணக்கில் ஒரு பெரிய தொகை கிடைத்து, அதற்கான மூலத்தை உங்களால் சொல்ல முடியாமல் போனால், நீங்கள் இதற்கு அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும்.

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 69 ஏ (Section 69A of Income Tax Act) இன் கீழ், ஒருவரிடம் பணம், தங்கம், நகைகள் அல்லது பிற மதிப்புமிக்க பொருட்களின் உரிமை இருந்து, அது வந்ததற்கான பதிவு அந்த நபரிடம் இல்லை என்றாலும், அது குறித்து அவரால் எந்த விளக்கமும் அளிக்க முடியவில்லை என்றாலும் அவர் சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடலாம். அது மட்டுமல்லாமல், வருமான வரி (Income Tax) மதிப்பீட்டு அதிகாரி உங்கள் சொத்து தொடர்பான ஏதாவது கேள்வியில் திருப்தி அடையவில்லை என்றால், அந்த தொகை வருமானமாகக் கருதப்படும், மேலும் அதற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும்.

விவரிக்கப்படாத தொகைக்கு 83.25 சதவீத வரி

இத்தகைய விவரிக்கப்படாத தொகைக்கு (Unexplained Amount) 83.25 சதவீதம் என்ற அதிகபட்ச விகிதத்தில் வரி விதிக்கப்படுகிறது. இந்த 83.25% இல் 60% வரி, 25% கூடுதல் கட்டணம் மற்றும் 6% அபராதம் ஆகியவை அடங்கும். இருப்பினும், பணக் கடன் ஏற்கனவே வருமானத்தில் சேர்க்கப்பட்டு வரி செலுத்தப்பட்டிருந்தால், 6% அபராதம் (Fine) விதிக்கப்படாது.

ALSO READ:SBI: OTP அடிப்படையில் ATM-ல் பணம் எடுக்கும் முறையில் இன்று முதல் பெரிய மாற்றம்!!

விளக்கம் கொடுக்கப்பட வேண்டும், இல்லையெனில் கடும் வரி விதிக்கப்படும்

இதனுடன், பணம் செலுத்துபவரின் வங்கிக் கணக்கில் பணம், தங்கம் அல்லது வேறு ஏதேனும் மதிப்புமிக்க பொருட்கள் இருந்தாலோ, அதிக பண வரவு இருந்தாலோ, இது குறித்து அவரால் விளக்கம் அளிக்க முடியாமல் போனால், அல்லது வரி அதிகாரிகள் விளக்கத்தில் திருப்தி அடையவில்லை என்றால், அவர் 83.25 சதவீத அதிக விகிதத்தில் வரி செலுத்த வேண்டி வரலாம். இத்தகைய பண நுழைவு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 68 இன் கீழ் 'விவரிக்கப்படாத பணக் கடன்' என்று அழைக்கப்படுகிறது.

பண மதிப்பிழப்பிற்குப் பிறகு இது திட்டமிடப்பட்டது

2016 ஆம் ஆண்டில் பண மதிப்பிழப்பை (Demonetisation) அரசாங்கம் அறிவித்தது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. அந்த நேரத்தில் பல வரி செலுத்துவோர் வங்கிக் கணக்குகளில் பெரும் தொகையை டெபாசிட் செய்தனர். வருமான வரித் துறை (Income Tax Department) இதைக் கவனித்தது. அத்தகைய வரி செலுத்துவோருக்கான திட்டத்தை துறை கொண்டு வந்தது. இதன் கீழ், அவர்கள் வெளியிடப்படாத வருமானத்திற்கு வரி செலுத்தி சட்ட சிக்கல்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளலாம். வரி செலுத்தும் பலர் இதைப் பயன்படுத்திக் கொண்டனர்.

ALSO READ: Credit-Debit கார்டு பயனர்களின் கவனத்திற்கு... செப்., 30 முதல் மாறும் 5 புதிய விதிகள்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News