பிக்ஸ்ட் லோன் vs ஃப்ளோடிங் லோன்: பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி இந்த மாதம் ரெப்போ விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) இந்த திடீர் முடிவை எடுத்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இந்த உயர்வு ஜூன் 2022 க்கு முன் நடக்காது என்பது அவர்களின் கணிப்பாக இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணவீக்கமே இந்த உயர்வுக்குக் காரணம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சில்லறை பணவீக்கம் மார்ச் 2022ல் 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.95 சதவீதமாக உயர்ந்தது. அதே நேரத்தில், மொத்த விலை பணவீக்கம் 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு 14.55 சதவீதத்தை எட்டியது. இதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு, இதே மாதத்தில் அதாவது மார்ச் 2021 இல் இது 7.89 சதவீதமாக இருந்தது.


கடன் செலவு அதிகரித்தது


ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு பெரும்பாலான வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. இதனால் கடன்களின் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளன. வரும் மாதங்களில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த அதிகரிப்பு பெரும்பாலான சிறிய கடன்களின் விலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். 


வீட்டுக் கடனைப் பொறுத்த வரையில், வட்டி விகித உயர்வு காரணமாக ரியல் எஸ்டேட் சந்தை ஏற்றம் அடைய வாய்ப்புள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த சந்தை நிலையாக இருந்துள்ளது. இதில் எந்த வளர்ச்சியையும் காண முடியவில்லை.


மேலும் படிக்க | PPF vs Mutual Funds: உங்களுக்கு ஏற்ற முதலீட்டு முறை எது? முழு கணக்கீடு இதோ 


ப்ராபர்டி விலை உயர்வு


கொரோனா தொற்றுநோய்க்கு முன்னும், கொரோனா தொற்று காலத்திலும் வீடு, மனை போன்ற சொத்து விலைகள் குறைந்த மட்டத்தில் இருந்தன. ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் அதிக இருப்பு இருந்தது. வாடிக்கையாளர்களும் சொத்து வாங்கும் மன நிலையில் இல்லாமல் இருந்தனர். இதன் காரணமாக, பெரும்பாலான பில்டர்கள் மீதமுள்ள வீடுகளை மிகக் குறைந்த விலைக்கு விற்கும் பணியில் ஈடுபட்டனர்.


இதன் பின்னர் ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, சிமென்ட் மற்றும் ஸ்டீல் விலை 6-8 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பில்டர்கள் வாடிக்கையாளர்களின் மீது சுமையை ஏற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.


வட்டி விகிதங்கள் இன்னும் அதிகரிக்கும்


எதிர்காலத்தில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மேலும் அதிகரிக்கலாம். இதனுடன், சந்தையில் இருந்து பணப்புழக்கத்தைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், வீட்டுக் கடன் பெறும் வாடிக்கையாளர்கள் நிலையான வட்டி விகிதத்தைத் (ஃபிக்ஸ்ட் லோன்) தேர்ந்தெடுப்பது சரியானதா அல்லது மாறுபடும் வட்டி விகிதத்தைத் (ஃப்ளோடிங் வட்டி விகிதத்தை) தேர்ந்தெடுக்க வேண்டுமா என்பதை புரிந்துகொள்வது மிகவும் முக்கியமாகும்.


ஃபிக்ஸ்ட் கடனா அல்லது ஃப்ளோடிங் கடனா? 


வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் இவை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக்குறைவே. புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்கள் இருவரும் ஃப்ளோடிங்கிற்கு பதிலாக ஃபிக்ஸ்ட் வட்டி விகிதத்தை தேர்ந்தெடுப்பதே சரியாக இருக்கும். இதன் மூலம் இஎம்ஐ குறைக்கப்படுவது மட்டுமின்றி, நீண்ட காலத்திற்குச் செலுத்த வேண்டிய வட்டித் தொகையில் கணிசமான தொகையைச் சேமிக்கவும் முடியும்.


இருப்பினும், தற்போதைய காலகட்டத்தில், நீண்ட காலத்திற்கு நிலையான விகிதத்தில் கடன் பெறுவது கடினமாக இருக்கும். பணவீக்கம் கட்டுக்குள் வந்ததும், வாடிக்கையாளர்கள் நிலையான விகிதத்தை ஃப்ளோடிங்க் விகிதமாக மாற்றலாம். அந்த நேரத்தில் இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொண்ட பிறகுதான் இதைச் செய்வது நல்லது, அதாவது, வாடிக்கையாளர் முதலில் கடன் விகித முறையை மாற்றுவதால் பயனடைகிறார்களா அல்லது இழக்கிறார்களா என்பதை ஆராய்ந்து பின்னர்தான் அதை மாற்ற வேண்டும். 


இந்த வழியில் கணக்கீட்டை புரிந்துகொள்ளலாம்


30 லட்சத்திற்கான 10 ஆண்டு மற்றும் 20 ஆண்டு கடனின் எடுத்துக்காட்டுடன் இதை நன்கு புரிந்து கொள்ளலாம். தற்போதுள்ள ரெப்போ-இணைக்கப்பட்ட ஃப்ளோடிங்க் விகிதத்தில் 10 ஆண்டுகளுக்கு வீட்டுக் கடன் வாங்குபவர்கள், 1 வருடத்திற்குப் பிறகு வட்டி விகிதங்கள் அதிகரித்தால், இஎம்ஐ ஆக கூடுதலாக ரூ.1,449 செலுத்த வேண்டும். அதேசமயம் அவர்கள் முழு கடன் காலத்திற்கும் ரூ.1,73,903 கூடுதல் வட்டி செலுத்த வேண்டும். தொற்றுநோய் காரணமாக வட்டி விகிதங்கள் குறைவாக இருந்தபோது ஃப்ளோடிங்க் விகிதங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.


20 ஆண்டு கால கடன்களுக்கான ஃப்ளோடிங்க் மற்றும் நிலையான விகிதங்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை இப்போது புரிந்துகொள்வோம். இந்தக் காலத்திற்கு, ஃப்ளோடிங்க் விகிதத்தில் 1 வருடத்திற்குப் பிறகு நீங்கள் ரூ.1,717 கூடுதல் இஎம்ஐ செலுத்த வேண்டும். அதே சமயம் வட்டியாக ரூ.4,12,110 அதிகமாக செலுத்த வேண்டும். வட்டி விகிதங்கள் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், ஃப்ளோடிங்க் வட்டிக்கு பதிலாக நிலையான விகிதத்தைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.


மேலும் படிக்க | FD-களில் அதிக வட்டி விகிதங்களை வழங்கும் டாப் 20 வங்கிகள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR